background img

புதிய வரவு

Showing posts with label maharasthra. Show all posts

நாசிக்கில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பலியாயினர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் விமானம் ஒன்று,கோவா நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானம், குடியிருப்பு பகுதி ஒன்றில் ஆளில்லாத வீட்டின் மீது விழுந்து நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

விமானம் நொறுங்கி விழுந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால், வேறு யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

நாசிக்: பயிற்சி ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகள் பலி

ஆதர்ஷ் வீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண் உள்ளிட்ட 13 பேர்கள் மீது மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ இன்று வழக்கு பதிவு செய்துள்ளது.

கார்கில் போரில் மரணமடைந்த மற்றும் பங்கேற்ற இராணுவ வீரர்களுக்காக,மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

முதல்வராக இருந்த அசோக் சவாண் தனது உறவினர்களுக்கு வீடு ஒதுக்கியதாக எழுந்த புகார் காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது.

மேலும் பல்வேறு இராணுவ உயரதிகாரிகள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்றதாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ கடந்த நவம்பர் மாதமே வழக்குப் பதிவு செய்த போதிலும்,விசாரணை மந்த கதியிலேயே இருந்ததோடு, இந்த ஊழல் தொடர்பாக யார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் கடந்தவாரம் சிபிஐ-யின் இந்த மெத்தன போக்கு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து,இவ்வழக்கில் அசோக் சவாண் மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்தது.

சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதர்ஷ் ஊழல்: அசோக் சவாண் மீதும் வழக்கு பதிவு

மகாராஷ்ட்ராவில் துணை கலெக்டர் ஒருவர் பெட்ரோல் கலப்பட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கலப்படம் செய்யும் மாஃபியா கும்பலைச் சேர்ந்த 180 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாவட்ட துணை கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே என்பவர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் கலப்பட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்ட்ரா அரசின் கெஜட்டட் அந்தஸ்திலான அதிகாரிகள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.

இதற்கு மற்ற ஊழியர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.அதன்படி இன்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 17 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால் மாநிலம் முழுவதும் அரசு பணிகள் முடங்கின.பல அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக கலப்பட மற்றும் எண்ணெய் கடத்தல் கும்பலை பிடிக்க மாநில அரசு உத்தரவிட்ட்டதைத் தொடர்ந்து, 200 க்கும் அதிகமான எண்ணெய் கலப்படம் நடக்கும் இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது மாஃபியா கும்பலைச் சேர்ந்த 180 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி தெரிவித்தார்.

துணை கலெக்டர் கொலை:கலப்பட கும்பலைச் சேர்ந்த 180 பேர் கைது

மகாராஷ்ட்ரா மாவட்ட துணை கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே என்பவர்,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் கலப்பட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்ட்ரா அரசின் கெஜட்டட் அந்தஸ்திலான அதிகாரிகள் சங்கம் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.

இதனால் மாநிலம் முழுவதும் அரசு பணிகள் முடங்கின.பல அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

துணை கலெக்டர் கொலை:மகாராஷ்ட்ராவில் அரசு அதிகாரிகள் போராட்டம்

மகாராஷ்ட்ரா மாவட்ட துணை கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே என்பவர்,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் கலப்பட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்ட்ரா அரசின் கெஜட்டட் அந்தஸ்திலான அதிகாரிகள் சங்கம் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.

இதற்கு மற்ற ஊழியர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.அதன்படி இன்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 17 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால் மாநிலம் முழுவதும் அரசு பணிகள் முடங்கின.பல அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

முக நூல்

Popular Posts