Thursday, May 26, 2011

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 4 மாணவ, மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர். தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.

SSLC Results Click Here

No comments:

Post a Comment