background img

புதிய வரவு

Showing posts with label Actress Trisha. Show all posts

கடந்த 10 வருடங்களாக தமிழ், தெலுங்கு என பிஸியாகவும் நம்பர் 1 நடிகையாகவும் திகழ்கிறார் திரிஷா. அவர் நேற்று தனது 29வது பிறந்ததினத்தைக் கொண்டாடினார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தெலுங்கில் நான் கதானாயகியாக நடித்து வெளிவந்துள்ள‌ தம்மு படத்தில் நான் கவர்ச்சியாக நடித்திருப்பது பற்றி கேட்கின்றனர். அது ஜாலியான படம். அதுபோன்ற வேடங்களில் நடித்துதான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன். எனவே அதுபோன்ற வேடங்களில் நடிப்பேன். கடந்த 10 வருடமாக சினிமாவில் நடிக்கிறேன். இவ்வளவு காலத்துக்கு பிறகும் அதுபோன்ற கவர்ச்சி வேடங்களில் நடிப்பது ஒரு கவுரவம்தான்.
என் வாழ்க்கை முழுவதும் சினிமாவும் ஒரு அங்கமாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. சினிமா துறையில் இது எனக்கு பத்தாவது வருடம் ஆகும். நான் சந்தோஷமாக இந்த துறையில் இருக்கிறேன். இதை விட்டு எங்கேயும் போக மாட்டேன். என்னைப்பற்றி கிசு கிசுக்கள் வருகின்றன. சொந்த வாழ்க்கையை சினிமாவில் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டேன்.
வீட்டுக்கு போனால் சினிமா தொடர்புடைய பலருடன் பேசுகிறேன். ஆனால் என் தோழிகள் சினிமாவை தவிர்த்து திரிஷாவாகவே என்னை பார்க்கின்றனர். எனது பிறந்தநாளுக்கு மெர்சிடெஸ் பென்ஸ் கார் பரிசாக வாங்கி உள்ளேன்.

மனம் திறந்தார் திரிஷா

இரு முன்னணி நடிகைகளின் திருமணத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். ஒன்று நயன்தாரா. அடுத்து? த்ரிஷா!

ஆம்... த்ரிஷாவுக்கு போரடித்துவிட்டதாம் சினிமா. ரசிகர்களும் கிட்டத்தட்ட அதே மனநிலைக்கு வந்துவிட்டதை அவரும் உணர்ந்துவிட்டதால், திருமணம் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறாராம்.

இந்திப் படங்களில் பெரிதாகக் கலக்கலாம் என்ற ஆசையில் மும்பையில் ஃப்ளாட் எடுத்துக் கூட தங்கிப் பார்த்தார். ஆனால் நடித்த ஒரே படமும் தோல்வியடைந்துவிட்டதால் வேறு வாய்ப்புகள் இல்லாத நிலை. சில பாலிவுட் உப்புமா கம்பெனிகள்தான் அவரைத் தேடி வந்தார்களாம். இனி மும்பை வேலைக்காகாது என்று உணர்ந்து ஃப்ளாட்டைக் காலிசெய்துவிட்டு சென்னைக்கு வந்தார்.

அப்போதே த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கிவிட்டாராம். மாப்பிள்ளை சரியாக அமையும்பட்சத்தில் இந்த ஆண்டே திருமணம் என்கிறார்கள் த்ரிஷா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.

இப்போதைக்கு தெலுங்கில் இரு படங்கள், தமிழில் அஜீத்துடன் மங்காத்தா என மூன்று படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. வேறு புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படங்கள் முடிந்ததும், திருமண அறிவிப்பை வெளியிடக் கூடும் என்கிறார்கள்.

த்ரிஷாவுக்கு கல்யாணம்!

முக நூல்

Popular Posts