புதிய நீதிக்கட்சி சார்பில் அண்ணா படத்திற்கு கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் மலர் அஞ்சலி செலுத்தினார். தலைமை நிலையச் செயலாளர் ரவிக்குமார், ஆர்.டி. சேதுராமன், பழனி, மாநில இளைஞரணிச் செயலாளர் ராஜாராம், சுதர்சனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் பிரபு, சேகரன், நடிகை புவனேசுவரி, சங்கரபாண் டியன், திருநாவுக்கரசு, சேவக பெருமாள், பெரியதுரை, செல்வகுமார் உள்பட பலர் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். மற்றும் கவிஞர் காசிமுத்து மாணிக் கம், விருகை மகேந்திரன், எம்.ஜி.ஆர்.நகர் முருகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்
0 comments :
Post a Comment