ஐதரபாத்: விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த öதுலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பல விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நஷ்டம் தாங்க முடியாத விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் விவசாயிகளுக்கான நஷ்ட ஈடு உயர்த்தி கொடுக்க வேண்டும் என öதுலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். ஹெக்டேருக்கு ரூ. 4 ஆயிரத்து 500 வழங்கியதில் இருந்து சற்று உயர்த்தி 6 ஆயிரமாக வழங்க முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்தார். இதுவும் போதாது என கண்டனம் தெரிவித்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்தினார்.
தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார். இவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் ஏராளமான தொண்டர்கள் கூடி இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் இவரது உடல்நிதலை கவலைக்கடமானது. அங்கு வந்த போலீசார் உண்ணாவிரத போராட்டத்ததை கைவிடுமாறு கோரினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டார்.
இதனையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக அவரை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றி சென்றனர். இந்நேரத்தில் சிறிது சல, சலப்பு ஏற்பட்டது.தொடர்ந்து போலீசார் தொண்டர்களை விரட்டி அடித்தனர். பின்னர் நாயுடு நிசாம் இன்டியூட் சயின்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கும் அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுத்து விட்டார்.
இதனால் இந்த மாநிலத்தில் டென்ஷன் ஏற்பட்டுள்ளது. மேலும் இக்கட்சி சார்பில் இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளன.இதனால் முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் வைகோ : உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்.,கம்யூ., பொதுசெயலர் பிரகாஷ்காரத், பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி, ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து வாழ்த்தி பேசினர்

0 comments :
Post a Comment