background img

புதிய வரவு

Showing posts with label Mahendra singh dhoni. Show all posts

லண்டன்: விளம்பர உலகில் செல்வாக்குமிக்க விளையாட்டு வீரர்கள் வரிசையில் இந்திய கேப்டன் தோனி முன்னணியில் இருக்கிறார். இவர், நடால், கோப் பிரயண்ட் போன்ற சர்வதேச நட்சத்திரங்களை முந்தி, 10வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் இவரது தலைமையிலான அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது. சமீபத்தில் 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றினார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்று தந்தார்.
இவர் தொட்டதெல்லாம் பொன்னாக, விளம்பர நிறுவனங்களை மொய்க்க துவங்கின. தங்களது பொருட்களுக்கு "மாடலாக' தோன்ற இவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்தன. லண்டனில் இருந்து வெளியாகும் "ஸ்போர்ட்ஸ் புரோ' என்ற பத்திரிகையின் சமீபத்திய கணிப்பின்படி தென் கிழக்கு ஆசியாவின் "நம்பர்-1' விளம்பர நட்சத்திரமாக தோனி திகழ்கிறார்.
யுவராஜ் 49வது இடம்:
இப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால், அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிரயன்ட் ஆகியோரை முந்திய தோனி 10வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உள்ளார். கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெசி முறையே மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனர். சீனாவின் பிரபல கூடைப்பந்து வீரர் யாவ் மிங் 11வது இடத்தை பெற்றுள்ளார். உலக கோப்பை போட்டிகளில் அசத்தி தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் யுவராஜ் சிங் 49வது இடத்தை பிடித்துள்ளார். "டாப்-10' பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் நட்சத்திரம் என்ற பெருமையை "டென்னிஸ் புயல்' கரோலின் வோஸ்னியாக்கி(9வது இடம்) பெறுகிறார்.
இது குறித்து "ஸ்போர்ட்ஸ் புரோ' பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் குஷன் கூறுகையில்,""உலக கோப்பை வென்ற பின் தோனியின் புகழ் விளம்பர உலகில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் சச்சின் அளவுக்கு பேராதரவு இல்லை. ஆனாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தங்களது பெருட்களை விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்களின் "நம்பர்-1' தேர்வாக தோனி திகழ்கிறார்,''என்றார்.

விளம்பர உலகின் "ஹீரோ' தோனி!

புது தில்லி, பிப்.2: இந்த முறை உலகக் கோப்பையை வென்று சச்சின் டெண்டுல்கருக்கு பரிசாக அளிப்போம் என்று இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
நாங்கள் அனைவரும் டெண்டுல்கர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறோம். இந்த உலகக் கோப்பை அவருக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம். ஆனாலும் அவர் இன்னும் பல உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். இப்போதுள்ள அணி திறமையான, மிகச்சிறந்த அணியாகும் என்றார்.
இந்த உலகக் கோப்பையில் எந்த அணிகளெல்லாம் சிறப்பாக விளையாடும் என்று கேட்டபோது, அதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்த தோனி, நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இப்போது எங்களுடைய சிந்தனை எல்லாம் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தைப் பற்றி மட்டும்தான் உள்ளது என்றார்.
உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து பேசிய அவர், மிகுந்த மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்தார். இந்திய அணியின் ஒரே விக்கெட் கீப்பர் நான் மட்டும்தான் என்பது எனக்குத் தெரியும். அதற்காக கவலைப்படவில்லை என்றார்.

சச்சினுக்கு உலகக் கோப்பையை பரிசளிப்போம்: மகேந்திர சிங் தோனி

முக நூல்

Popular Posts