background img

புதிய வரவு

Showing posts with label Conceive lady. Show all posts

கருப்பை கட்டிகளை  நீக்க
அதி நவீன சிகிச்சைபெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் ïட்டரின் பைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் பொதுவாக புற்று நோய்க் கட்டிகளாக மாறும் என்று கருதப்படுவதில்லை.
 
பல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நான்கில் மூன்று பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரிய வராது.
 
இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு. பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது  40 வயதிலேயே தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும்.
 
இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது வழக்கம்.

அறிகுறிகள்:
 
கருப்பையில் கட்டி இருக்கும் போது பொதுவாக கீழ்வரும் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். மாத விடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப் போக்கு ஏற்படுவது. இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம், சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல், மலச்சிக்கல், முதுகு வலி அல்லது கால்வலி.
 
தனக்கு வரும் ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம், ஊட்டசத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு.
 
இது போன்று அழியும் கட்டியிலிருந்து வெளிவரும் துணைப் பொருட்கள் சுற்றியுள்ள தசைகளில் ஊடுருவி வலியையும் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம். கருப்பையின் உள் துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதை தான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
 
கருப்பையின் புறப்பகுதியில் நீட்டி கொண்டிருக்கும் கட்டி பிளாடரையோ சிறுநீரை அகற்றும் குழாயையோ அழுத்தும், இதனால் சிறுநீர்ப் பாதை உபாதைகள் ஏற்படலாம். கருப்பையின் பின் பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இது முதுகு தண்டு நரம்புகளை அழுத்தும் போது முதுகுவலி ஏற்படுகிறது. 

காரணங்கள்:
 
மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச் செய்கிறது.
 
கட்டிகள் கண்களுக்கு தெரியாத அளவு முதல் கருப்பையையே பெரிதாக்கும் அளவு வரை வேறுபட்ட அளவுகளில் தோன்றலாம். இவை ஏன் தோன்றுகின்றன என்பது குறித்து தெரியாது. ஆனால் கிளினிக்கல் அனுபவமும், ஆராய்ச்சியும் பல காரணிகளை எடுத்துரைக்கின்றன.
 
நவீன சிகிச்சை:
 
பெண்களின் கர்ப்பப்பை கட்டிகளை நீக்க நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன. உலகில் குழந்தைப்பேறு இல்லாத பெண்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு கர்ப்பக் குழாயில் கட்டிகள் ஏற்படுவதே முக்கியமாக காரணமாக உள்ளது.
 
இதை குணப்படுத்துவதில் நவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறை நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், கருப்பையில் செலுத்தப்படும் நுண் ணிய கேமரா மூலம் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சிறிய கட்டிகளாக வெளியே கொண்டு வரப்படுகிறது.
 
இதனால் கருப்பை குழாயில் இருந்த அடைப்பு முற்றிலும் நீக்கப்படுவதால் கர்ப்பம் சாத்தியமாகிறது. இந்த சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் 60 முதல் 70 சதவீதம் வரையிலான பெண்கள் கருத்தரிப்பதாக கண்டறியப்பட் டுள்ளது. பெண்களுக்கு சுரப்பியில் கோளாறு, சினைப்பையில் நீர்க்கட்டிகள், ரத்தக் கட்டிகள், குழாயில் அடைப்பு, அல்லது நீர் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.
 
இதை தவிர கர்ப்பப்பையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியினால் இவை அனைத்தும் சரி செய்யலாம். ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் பெரும்பாலும் இப்பிரச்சினைகளை 99 சதவீதம் சீராக்கலாம்.
 
எல்லா குறைபாடுகளுக்கும் சோதனைக் குழாய் சிகிச்சை அவசியம் என்று சொல்ல முடியாது. 90 சதவீதம் குறைபாடுகளை லேப்ரோஸ் கோபி, ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் சரி செய்ய முடியும். இந்த சிகிச்சை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
 
தாய்மை அடையலாம்:
 
முட்டைப் பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பையில் 10 செ.மீ. கட்டிகள் என்பனவற்றை ஒரு செ.மீட்டர் அளவேயான சிறு துளையிட்டு நீக்கலாம். ஹார்மோனிக் ஸ்கேஸ்பெல், மோர் சிலேட்டர் என்ற அதிநவீன கருவிகளால் சிறிய அளவு ரத்தப் போக்கோடு சிறு துளையையிட்டும் அகற்றலாம்.
 
தையலே இல்லாமல் ஒரே நாளில் தெம்போடு வலியில்லாமலும் வீட்டிற்குச் செல்லலாம். இரண்டே நாளில் வேலைக்கும் செல்லலாம். டிïப்பில் உள்ள நீர் அடைப்பு இவை இரண்டும் குழந்தை உருவாவதைத் தடுக்கும்.
 
இவற்றை இந்த மகத்தான சிறு துளை சிகிச்சையினால் சரி செய்யலாம். சரி செய்த பிறகு 90 சதவீதம் பெண்கள் தாய்மை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. இதை தவிர கர்ப்பப்பையில் சதை வளர்ச்சி இருப்பதால் குழந்தை வளர இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
 
ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சையினால் இதையும் நீக்கலாம். கட்டிகளையும் நீக்கலாம், நீக்கிய பின் 95சதவீதம் பெண்களுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு உண்டாகிறது.
 
