background img

புதிய வரவு

Showing posts with label Mumbai Priyanka Chopra. Show all posts

முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. 2002-ம் ஆண்டு “தமிழன்” படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகம் ஆனார். அவர் தற்போது இந்தி சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

பிரியங்கா சோப்ரா மற்றும் மற்றொரு இந்தி நடிகை கத்ரினா கயூப் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்பட்டதால் இந்த சோதனை நடந்தது.

பிரியங்கா சோப்ரா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் அவருக்கு 9 சொகுசு வீடுகள் இருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் ரூ.6 கோடிக்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

வீடுகளை அவர் கணக்கில் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இவற்றில் 5 வீடுகள் மும்பை யாகி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6-வது மாடியில் உள்ளது. அதே குடியிருப்பில் அவருக்கு மேலும் 3 வீடுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. எல்லாமே பெரிய வீடுகள் அனைத்தையும் வாடகைக்கு விட்டு இருந்தார்.

சொத்து குவிப்பு பற்றி பிரியங்கா சோப்ராவிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது:-

எனது பெயரை கெடுக்கும் விதமாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை நான் மறுக்கிறேன். வருமான வரி அதிகாரிகள் என் வீட்டில் சோதனை நடத்தியபோது நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

மும்பையில் பிரியங்கா சோப்ராவுக்கு 9 சொகுசு வீடுகள்; வருமானவரி சோதனையில் கண்டுபிடிப்பு

முக நூல்

Popular Posts