சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் 63வது பிறந்த தின விழாவை ஒட்டி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா சிறப்பு மலரை மதுசூதனன் வெளியிட முனுசாமி பெற்றுக் கொண்டார். வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட 63 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டது. விழாவில் பொன்னையன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
undefined
undefined
0 comments :
Post a Comment