background img

புதிய வரவு

ஊழ‌ல்களு‌க்கு கா‌ர்‌ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌‌ள் தா‌ன் காரண‌ம்: ‌பிரகா‌ஷ் கார‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று


'நா‌ட்டி‌ல் நட‌ந்து‌ள்ள அனை‌த்து ஊழ‌ல்களு‌க்கு‌ம் கா‌ர்‌ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌‌ள் தா‌ன் அடி‌ப்படை காரண‌ம்'' எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அவ‌ர், தலைநக‌ர் டெ‌ல்‌லி‌‌யி‌ல் வ‌ர்‌த்தக‌ர்க‌ள் கூடுவத‌ற்கு ஊழ‌லு‌ம் ஒரு மு‌க்‌கிய காரணமாக ‌திக‌ழ்‌கிறது எ‌ன்றா‌ர்.

ஊழலோடு சே‌ர்‌த்துதா‌ன் டெ‌ல்‌லி வள‌ர்‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள கார‌த், ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம், காம‌ன்வெ‌ல்‌த் வழ‌க்கு உ‌ள்பட அனை‌‌த்து வழ‌க்குகளு‌ம் கா‌ர்‌ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌‌ள் ‌நி‌தி ‌நிறுவன‌ங்க‌‌ளி‌ல் இரு‌ந்துதா‌ன் தொட‌ங்கு‌கிறது எ‌ன்றா‌ர்.

எ‌கி‌ப்து ‌கிள‌ர்‌ச்‌சி ஒரே நா‌‌ளி‌ல் ‌‌திடீரென தொட‌ங்க‌ப்ப‌ட்டது அ‌ல்ல எ‌ன்று கூ‌றிய கார‌த், எ‌‌கி‌ப்து ம‌க்க‌ள் அனுப‌வி‌த்த து‌ன்ப‌ங்க‌ள் ‌ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் வி‌ஸ்வரூப‌ம் எடு‌த்து ‌கிள‌ர்‌ச்‌சியாக மா‌றியு‌ள்ளது எ‌ன்று கூ‌றினா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts