Saturday, January 29, 2011

விக்ரமுக்குப் பதில் ஆர்யா

மலையாளத்தில் சந்தோஷ் சிவன் இயக்கிவரும் படம் உறுமி. ச‌ரித்திர‌க் கதையான இதில் ஜெனிலியா, பிருத்விரா‌ஜ், தபு, பிரபுதேவா என எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் விக்ரமும் நடிப்பதாக இருந்தது. தற்போது தெய்வமகன் படத்தில் பிஸியாக நடித்து வருவதால் விக்ரமால் உறுமியில் நடிக்க முடியாத நிலை. இதன் காரணமாக விக்ரமுக்குப் பதில் ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார் சந்தோஷ் சிவன்.


ச‌ரித்திரப் படமான மதராசப்பட்டினத்தில் ஆர்யா சிறப்பாக நடித்ததே இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணம். இது அவரது முதல் மலையாளப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment