background img

புதிய வரவு

Showing posts with label EVKS Elangovan. Show all posts

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில், தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழகம் பெருமை பெற சிறப்பாக பணியாற்றினர். நடக்க இருந்த தவறுகளையும், தில்லுமுல்லுகளையும் தடுத்த பெருமை தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவது முதல் வேலை என ஜெயலலிதா கூறியது பாராட்டுக்குரியது. தடையில்லாத மின்சாரம் இருந்தாலே பல பிரச்னைகள் இருக்காது. தொழில் வளம் பெறும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.

தேர்தலில் 63 நாயன்மார்களாக காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியினர். தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது. இந்நிலை ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க

வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கபாலு பதவி விலக மேலிடம் உத்தரவிட்டது. காங்.,க்கு புதிய தலைவரை சோனியா விரைவில் அறிவிப்பார்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சகவாச தோஷம் தான் முக்கிய காரணம். மக்கள் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப அரசியல் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டளித்தனர். சோனியா யாரை தலைவராக அறிவித்தாலும், அதை ஏற்று காங்கிரசை வளப்படுத்த தொண்டர்கள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட பாடுபடுவேன் என்றார்.

தோல்வி ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அவிநாசி: ""தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெறுவர்,'' என, அவிநாசிக்கு வந்த, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவிநாசியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில், காங்., கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதேபோல், மேற்கு வங்கம், அசாம், கேரளாவிலும் காங்., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தமிழக காங்., தலைவர் தங்கபாலுவை மாற்ற வேண்டுமென்று புகார் சென்றுள்ளது. அதுகுறித்து கட்சி தலைமை ஆய்வு செய்து வருகிறது. அடுத்த தலைவர் யார் என்பதை, சோனியா முடிவு செய்து அறிவிப்பார். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கேள்வி கேட்டதற்கு, "அது குறித்து தற்போது கருத்து கூற விரும்பவில்லை' என்றார். இளங்கோவனிடம், காங்., தொண்டர்கள், சட்டசபை தேர்தல் குறித்து சரமாரியாக புகார் கூறினர். அவர்கள் கூறுகையில், "அவிநாசி தொகுதியில், தி.மு.க.,வினர் வாசன் ஆதரவாளர்களை வைத்து மட்டுமே தேர்தல் பணிகளை செய்தனர்; எங்களை எதற்கும் கூப்பிடவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்ட பிற அணியை சேர்ந்தவர்கள், ஒழுங்காக பணியாற்றவில்லை. எங்களை தொடர்ந்து புறக்கணித்தால், கட்சி பணிகளில் நாங்கள் எதற்கு ஈடுபட வேண்டும்' என்றனர். அதற்கு இளங்கோவன், "தேர்தல் முடிவுக்கு பின், அனைத்தையும் பேசி தீர்த்து கொள்ளலாம். பொறுமையாக இருங்கள்' என்றார். இதனால், தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: இளங்கோவன் "கப்-சிப்'

சென்னை & விழுப்புரம்: ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரது சாதனை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர் பாபுவை ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், திமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆட்சியை மாற்றிவிடக்கூடாது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, பொருளாதார நிபுணர்கள் சாத்தியமே இல்லை என்றனர். ஆனால், காமராஜர் சாதித்துக் காட்டினார்.

அதுபோல் கலைஞர் இலவச டிவி என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை. நிபுணர்களும் சாத்தியமில்லை என்றனர். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி இலவச டிவி வழங்கினார்.

ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரது சாதனை.

கலைஞரை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம். ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை
செயல்படுத்தினார்.

என் சுயமரியாதைதான் முக்கியம், ஏழை-எளிய மக்களைப்பற்றி கவலையில்லை என்கிற ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால், நடந்து வரும் திட்டங்களும் முடங்கிப் போகும். வரவேண்டிய நல்ல புதிய திட்டங்களும் வராமல் போய்விடும். யார் பெரியவர் என்ற போட்டியால் தமிழகத்தில் வளச்சி தடைபடும்.

தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு தரும். என்னைப் பொறுத்தவரை உதயசூரியன், கை சின்னங்கள் வேறு வேறு அல்ல என்றார்.

விஜய்காந்த் டெபாசிட் வாங்கக் கூடாது:

இதற்கிடையே விழுப்புரத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்த திமுக கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

நேரத்தின் அருமை கருதி உங்களிடத்தில் 3 செய்தியை மட்டும் நான் சொல்கிறேன். 1996ல் இதே இடத்தில் பாமக ஒரு மிகப்பெரிய மாநாட்டை போட்டு நமது கலைஞரை அழைத்து அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று ஒரு தனி நாற்காலி போட்டோம். 7 கட்சி கூட்டணியோடு இருந்து அப்போது 96ல் முதல்வராக வந்தார். இது ஒரு செய்தி.

