background img

புதிய வரவு

Showing posts with label Kolkata Deam. Show all posts

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான் "ஆல்-ரவுண்டராக' அசத்த, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொண்டது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 65வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. புனே அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. கோல்கட்டா அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. "டாஸ்' வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சுழல் ஜாலம்:
புனே அணி துவக்கத்திலேயே திணறியது. யூசுப் பதான் சுழலில் ஜெசி ரைடர்(1) காலியானார். அப்துல்லா பந்தில் மனிஷ் பாண்டே(16) வெளியேறினார். பெர்குசன்(16) தாக்குப்பிடிக்கவில்லை. இதையடுத்து 3 விக்கெட்டுக்கு 44 ரன்கள் மட்டும் தத்தளித்தது. பின் கங்குலி, உத்தப்பா இணைந்து அணியை காக்க முயன்றனர். தன்னை புறக்கணித்த கோல்கட்டா அணிக்கு கங்குலி சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப அப்துல்லா பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். இம்மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. சாகிப் பந்தில் கங்குலி(18) பரிதாபமாக அவுட்டானார். யூசுப் பதான் வலையில் உத்தப்பாவும்(12) சிக்க, நிலைமை மோசமானது.
யுவராஜ் மந்தம்:
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய அறிமுக வீரர் சச்சின் ராணா, காலிஸ் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். மறுமுனையில் போராடிய கேப்டன் யுவராஜ், ஒரு நாள் போட்டி போல மந்தமாக ஆடியதால், ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. பாலாஜி வீசிய கடைசி ஓவரில் யுவராஜ்(24), ராணா(18) அவுட்டாகினர். புனே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது.
காம்பிர் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி. தாமஸ் வேகத்தில் கோஸ்வாமி(6) வீழ்ந்தார். பின் கேப்டன் காம்பிர், மனோஜ் திவாரி இணைந்து அசத்தினர். தாமஸ் பந்தில் திவாரி சிக்சர் அடித்தார்.பார்னல் ஓவரில் காம்பிர் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். புவனேஸ்வர் வேகத்தில் திவாரி(24) போல்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் அதிரடியாக ஆடினார். ராகுல் சர்மா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து புவனேஸ்வர் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மறுபக்கம் பவுண்டரிகளாக பறக்க விட்ட காம்பிர், அரைசதம் கடந்தார். பார்னல் பந்தில் கங்குலியின் சூப்பர் "கேட்ச்சில்' யூசுப்(29) அவுட்டானார். கோல்கட்டா அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. காம்பிர் (54), பாட்டியா(1)அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் வென்றார்.

ஸ்கோர் போர்டு
புனே வாரியர்ஸ்
ரைடர்(கே)திவாரி(ப)யூசுப் 1(6)
பாண்டே எல்.பி.டபிள்யு.,(ப)அப்துல்லா 16(12)
பெர்குசன்(ஸ்டம்)கோஸ்வாமி(ப)சாகிப் 16(19)
கங்குலி(கே)யூசுப்(ப)சாகிப் 18(22)
உத்தப்பா(கே)பிரட் லீ(ப)யூசுப் 12(19)
யுவராஜ்(கே)கோஸ்வாமி(ப)பாலாஜி 24(26)
ராணா(ப)பாலாஜி 18(16)
பார்னல்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 12
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 118
விக்கெட் வீழ்ச்சி: 1-9(ரைடர்), 2-17(பாண்டே), 3-44(பெர்குசன்), 4-71(கங்குலி), 5-79(உத்தப்பா), 6-113(யுவராஜ்), 7-118(ராணா).
பந்துவீச்சு: பிரட் லீ 4-0-28-0, யூசுப் 4-0-23-2, அப்துல்லா 3-0-12-1, காலிஸ் 2-0-18-0, சாகிப் 4-0-16-2, பாட்டியா 2-0-11-0, பாலாஜி 1-0-7-2.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
காம்பிர்-அவுட் இல்லை- 54(46)
கோஸ்வாமி(கே)உத்தப்பா(ப)தாமஸ் 6(3)
திவாரி(ப)புவனேஸ்வர் 24(24)
யூசுப்(கே)கங்குலி(ப)பார்னல் 29(25)
பாட்டியா-அவுட் இல்லை- 1(3)
உதிரிகள் 5
மொத்தம்(16.4 ஓவரில் 3 விக்.,) 119
விக்கெட் வீழ்ச்சி: 1-7(கோஸ்வாமி), 2-53(திவாரி), 3-117(யூசுப்).
பந்துவீச்சு: தாமஸ் 3-0-29-1, பார்னல் 4-0-27-1, சர்மா 4-0-29-0, புவனேஸ்வர் 3-0-19-1, யுவராஜ் 2-0-12-0, ராணா 0.4-0-2-0.

கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி! * புனே அணி பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது."வேகத்தில்' மிரட்டிய பாலாஜி, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி 81 ரன்களுக்கு சுருண்டு, ஏமாற்றம் அளித்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
பாலாஜி மிரட்டல்:
முதல் ஓவரே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பிரட் லீ அனல் பறக்க பந்துவீச... அதனை சக ஆஸ்திரேலிய வீரரான வாட்சன் எதிர்கொண்டதை காண முடிந்தது. போட்டியின் 3வது ஓவரை வீசிய பாலாஜி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் வாட்சன்(11) போல்டாக, கோல்கட்டா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்து வந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். பவுனிக்கர்(15), பசல்(3) ஏமாற்றினர். ராத்(11) ரன் அவுட்டானார். இக்பால் அப்துல்லா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த அசோக் மனேரியா ஓரளவுக்கு நம்பிக்கை தந்தார். யூசுப் பதான் பந்தில் ராஸ் டெய்லர்(6) வெளியேறினார். போட்டியின் 14வது ஓவரை வீசிய பாலாஜி இரட்டை "அடி' கொடுத்தார். முதல் பந்தில் ரஹானே(6) போல்டானார். 6வது பந்தில் மனேரியா(21) காலியானார். சாகிப் அல் ஹசன் சுழலில் அமித் சிங்(0), டெய்ட்(0) அடுத்தடுத்து அவுட்டாகினர். பிரட் லீ வேகத்தில் திரிவேதி(0) வெளியேற, ராஜஸ்தான் அணி 15.2 ஓவரில் 81 ரன்களுக்கு சுருண்டது.
கடந்த முறை சென்னை அணிக்காக விளையாடிய பாலாஜி, இம்முறை கோல்கட்டா அணி வீரராக அசத்தினார். இவர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
சுலப வெற்றி:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரிலேயே ஷான் டெய்ட் "ஷாக்' கொடுத்தார். இவரது வேகத்தில் அனுபவ காலிஸ் "டக்' அவுட்டானார். வார்ன் சுழலில் பிஸ்லா(9) சிக்கினார். இதற்கு பின் கேப்டன் காம்பிர், மனோஜ் திவாரி இணைந்து அசத்தலாக ஆடினர். மிகவும் விவேகமாக பேட் செய்த இவர்கள், துடிப்பாக ரன் சேர்த்தனர். இவர்களை வெளியேற்ற ராஜஸ்தான் கேப்டன் வார்ன் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. டெய்ட் ஓவரில் ஒரு இமாலய சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார் திவாரி. மறுபக்கம் காம்பிர் ஒரு பவுண்டரி அடித்து, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். கோல்கட்டா அணி 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. காம்பிர்(35), திவாரி(30) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே டெக்கான், ராஜஸ்தான் அணிகளை வென்ற கோல்கட்டா அணி மீண்டும் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, தொடரில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
ஆட்ட நாயகன் விருதை பாலாஜி வென்றார்.

மிக குறைந்த ஸ்கோர்
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 81 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இத்தொடரில் மிக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக, மும்பை அணிக்கு எதிராக டில்லி அணி 95 ரன்கள் எடுத்தது.
* ஐ.பி.எல்., அரங்கில் மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி(81 ரன்கள்). முதலிரண்டு இடத்தில் ராஜஸ்தான் (58 ரன்கள், எதிர்-பெங்களூரு, 2009), கோல்கட்டா (67 ரன்கள், எதிர்-மும்பை, 2008) அணிகள் உள்ளன.

