background img

புதிய வரவு

Showing posts with label erode. Show all posts

ஈரோடு மாவட்டத்தில் பசுமை அங்காடிகளில் காய்கறி விற்பனை மும்பரமாக நடக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு காய்கறிகள் விலை விண்ணை தொடும் அளவு உயர்ந்தது. ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.100 க்கு விற்பனையானது. அனைத்து தரப்பு மக்களையும் முகம் சுளிக்கசெய்தது. மேலும் சிறியவெங்காயம், தக்காளி என அனைத்து காய்கறிகள் விலைகளும் அதிகரித்தது.

இதனால் அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அரசு அதிரடி நடவடிக்கையாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் பசுமை அங்காடி என்ற பெயரில் காய்கறி கடை துவங்கியது. காய்கறி உற்பத்தியாளர்களிடம் நேரடியாக அரசு கொள்முதல் செய்து இதை பொதுமக்களுக்கு லாபநோக்கின்றி விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

மார்கெட்டில் ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.60 வரை விற்பனையாகும் நிலையில் பசுமை அங்காடியில் ரூ.27 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் சின்னவெங்காயம் கிலோ ஒன்று ரூ.45 க்கு விற்பனையாகிறது. ஆனால் மார்கெட்டில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.65 க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் தக்காளி பழம் பசுமை அங்காடியில் ஒரு கிலோ ரூ. 15 க்கு விற்கப்படுகிறது. ஆனால் மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.35 ஆகும். இதேபோல் அனைத்து காய்கறிகளும் மார்கெட்டை விட பசுமை அங்காடியில் 50 சதவீதத்திற்கு கீழாக கிடைப்பதால் பொதுமக்கள் பசுமை அங்காடியை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர். இதனை சமாளிக்க கடந்த இரண்டு நாட்களில் தினசரி மார்கெட்டிலும் காய்கறிகளின் விலை குறைந்து வருவது குறிப்பிடதக்கது.

இது குறித்து தினசரி மார்கெட் வியாபாரி ஒருவர் கூறுகை‌யி‌ல், அரசு காய்கறி உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து லாபம் இல்லாமல் விற்பனை செய்வதால் குறைந்த விலைக்கு கொடுக்க முடிகிறது.

ஆனால் நாங்கள் குறைந்த லாபம் இல்லாமல் விற்பனை செய்வது சாத்தியமில்லாத செயலாகும். இருந்த போதிலும் எங்களிடம் அனைத்து ரக காய்கறிகளும் தேவையான அளவு கிடைக்கும். ஆனால் பசுமை அங்காடியில் அப்படி கிடைக்குமா என்பது தெரியவில்லை என்றார்.

பசுமை அங்காடியில் காய்கறி விற்பனை அமோக‌ம்

சத்தியமங்கலம் வனத்தில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் பலியானார்.

சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இங்கிருந்து தலமலை செல்லும் வழியில் உள்ளது ராமர்அணை கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி சூழ்ந்துள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் மசனன் (65). இவர் நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதையை கழிக்க வனப்பகுதிக்குள் சென்றார்.
அப்போது வனப்பகுதியில் இருந்த காட்டெருமை மசனனனை குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சத்தி வனத்தில் காட்டெருமை தாக்கி முதியவர் பலி

சத்தியமங்கலம் வனத்தில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் பலியானார்.

சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இங்கிருந்து தலமலை செல்லும் வழியில் உள்ளது ராமர்அணை கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி சூழ்ந்துள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் மசனன் (65). இவர் நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதையை கழிக்க வனப்பகுதிக்குள் சென்றார்.
அப்போது வனப்பகுதியில் இருந்த காட்டெருமை மசனனனை குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தற்போது மஞ்சள் விற்பனைக்கு வருவதால் ஈரோட்டில் மஞ்சள் விலையில் இறங்கு முகம் ஏற்பட்டுள்ளது.

மஞ்சள் விற்பனையில் முதன்மையான சந்தையாக விளங்குவது ஈரோடு ஆகும். தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து மஞ்சள் விற்பனைக்கு ஈரோடு வரு‌கிறது.

கடந்த ஆண்டு மஞ்சள் விலை வரலாற்றில் இல்லாத அளவு குவிண்டால் ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது. குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை விற்பனையான மஞ்சள் தங்கத்தின் விலைபோல் உயர்ந்ததால் விவசாயிகள் மஞ்சள் பயிரிட தொடங்கினர்.

கடந்த ஆண்டை காட்டிலும் தமிழ்நாட்டில் 60 சதவீதம் மஞ்சள் பயரிட்டுள்ள விவசாயிகள் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் நோய் தாக்குதலால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலத்தில் மஞ்சள் விளைச்சல் சிறப்பாக இருப்பதால் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த மாதம் குவிண்டால் ஒன்று ரூ.16,500 வரை விற்பனையான மஞ்சள் தற்போது குவிண்டால் ஒன்று ரூ.14,400க்கு விற்பனையாகிறது.

ஈரோட்டில் மஞ்சள் விலை மந்தம்

முக நூல்

Popular Posts