அடுத்து நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்போம் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறேன். மே 13ம் தேதி வாக்கு எண்ணும்போது முதல் முறையாக கவர்னரிடம் திமுக தலைவர் கலைஞரை ஆட்சி அமைக்க அனுப்புகிற முதல் கடிதம் இந்த ராமதாசிடம் இருந்து தான் செல்லும்.

அமைச்சர் போட்டியிடுகிற இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். எனக்கு மட்டும் ஒரு நாள் நேரம் இருந்தால் நான் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சுற்றி சுற்றி வந்திருப்பேன். இந்த தொகுதியில் எதிர்த்து நிற்கிற வேட்பாளர் டெபாசிட் வாங்கக்கூடாது.

இன்னொரு செய்தி ரிஷிவந்தியம் தொகுதியில் சிவராஜை எதிர்த்து நிற்கிற அந்த வேட்பாளரும் (தேமுதிக தலைவர் விஜய்காந்த்) டெபாசிட் வாங்கக்கூடாது என்றார்.

யானை முகாம் நடத்தியதே ஜெவின் சாதனை-ஈவிகேஎஸ்

சென்னை: ""தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது,'' என, இளங்கோவன் பேசினார்.
சென்னை ராயபுரம் தொகுதி காங்., வேட்பாளர் மனோவை ஆதரித்து, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்தார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவை (தி.மு.க.,) ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது: தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆட்சியை மாற்றிவிடக்கூடாது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, பொருளாதார நிபுணர்கள் சாத்தியமே இல்லை என்றனர். ஆனால், காமராஜர் சாதித்துக் காட்டினார். அதுபோல் கருணாநிதி இலவச "டிவி' என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை. நிபுணர்களும் சாத்தியமில்லை என்றனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி இலவச "டிவி' வழங்கினார். ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரதுசாதனை.

கருணாநிதியை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம். ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தினார். என் சுயமரியாதைதான் முக்கியம்; ஏழை,எளிய மக்களைப்பற்றி கவலையில்லை என்கிற ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால், நடந்து வரும் திட்டங்களும் முடங்கிப்போகும். வரவேண்டிய நல்ல புதிய திட்டங்களும் வராமல் போய்விடும். யார் பெரியவர் என்ற போட்டியால் தமிழகத்தில் வளச்சி தடைபடும். தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு தரும். என்னைப் பொறுத்தவரை உதயசூரியன், கை சின்னங்கள் வேறு வேறு அல்ல. அதை உணர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவையும், ராயபுரம் தொகுதியில் காங்.,வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

தி.மு.க., ஆட்சி தொடர்வது காலத்தின் கட்டாயம்: இளங்கோவன் பிரசாரம்

ஈரோடு: தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு நிறைவேற்றுவார் முதல்வர் கருணாநிதி என்று மூத்த காங்கிரஸ் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

ஈரோட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன் கூறுகையில்,

திமுக தனது தேர்தல் அறிக்கையில் மிகச்சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டங்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு நிறைவேற்றப்படும். கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதி சொன்னதை அப்படியே நிறைவேற்றி வெற்றிகொடி நாட்டி இருக்கிறார்.

சென்ற தேர்தல் அறிக்கையின்போது ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும் என்று சொன்னபோது நானும், ப.சிதம்பரமும் சாத்தியம் இல்லை என்று பேசிகொண்டோம். பின்னர் பொருளாதார மேதையான சிதம்பரம் இரவு முழுவதும் யோசித்து விட்டு சாத்தியம் என்றார்.

கலைஞர் சிறந்த எழுத்தாளர். அரசியல்வாதிகளில் எல்லாம் மிகச்சிறந்த அரசியல்வாதி. கடுமையான உழைப்பாளி. சிறந்த பொருளாதார நிபுணர். கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ ரேசன் அரிசி வழங்கினார். இப்போது மாணவர்களுக்கு லேப்- டாப் தருவேன் என்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எல்லாம் இலவசம் என்று சிவப்பு சட்டைக்கார்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் கல்கத்தாவில் ஒரு ரூபாய்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்த ஆட்சியில் நல்ல பல காரியங்கள் தொடர வேண்டும். எனவே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் எனிறார்.

வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு நிறைவேற்றுவார் கருணாநிதி-ஈவிகேஎஸ்

முக நூல்

Popular Posts