Tuesday, January 25, 2011

சர்கோஸியின் 'ஃபேஸ்புக்' இணைய தளம் சிதைப்பு

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் 'ஃபேஸ்புக்'இணைய தளம் மர்ம நபரால் ஊடுருவி சிதைக்கப்பட்டுள்ளது.
அவரது 'ஃபேஸ்புக்'கில் ஊடுவிய மர்ம ஆசாமி,அடுத்த தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று சர்கோஸியே கூறியது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளான்.

சர்கோஸியின் 'ஃபேஸ்புக்' இணையதளத்தில் 3,50,000 க்கும் அதிகமானோர் நண்பர்களாக பதிவு செய்துள்ளதால்,அவர்கள் அனைவரும் இந்த செய்தியை படித்துள்ளனர்.

அதன்பிறகே சர்கோஸியின் 'ஃபேஸ்புக்' மர்ம ஆசாமியால் ஊடுருவப்பட்டு மேற்கூறிய விஷமத்தனமான செய்தி வெளியிடபட்டிருப்பது தெரியவந்தது.

No comments:

Post a Comment