நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்துள்ள கண்டேன் என்ற படம் சமீபத்தில் வெளியானது. படத்தில் சாந்தனு ஜோடியாக ரேஷ்மி நடித்திருக்கிறார். சந்தானத்தின் கலகல காமெடியும் இருக்கிறது. தியேட்டர்களின் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டு விட்டதாக சாந்தனுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கண்டேன் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர் என்றும், அதோடு திருட்டு வி.சி.டி கேசட்டாகவும் வெளியிட்டு விட்டார்கள் என்றும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
undefined
undefined
0 comments :
Post a Comment