background img

புதிய வரவு

Showing posts with label accident minister mariyam pitchai die. Show all posts

தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார்.அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை, சென்னையில் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருச்சியில் இன்று காலை முத்துரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்னை திரும்பினார். திருச்சி பெரம்பலூர் மெயின்ரோடு, பாடாலூர் அருகே அவரது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அவரது கார் முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் மரியம் பிச்சை மரணம் அடைந்தார்.

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு அவர்களை எதிர்த்து போட்டியிட்டு 7,007 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மூன்று முறையாக எம்எல்ஏவுக்கு போட்டியிட்ட மரியம் பிச்சை, கடந்த சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனவர்.

பி.ஏ., வரலாறு பட்டதாரியான மரியம் பிச்சை திருச்சி சங்கிலியாண்டவுரத்தைச் சேர்ந்தவர். திரைப்பட வினியோகஸ்தராக இருந்த மரியம் பிச்சை திரையரங்கையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர். திருச்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மறைந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார்

முக நூல்

Popular Posts