Saturday, January 29, 2011

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு 8 பேர் பலி

பாகிஸ்தானில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாயினர்.


வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகர் அருகே உள்ள கைபர் என்னும் இடத்தில் வெடிப்பொருள் ஏற்றிய லாரியை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.


இதே போல் இராணுவ சோதனை சாவடி மீது எண்ணெய் நிரப்பப்பட்ட லாரி ஒன்றை மோதி தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.


இந்த இரண்டு தாக்குதலிலும் 8 பேர் பலியானதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment