background img

புதிய வரவு

உடல் எடைக் குறைய

தினமும் கண்டிப்பாக ஐந்து கப் காய்கறி அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். தினமும் கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது.


* இஞ்சியை இடித்து சாறு எடுத்து பின் அதை அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.பின் இதை காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடுவது உறுதி.


* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றையும், தினமும் மாறி மாறி தொடர்ந்து குடித்து வர உடல் எடை படிபடியாகக் குறையும். உடல் அழகு பெறும்.


*அந்த சீசனில் கிடைக்கும் பழங்களை எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.


* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது உடல் எடையை குறைக்கும்.


*பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார்,பொரியல் செய்தும் சாப்பிடலாம்.


* முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது மிக நல்ல பலன்களை தரும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts