background img

புதிய வரவு

Showing posts with label Vadivelu in DMK. Show all posts

மொபைல் போனில் குண்டு மிரட்டல் வருவதால், நடிகர் வடிவேலுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி, வடிவேலுவின் மேலாளர், டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார்.

சென்னை சாலிகிராமம், வேதவல்லி தெருவைச் சேர்ந்தவர் முத்தையா. நடிகர் வடிவேலுவின் மேலாளரான இவர், டி.ஜி.பி., போலோநாத் மற்றும் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் பாண்டியன் ஆகியோரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தலுக்காக, கடந்த 1ம் தேதி முதல், தி.மு.க.,விற்காக வடிவேலு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சாலிகிராமம், வேதவல்லி தெருவில் உள்ள வடிவேலுவின் அலுவலகத்தில், கடந்த 9ம் தேதி நான் பணியில் இருந்தபோது, இரவு 10:20 மணிக்கு, 97891 34192 என்ற மொபைல் எண்ணில் இருந்து, என் மொபைல் எண்ணிற்கு, அடையாளம் தெரியாத நபர் பேசினார்.

அவர், "நீ யார் மேனேஜரா? என்று கேட்க, நான், "ஆமாம் என்றேன். அப்போது அந்த நபர், "வடிவேலு செய்வது சரியில்லை. சொல்லி வை; நாளை அவரது பிரசார வேன் குண்டு வைத்து தகர்க்கப்படும். சாலிகிராமம், வடிவேலு அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்படும் எனக் கூறி, தொடர்பை துண்டித்து விட்டார். எனவே, வடிவேலு அலுவலகம் மற்றும் சாலிகிராமம் லோகய்யா காலனியில் உள்ள வீடு, மதுரை, விரகனூர், சின்ன காரியனூர், நாட்டாமை தோப்பில் உள்ள வீடு ஆகியவற்றிற்கும், வடிவேலுவின் பிரசார வழித்தடங்களில் அவரது உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் கருணாநிதியை சந்தித்த வடிவேலு, தனக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை கூறினார். "தண்ணீர் பாம்பு கூட, உன்னை ஒன்றும் செய்ய முடியாது. தைரியமாக பிரசாரம் செய் என, தைரியம் கூறி அனுப்பியுள்ளார்.

வெளியில் வந்த வடிவேலு, "எனது தலைவர் கருணாநிதி, அண்ணன்கள் ஸ்டாலின், அழகிரி இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என, கூறிவிட்டு கிளம்பினார். சிதம்பரத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பிய வடிவேலுவுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கார்பன் ரக துப்பாக்கி ஏந்தி அவரது பிர சார வேனின் இருபக்கமும் போலீசார் ஓட, வண்டியைச் சுற்றி தொங்கியபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முக நூல்

Popular Posts