background img

புதிய வரவு

Showing posts with label unit 10 kills. Show all posts

கேரளாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று நடந்த வெடி விபத்தில் 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சொரணூர் என்னும் இடத்தில் இருந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 10 பேர் வரை பலியானதாகவும்,பெண்கள் உள்பட 30 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த வெடி விபத்தினால் அருகில் உள்ள சொரணூர் மற்றும் தேஷமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வெடிவிபத்து நடந்தபோது,அந்த தொழிற்சாலை அருகே பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்ததாகவும், அப்போது சில பட்டாசுகள் ரயில் பெட்டி ஒன்றுக்குள் பறந்து சென்று வெடித்ததாகவும்,இதனால் இரண்டு பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

கேரளா:வெடி விபத்தில் 10 பேர் பலி

முக நூல்

Popular Posts