நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணியில் போட்டியிட்ட 41 தொகுதிகளில், 28தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபை எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த். இதற்காக அவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்ந்து தெரிவித்தார் நடிகர் பிரசன்னா. பின்னர் சினிமா தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் பேசினர். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, சினிமா துறைக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பாராட்டி பேசினார் பிரசன்னா. பின்னர் சினிமா துறைக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்வேன் என்று பிரசன்னாவிடம், விஜயகாந்த் உறுதியளித்தார்.
undefined
undefined
0 comments :
Post a Comment