ஸ்கோர் போர்டு
ராஜஸ்தான் ராயல்ஸ்
வாட்சன்(ப)பாலாஜி 11(13)
பவுனிக்கர்(ஸ்டம்)பிஸ்லா(ப)அப்துல்லா 15(15)
பசல்-ரன் அவுட்-(அப்துல்லா) 3(4)
ராத்-ரன் அவுட்-(சாகிப்/பிஸ்லா) 11(15)
மனேரியா(கே)பாட்டியா(ப)பாலாஜி 21(17)
ராஸ் டெய்லர்(ஸ்டம்)பிஸ்லா(ப)யூசுப் 6(9)
ரஹானே(ப)பாலாஜி 6(9)
வார்ன்-அவுட் இல்லை- 3(6)
அமித் சிங்(ப)சாகிப் 0(2)
டெய்ட்(ப)சாகிப் 0(1)
திரிவேதி(ப) பிரட் லீ 0(2)
உதிரிகள் 5
மொத்தம்(15.2 ஓவரில் ஆல் அவுட்) 81
விக்கெட் வீழ்ச்சி: 1-24(வாட்சன்), 2-28(பவுனிக்கர்), 3-38(பசல்), 4-43(ராத்), 5-67(டெய்லர்), 6-78(ரஹானே), 7-79(மனேரியா), 8-80(அமித் சிங்), 9-80(டெய்ட்), 10-81(திரிவேதி).
பந்துவீச்சு: பிரட் லீ 2.2-0-12-1, சாகிப் 4-0-21-2, பாலாஜி 3-0-15-3, அப்துல்லா 3-0-18-1, பாட்டியா 1-0-4-0, யூசுப் 2-0-10-1.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
காலிஸ்(கே)ராஸ் டெய்லர்(ப)டெய்ட் 0(2)
பிஸ்லா(கே)ராத்(ப)வார்ன் 9(22)
காம்பிர்-அவுட் இல்லை- 35(35)
திவாரி-அவுட் இல்லை- 30(26)
உதிரிகள் 11
மொத்தம்(13.5 ஓவரில் 2 விக்.,) 85
விக்கெட் வீழ்ச்சி: 1-0(காலிஸ்), 2-31(பிஸ்லா).
பந்துவீச்சு: டெய்ட் 3.5-0-29-1, வாட்சன் 4-0-20-0, வார்ன் 4-0-17-1, திரிவேதி 1-0-8-0, அமித் சிங் 1-0-7-0.

