background img

புதிய வரவு

Showing posts with label dhanush. Show all posts

இந்தியாவில் இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இளம் தமிழ் நடிகரான தனுஷ். ஆடுகளம் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதேபோல், தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், சிறந்த நடிகைககான விருதுக்குத் தேர்ந்தெடு்ககப்பட்டுள்ளார்.

தனுஷூடன் இணைந்து, மலையாள நடிகர் சலிம் குமார், "ஆதாமிண்டே மகன் அபு" படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார்.

சரண்யாவுடன் இணைந்து, மராத்தி படத்துக்காக, மிடாலி ஜக்தப் வரத்கர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

ஆடுகளம் திரைப்படம் மொத்தம் 6 விருதுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், சிறந்த இயக்குநருக்கான விருது பெறுகிறார். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இந்தப் படத்துக்காக வெற்றிமாறன் பெறுகிறார்.

இதே படத்துக்காக, சிறந்த படத்தொகுப்பு விருது டி.ஆ. கிஷோருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடனத்துக்கான விருதும் இதே படத்துக்காக, தினேஷ்குமாருக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் மென்ஷன் எனப்படும் சிறப்பு அங்கீகாரத்துக்கான விருதை ஆடுகளம் படத்துக்காக வி.ஐ.எஸ். ஜெயராமன் பெறுகிறார்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை, மைனா என்ற தமிழ் படத்துக்காக தம்பி ராமையை பெறுகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதும் தமிழுக்குக் கிடைத்துள்ளது. நம்ம கிராமம் படத்துக்காக, சுகுமாரி அந்த விருதைப் பெறுகிறார்.

சிறந்த தயாரிப்பு டிசைனுக்கான விருது, எந்திரன் படத்துக்காக, சாபு சிரிலுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது, நம்ம கிராமம் படத்துக்காக, இந்திரன் ஜெயனுக்குக் கொடுக்கப்பட உள்ளது.

சிறந்த பாடலுக்கான விருது, தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்காக, வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பிரிவுக்கான விருது, எந்திரன் படத்துக்காக சீனிவாஸ் மோகனுக்கு கிடைத்துள்ளது.

தேசிய அளவில், சிறந்த திரைப்படமாக, "ஆதாமிண்டே மகன் அபு" என்ற மலையாளப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக, சல்மான்கான் நடித்த தபாங் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷுக்கு தேசிய விருது

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13ந் தேதி, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மருமகன் நடிகர் தனுஷ்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருக்கு நுரையீரலில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். ரசிகர்கள் பதற்றப்பட தேவையில்லை.

ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள். அவருக்கு தனிமையும், ஓய்வும் தேவைப்படுகிறது. அதற்காகவே ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா போவதாக வந்த வதந்தியை நம்ப வேண்டாம். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார். வீடு திரும்பியதும் அவரே அறிக்கை வெளியிடுவார்.

அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

ரஜினி அறிக்கை வெளியிடுவார்: தனுஷ்

நடிப்பு: கிருஷ்ணா, தனுஷ், அனன்யா, ஷீலா
இசை: தினா
இயக்கம்: சுப்பிரமணியம் சிவா
தயாரிப்பு: அமித் மோகன்

எப்போதோ வந்திருக்க வேண்டிய ஒரு கதை, மிகக் காலம் கடந்து இப்போது வந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த சீடன். கதையை மட்டும் மலையாளத்திலிருந்து எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டு சூழலுக்கேற்ப திரைக்கதை அமைத்திருந்தால் ஒரு வேளை பார்க்கும்படி இருந்திருக்குமோ என்னவோ....

பழனியில் பெரிய அரண்மனை வீட்டில் ஒரேயொரு பாட்டி. அவருக்கு வேலைக்காரியாக இருக்கிறார் அனன்யா. பக்கா முருக பக்தை. ஆனால் பழனி முருகனைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு வீட்டில் வேலை அவரை அழுத்துகிறது.

அப்போது அந்த வீட்டுக்கு வருகிறான், பாட்டியின் பேரன் கிருஷ்ணா. வழக்கம்போல வேலைக்காரிக்கும் பேரனுக்கும் காதல். இந்தக் காதல் தெரிந்ததும், கிருஷ்ணாவின் அம்மா அவனை தன் தோழியின் மகனுக்கு கட்டி வைக்க திட்டம் போடுகிறார்.

