background img

புதிய வரவு

Showing posts with label Latter. Show all posts

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில்,

’’ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் விக்டஸ், அந்தோணி, ஜான்பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் 2-ந் தேதி அதிகாலையில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரண்டு நாளாகியும் அவர்கள் திரும்பி வர வில்லை.

அந்தப் பகுதி மீனவர்கள் கடலில் சென்று தேடியபோது, அவர்கள் சென்ற படகையும் காணவில்லை. முதல் நாள், அந்தப்பகுதியில் இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தை, இதர மீனவர்கள் பார்த்துள்ளனர்.

எனவே, இலங்கை கடற்படையினர் இந்தப் படகை கடத்தி சென்று இருக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கருதுகிறார்கள்.

கடத்தி செல்லப்பட்ட மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி, அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வைகோ கடிதம்

முக நூல்

Popular Posts