கோல்கட்டா அணிக்கு "ஹாட்ரிக்' வெற்றி!* சுருண்டது ராஜஸ்தான் அணி

ஜெய்ப்பூர்: கேப்டன் காம்பிர், காலிஸ் தூள் கிளப்ப, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் ஏமாற்றிய ஷேன் வார்ன் அணி, தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
வாட்சன் வருகை:
ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. அஜின்கியா ரகானே, டெய்ட் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், நயன் தோஷி வாய்ப்பு பெற்றனர். கோல்கட்டா அணியில் டசாட்டே, ஜெய்தேவ் உனத்கட் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக பிரட் லீ, சாகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டனர்.
டிராவிட் ஆறுதல்:
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு அமித் பவுனிகர் (9) மோசமான துவக்கம் அளித்தார். பின் இணைந்த டிராவிட், மேனரியா ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கோல்கட்டா பவுலர்கள் திணறினர். இந்நிலையில் கேப்டன் காம்பிர், யூசுப் பதானை பந்துவீச அழைத்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. யூசுப் பதான் வீசிய ஆட்டத்தின் 12வது ஓவரின் 3வது பந்தில் டிராவிட் (35) போல்டானார். அதே ஓவரின் 5வது பந்தில் மேனரியா (27), யூசுப் பதானிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.
டெய்லர் அதிரடி:
பின் இணைந்த வாட்சன், ராஸ் டெய்லர் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. சமீபத்திய வங்கதேச தொடரில் சிக்சர் மழை பொழிந்த வாட்சன், நேற்று பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர், 13 பந்தில் 2 சிக்சர் உட்பட 22 ரன்கள் எடுத்து, சாகிப் சுழலில் போல்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய டெய்லர், பாலாஜி வீசிய ஆட்டத்தின் 16வது ஓவரில் இரண்டு "சிக்சர்' விளாசினார். இவருக்கு ஜோகன் போத்தா ஒத்துழைப்பு அளித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. டெய்லர் (35), போத்தா (12) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் சாகிப் அல் ஹசன், யூசுப் பதான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
காம்பிர் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு, மன்வீந்தர் பிஸ்லா (1) "ரன்-அவுட்டாகி' ஏமாற்றினார். பின் இணைந்த காலிஸ், காம்பிர் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய காம்பிர், ஐ.பி.எல்., அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த காலிஸ், ஐ.பி.எல்., அரங்கில் தனது 13வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியாக ரன் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காலிஸ் (80 ரன்கள், 65 பந்து), காம்பிர் (75 ரன்கள், 44 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகனாக கோல்கட்டா அணியின் கேப்டன் காம்பிர் தேர்வு செய்யப்பட்டார்.
"ஹாட்ரிக்' அரைசதம்
நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோல்கட்டா அணியின் காலிஸ், 65 பந்தில் 80 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம், இம்முறை தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக இவர், சென்னை (54), டெக்கான் (53) அணிகளுக்கு எதிராக அரைசதம் கடந்தார்.
* இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், அதிக அரைசதம் கடந்த வீரர்கள் வரிசையில் காலிஸ், தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர், 45 போட்டிகளில் பங்கேற்று 13 அரைசதம் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் தலா 9 அரைசதம் அடித்துள்ள சச்சின் (மும்பை), காம்பிர் (கோல்கட்டா+டில்லி), ரெய்னா (சென்னை) ஆகியோர் உள்ளனர்.
---
ஸ்கோர் போர்டு
ராஜஸ்தான் ராயல்ஸ்
பவுனிகர் (கே)காலிஸ் (ப)சாகிப் 9(15)
டிராவிட் (ப)யூசுப் 35(34)
மேனரியா (கே)+(ப)யூசுப் 27(21)
வாட்சன் (ப)சாகிப் 22(13)
டெய்லர் -அவுட் இல்லை- 35(25)
போத்தா -அவுட் இல்லை- 12(12)
உதிரிகள் 19
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 159
விக்கெட் வீழ்ச்சி: 1-26(பவுனிகர்), 2-78(டிராவிட்), 3-79(மேனரியா), 4-124(வாட்சன்).
பந்துவீச்சு: பிரட் லீ 4-0-29-0, பாலாஜி 4-0-31-0, காலிஸ் 4-0-31-0, சாகிப் 4-0-31-2, பட்டியா 1-0-12-0, அப்துல்லா 2-0-14-0, யூசுப் 1-0-4-2.
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
பிஸ்லா -ரன் அவுட்-(பசால்/பவுனிகர்) 1(3)
காலிஸ் -அவுட் இல்லை- 80(65)
காம்பிர் -அவுட் இல்லை- 75(44)
உதிரிகள் 4
மொத்தம் (18.3 ஓவரில், ஒரு விக்.,) 160
விக்கெட் வீழ்ச்சி: 1-8(பிஸ்லா).
பந்துவீச்சு: மேனரியா 2-0-18-0, அமித் சிங் 2.3-0-26-0, வாட்சன் 2-0-18-0, தோஷி 2-0-23-0, போத்தா 2-0-13-0, வார்ன் 4-0-28-0, திரிவேதி 4-0-34-0.

காம்பிர் அதிரடி: கோல்கட்டா அணி வெற்றி *ராஜஸ்தான் ராயல்ஸ் ஏமாற்றம்

முக நூல்

Popular Posts