background img

புதிய வரவு

காமன்வெல்த் ஊழ‌‌ல்: ‌பிரதம‌ரிட‌ம் அறிக்கை தாக்கல்

‌ெ‌ல்‌லி‌‌யி‌ல் நடைபெ‌ற்ற காம‌‌ன்வெ‌ல்‌‌த் போ‌ட்டி‌யி‌ல் நடைபெ‌ற்ற ஊழ‌ல் கு‌றி‌த்து அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌விசாரணை குழு ‌பிரதம‌ரிட‌ம் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒளிபரப்ப உரிமை வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இது பற்றி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய, ஆடிட்டர் ஜெனரல் வி.கே.சுங்லு தலைமையிலான கமிட்டி ஒ‌ன்று அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி நட‌த்‌திய விசாரணை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 236 பக்க இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது.

அதில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒளிபரப்பு உரிமை வழங்கியதில், அய‌ல்நாட்டு நிறுவனத்துக்கு பிரசார் பாரதி, தூர்தர்ஷன் அதிகாரிகள் சலுகை காட்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts