background img

புதிய வரவு

Showing posts with label Method of valipadu. Show all posts

துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும். பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும். அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறுபிழிந்து விட்டு- பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கின்னம் போல் செய்து கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம் பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

துர்க்காதேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் ஆகியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும். இரண்டு துண்டாக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில் வெல்ல சர்க்கரை கலந்து பானமாக்கி நிவேதனம் செய்ய வேண்டும்.

பின்னர் துர்க்கா தேவியின் பாமாலைகள், துதிப்பாடல்கள், ராகு காலத்தில் பாடவேண்டிய பாடல்கள் ஆகியவற்றைப் மனம் உருகிப்பாட வேண்டும். பூஜையின் முடிவில் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பானகத்தைக் கொடுத்து தாங்களும் பருகலாம். துர்க்காதேவியின் பூஜையை வீட்டிலேயே செய்வதால் குடும்பம் என்றென்றும் செல்வச் செழிப்புடன் இருக்கும்.

துர்க்கை அன்னையை வீட்டில் வழிபடும் முறை

*விநாயகப்பெருமானின் பெருவயிறு, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் அறிய தத்துவமாகும்.

*சிவன் சன்னதியில் பிரதட்சிணம் செய்யும்போது நந்திதேவரையும் சேர்த்தே பிரதட்சணம் செய்தல் வேண்டும். அதைவிடுத்து சிவனுக்கும் நந்திக்கும் இடையே சென்று கோவிலைச் சுற்றி வருதல் கூடாது. இது மிகவும் தவறான செயலாகும்.

* பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு,வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.

* பசுவின் உடலெல்லாம் பாலாக இருப்பினும், அதை கறந்து வெளிப்படுத்தும் இடம் அதன் மடிதான். அது போல பகவான் அருளைச் சுரக்கும் இடம் ஆலயமாகும். எனவே திருக்கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதால், நம் வினைகள்யாவும் வெந்து, எரிந்து நீராகி, நம் விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

* சிதம்பரத்தைத் தரிசித்தாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், திருவண்ணாமலையை நினைத்தாலும் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.

* விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும், முருகனை மூன்று முறையும் சுற்றி பிரதட்சணம் செய்தல் வேண்டும்.

* காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந்ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற்பலன்களை நல்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம் கூறும் நெறி ஆகும்.

*வீடுகளில் மணியடித்து பூஜை செய்து விட்டு, அந்த மணியைத் தரையின் மேல் வைக்கக்கூடாது. ஏதாவதொரு அடுக்குப் பகுதியின் மேல் வைக்க வேண்டும்.

இறைவனை வழிபடும் முறைகள்

முக நூல்

Popular Posts