மரபணு மாற்றம்:
 
மரபணுக் கூறுகளின் மாற்றங்களால் கருப்பை கட்டிகள் ஏற்படலாம். கருத் தோற்றத்தை சாத்தியமாக்கும் எஸ்ட்ரோஜென், ப்ரொகெஸ்ட ரோன் என்ற இரண்டு மறு உற்பத்தி ஹார்மோன்கள் கட்டியை தோற்றுவிக்கலாம் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
உடலில் திசுக்களை பராமரிக்கும் சில பொருட்கள் அதாவது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி கட்டி வளர்ச்சிக்கு காரண மாகலாம். கருப்பை கட்டி சிகிச்சையில் ஒரே அணுகுமுறை என்பது இல்லை. பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. கட்டிகள் இருப்பது தெரியவராத பட்சத்தில் பொறுத்திருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
 
இந்த கட்டிகள் நிச்சயமாக புற்று நோய் கட்டிகள் அல்ல. மேலும் மகப்பேற்றில் இது ஒரு போதும் இடைïறு செய்யப் போவதில்லை. இவை மெதுவாக வளரும். மாதவிடாய்க்கு பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே கட்டிகள் சுருங்கி விடும். இது தவிரவும் பல விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
 
கருப்பையை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் பல்வேறு பக்க ஆபத்துகளை உருவாக்கலாம் என்பதால் மருத்துவர்கள் வேறு வழியே இல்லாத பட்சத்தில் தான் இதற்கு பரிந்துரை செய்வார்கள். அல்லது கட்டிகளை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையும் உள்ளது.
 
இதுவல்லாமல் மயோலைஸிஸ் என்று அழைக்கப்படும் சிகிச்சை முறை உள்ளது. இதில் மின்சாரத்தை பாய்ச்சி கட்டிகளை அழித்து, கட்டிகளை ஊட்டி வளர்க்கும் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும் சிகிச்சை உதவியாக இருக்கும் கருப்பை கட்டிகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
தவறான உணவுப் பழக்கம், நொறுக்குத்தீனி, பாஸ்ட்- புட் அதிகம் சாப்பிடுவது போன்றவற்றால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது. என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி.

கருப்பை கட்டிகளை நீக்க அதி நவீன சிகிச்சை

நிறைய பேருக்கு கருப்பையில் குழந்தை வளரும் விஷயம் மட்டும் தெரியுமே தவிர, அதனோடு என்னவெல்லாம் சேர்ந்திருக்கும் என்ற விஷயம் தெரியாது. 

கர்ப்பத்தை முழுமையாகப் பாதுகாப்பதற்கு தினமும் காலையில் இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். இரவில் ஆழ்ந்த உறக்கம் வருவதற்கு கொஞ்சம் கூடுதல் சூடான நீரில் குளிக்கலாம். 

கர்ப்பிணி எட்டு மணி நேரம் உறங்கி ஓய்வெடுப்பது அவசியம். இயல்பான வேலை செய்தல், ஓடுவது, மாடியேறுவது போன்றவற்றால் கருவிலுள்ள குழந்தைக்கு ஆபத்து வருமோ என நினைக்கிறார்கள். கண்டிப்பாக வராது. கருவானது பாதுகாப்பான பனி நீருக்குள் வைக்கப்பட்டுள்ளதால் எந்த வெளிச் செயல்பாடுகளும் அதற்கு சேதத்தை உண்டாக்காது. 

கர்ப்ப காலத்தில் மார்பகக் காம்புகளில் சேரும் அழுக்குகளை சுத்தமாக துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

ஈறு நோய்களால் அழற்சிகளும், பல் வேர் பாதிக்கப்பட்டால் கர்ப்பச் சன்னி நோயும் வரலாம் என்பதால் கருக்காலத்தில் பற்களை முறையாக பராமரிக்க வேண்டும். 

கர்ப்பத்தின் துவக்கத்தில் அடிக்கடி பாலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். முன்னர் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், அடுத்து கருத்தரித்தால் குழந்தையின் நிலைப்பாடு உறுதி செய்யப்படும் வரை பாலுறவு செயல்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் கருவுற்ற 6வது வாரம் முதல் 12வது வாரம் வரை பாலுறவை எச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும். 16 முதல் 31 வாரம் வரை சாதாரணமாக பாலுறவு கொள்ளலாம். கர்ப்பத்தின் இறுதி காலங்களில் பாலுறவு கொள்வதை தவிர்ப்பதும், அதனால் நோய்க் கிருமிகளின் தொற்று ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம். 

புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஒருக்களித்துப் படுப்பதே நல்ல படுக்கை முறை. மல்லாந்து படுக்கும்போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். 

கால் வீக்கம், சர்க்கரை நோய், சிறுநீரில் அதிகமான உப்பு ஆகியவை இருந்தால் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். 

பயணங்கள் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. கர்ப்பக் காலத்தில் ஆற்றைத் தாண்டுவதும், தாய் வீடு போய் வருவதும் தப்பான விஷயங்களல்ல. குறை பிரசவ வாய்ப்பு மற்றும் கருச்சிதைவு அபாயம் இருந்தால் நெடுந்தூர பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

காய்ச்சல் அல்லது சளித் தொல்லை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனையில்லாமல் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடாது. சில மருந்து மாத்திரைகள் குழந்தை பிறந்த பிறகு அவற்றின் பற்கள் மற்றும் எலும்புகளை சிதைத்து விடுபவை. மூன்று மாதத்திற்குப் பிறகு கர்ப்பிணி அருந்தும் மருந்துகள் நஞ்சுக்கொடி மூலம் குழந்தையை அடைந்து ஊனமுற்ற குழந்தைப் பிறப்பையும், வலிப்பு நோயையும் உண்டாக்கும். 

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை இருந்தால் அவற்றை கர்ப்பத்திற்கு முன்னராகவே விட்டுவிட வேண்டும். இவை கருவை பாதிக்கும். 

டாக்டர் டி.காமராஜ்

கர்ப்பம் சார்ந்த விஷயங்கள்

முக நூல்

Popular Posts