அனன்யாவின் வாழ்க்கை சோகமாக, 'முருகா காப்பாத்து' என அவர் உருகுகிறார். சரியாக அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைகிறார் சமையல்காரர் சரவணன் ( தனுஷ்). அதன் பிறகு எல்லாமே மாறுகிறது. இதில் அனன்யா - கிருஷ்ணா காதல் என்னாகிறது... தனுஷால் அந்தக் காதல் கைகூடுகிறதா என்பது மீதிக் கதை.

படம் முழுக்க மலையாள வாடை. வசனங்களில் கூட அப்படியே. காட்சிகள் ஒவ்வொன்றும் சவசவவென வந்து போகின்றன. "அடுத்த காட்சி இதுதான்... இந்த இடத்தில் காதலைச் சொல்லப் போகிறார்கள். இதோ இப்போது காதல் பிரியப் போகிறது... அடுத்த சீனில் தனுஷ் வருவார் பார்..." என மகா சுலபத்தில் ஊகிக்க முடிகிற திரைக்கதை, பொறுமையைச் சோதிக்கிறது. இத்தனைக்கும் இரண்டு மணி நேரமே ஓடும் படம் இது!

வசனங்களாவது கொஞ்சம் ஷார்ப்பாக உள்ளதா என்றால், ம்ஹூம்... மெகா சீரியல் தோற்றது போங்கள்!

எதற்காக தனுஷுக்கு இத்தனை மகா ஆர்ப்பாட்டமான விளம்பரம் என்று தெரியவில்லை. அவர் வருவது கொஞ்ச நேரம்தான். அதிலும் சமையல் பற்றி படு சுமாரான ஒரு பாட்டைப் பாடிவிட்டு, எப்போது சீனிலிருந்து போனார் என்பதே தெரியாமல் போகிறார்.

ஹீரோவாக கிருஷ்ணா என்பவர் நடித்திருக்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தில் வந்து போகிறார் என்பதைத் தவிர பெரிதாக சொல்ல ஏதுமில்லை.

அனன்யா பரவாயில்லை... முகமும் நடிப்பும் பார்க்கும்படி உள்ளது. விவேக்கின் போலிச்சாமியார் கெட்டப்பும், தினாவின் இசையும் சகிக்கலை!

சுகாசினி, ஷீலா, இன்னொரு பாட்டி என படம் முழுக்க 'கிழவிகள்' மயம். கடுப்பாக உள்ளது. இன்னொன்று, அவ்வப்போது வரும் குட்நைட் காயில் விளம்பரங்கள். விளம்பரப் படத்துக்கு நடுநடுவே படத்தை ஓட்டுகிறார்களோ என்ற பிரமையைத் தவிர்க்க முடியவில்லை. என்னதான் தயாரிப்பாளர் குட்நைட் கம்பெனி உரிமையாளர் என்றாலும் இத்தனை.. இத்தனை விளம்பரம் ஆகாது!

திருடா திருடி என்ற ஒரேயொரு 'விசிட்டிங் கார்டு' திரையுலக வாழ்க்கை முழுவதற்கும் கூட வராது என்பதை இயக்குநர் சுப்பிரமணிய சிவா புரிந்துகொண்டால் சரி.

சீடன் - பட விமர்சனம்

சினிமாவை பொழுதுபோக்‌கி‌ற்கும் மேலாக பார்க்கிற இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆடுகளம் வெற்றிமாறனையும் அந்தப் பட்டியலில் இணைத்திருக்கிறது.

தனி மனிதனின் வன்மம் பல மனிதர்களின் வாழ்க்கையை எப்படி துண்டாடுகிறது என்பதை அன்பும், ஆரவாரமும், புழுதியேறிய போர்க்குணமும் கொண்ட மதுரைப் பின்னணியில் ஆவணமாக்கப்பட்டிருக்கிறது.

