Tuesday, April 12, 2011

முரசு சின்னம் பதிவாகவில்லை: பதற்றம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருசெங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், ராசிபுரம்(தனி), சேந்தமங்கலம் ஆகிய 6தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்செங்கோடு பகுதியில் சீனிவாசபாளையம் பூத் எண் 85ல் மட்டும் முரசு சின்னத்திற்கு ஓட்டளித்தால், ஓட்டு பதிவாகவில்லை என்று தே.மு.தி.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.


இதனால் அந்த பூத் எண்ணில் மட்டும் பதற்றம் நிலவுகிறது.

No comments:

Post a Comment