background img

புதிய வரவு

Showing posts with label Coming Assembly election director Seeman spoke. Show all posts

தேனி மாவட்டம் சின்ன மனூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியார் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்திரையன் தலைமை தாங்கினார். இதில் டைரக்டர் சீமான் பேசியதாவது:-

முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை தீர்க்க நாம் தமிழர் என்ற ஒற்றுமையுடன் தமிழர்கள் அனைவரும் போராட வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் நான் பணப்பெட்டி வாங்கி கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்பதாக தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசை அடியோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக உள்ளேன். காங்கிரசுக்கு உறுதுணையாக உள்ள தி.மு.க. அரசையும் வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். எனவே வருகிற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் வீடு, வீடாக பிரசாரம் செய்யப்படும்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் கொடுக்கப்படும் என்று காங்கிரஸ்காரர்களை விட நான் மிக ஆர்வமாக உள்ளேன். ஏனென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அப்படி செய்தால் தான் இலங்கை தமிழர்களின் ஆத்மா சாந்தி அடையும். தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் பணம் தருவார்கள். அந்த பணம் யாருடையது என்று பணம் கொடுப்பவர்களிடம் கேள்வி கேளுங்கள். ஏனென்றால் அந்த பணம் அனைத்தும் நம்முடையது. எனவே ஓட்டுக்கான பணம் தருவதை பெற்று கொண்டு காங்கிரசுக்கு எதிராக வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்பதே எனது லட்சியம்; டைரக்டர் சீமான் பேச்சு

முக நூல்

Popular Posts