FILE

தடை செய்யப்பட்டிருக்கும் சேவல் சண்டை வெறும் பொழுதுபோக்கல்ல. பலருக்கு அது கௌரவப் பிரச்சனை. சேவல்களை பழக்குவது போர் வீரர்களை தயார்படுத்துவதுபோல. பேட்டைக்காரனுக்கு சேவல்களை பழக்குவது தொழில். சுற்று வட்டாரத்தில் ராஜாவைப் போல தி‌ரியும் அவ‌ரின் பெருமையை அவரது சீடப்பிள்ளை கருப்பு ஒரே நாளில் தாண்டி விடுகிறான். பொறாமையில் பொசுங்கும் பேட்டைக்காரன் வீசும் ஒவ்வொரு கண்ணியும் கருப்பின் காலை வா‌ரி, கடைசியில் அவன் கழுத்தில் கத்தி வைக்கிறது.

கே.பி.கருப்பு என்ற டோண்ட்கேர் கேரக்டர் தனுஷுக்கு. தெருப் பையனின் தொல்லை பொறுக்காமல் இவரை காதலிக்கிறேன் என்று தனுஷை கை காண்பிக்கிறார் ஆங்கிலோ இந்தியரான ஐ‌ரின் (தபசீ). அதற்கு அடுத்த ஐந்து நிமிடம் தனுஷ் காட்டுகிற எக்ஸ்பிரஷனுக்கு கை வலிக்க அடிக்கலாம் அப்ளாஸ். அம்மா இறந்த துக்கத்தில், தபசீயிடம் அவர் பேசுகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல் பேச்சு கேட்காத மகனின் நிஜமான பாவமன்னிப்பு.

ஆடுகளத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பவர் பேட்டைக்காரனாக வரும் வஐச ஜெயபாலன். வன்மம் முதல் பாசம் வரை நவரசமும் இவ‌ரின் தாடி மீசை முகத்தில் தாண்டவமாடுகிறது. ஒரு அற்புத நடிகரை அடையாளம் காட்டியதற்கு வெற்றிமாறனுக்கு ஸ்பெஷல் பொக்கேயே தரலாம். கிஷோரா இது? அச்சு அசல் மண்ணின் மைந்தன். பார் ஓனராக வரும் இவர், கருப்பு ஏன் தன்னை கொல்லாமல் விட்டான் என்ற சந்தேகம் துளியும் இன்றி அவனை கொலை செய்ய துரத்துவது நெருடல்.
FILE

படத்தின் ஆகப்பெ‌ரிய பலம், கதைக்களம். சேவல் சண்டை, அதை பழக்கும்விதம், மதுரை மனிதர்கள் என பெரும் நிலப்பகுதியொன்றை இரண்டரை மணி நேரம் அனுபவப்படுகிறோம். ஃப்ரேமுக்குள் வரும் அனைவரும் பிறவி நடிகர்களைப் போலவே வாழ்ந்திருக்கிறார்கள். கலை இயக்கமும், ஒளிப்பதிவும் ஆடுகளத்தின் இரு கண்கள் எனலாம்.

பலவீனமும் உண்டு. ஒரே நேர்கோடான கதையை, சேவல் சண்டை நடந்த அன்றுதான் இது நடந்தது என்ற குழப்பமான வாய்ஸ் ஓவருடன் தொடங்கியதை தவிர்த்திருக்கலாம். அதனை தொடர்ந்து வரும் துரத்தல் அநியாயத்துக்கு நீளம். காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக திரைக்கதையின் கயிற்றை சற்றே தளர்த்தியதில் காட்சிகளின் கட்டுக்கோப்பு மிஸ்ஸிங்.

பின்னணி இசை பல நேரம் காட்சிகளிலிருந்து விலகியே நிற்கிறது. துரையின் சேவல்கள் இறந்து கிடக்கும் காட்சியில் இத்தனை வாத்தியங்கள் கொட்டி முழக்க வேண்டுமா?

கிளைமாக்சில் உண்மை யாருக்கும் தெ‌ரியாமலே ஹீரோ காதலியுடன் ஊரைவிட்டுப் போகிறான். கமர்ஷியலான கிளைமாக்சின் இந்த காவியமான முடிவை பு‌ரிந்துகொள்ள முடியாத குழப்பத்துடனே வெளியேறுகிறான் சராச‌ரி ரசிகன்.

சிறிய சறுக்கல்கள் இருந்தாலும், ஆடுகளம் தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒன்று, சந்தேகமில்லை.

ஆடுகளம் விமர்சனம்

முக நூல்

Popular Posts