Sunday, April 17, 2011

ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் நடிகர் சிரஞ்சீவி

கடப்பா : நடிகர் சிரஞ்சீவி, காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது என்று, பிரஜா ராஜ்யம் கட்சி எம்.எல்.சி., ராமச்சந்திரய்யா தெரிவித்தார். கடப்பாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: ஆந்திராவில் கடப்பா, புலிவெந்துலா இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளதால், காங்கிரசுடன் பிரஜா ராஜ்யம் கட்சியை இணைக்கும் விழா நடப்பது தாமதமாகி வருகிறது.
ஓரிரு மாதங்களில் கட்சியின் இணைப்பு விழா நடக்கும். ஆந்திராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.,க்கள் சிலரின் பதவிக் காலம் அடுத்த சில மாதங்களில் முடிகிறது. அதனால், தனது பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரசுடன் இணைக்கும் நடிகர் சிரஞ்சீவி, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படலாம். அதன்பின், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதற்கும் காங்., தலைவர் சோனியா உறுதி அளித்துள்ளார். இவ்வாறு ராமச்சந்திரய்யா கூறினார்.

No comments:

Post a Comment