background img

புதிய வரவு

Showing posts with label Mayawati. Show all posts

லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதிக்கு எதிராக முலாயம்சிங் அறிவித்த போõராட்டத்தை அடுத்து அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை, விலைவாசி உயர்வு, மாயாவதியின் போக்கு உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியினர் இன்று முதல் 3 நாள் தொடர் ஆர்ப்பாட்டம், மற்றும் பேரணி, மறியல் என போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

வலுவிழக்க செய்யும் மாயாவதி அரசின் நோக்கம் : இதனையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை விக்கிரமாதித்தியா மார்க் பகுதியில் உள்ள முலாயம்சிங் வீட்டை சுற்றிலும் போலீசார் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டனர். இதனால் முலாயம் சிங் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இது போன்று வீட்டுக்காவலில் வைத்து போராட்டத்தை வலுவிழக்க செய்யும் மாயாவதி அரசின் நோக்கம் என முலாயம் குற்றம் சாட்டினார்.

லோக்சபா சபாநாயகருக்கு கடிதம்: இது குறித்து, இன்றைய லோக்சபா கூட்டத்தில் பங்கேற்க முடியாத அளவிற்கு நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன் ,இதனால் மாநில அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார்.

இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் கூறுகையில்; முலாயம்சிங் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை. பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

சில மணி நேரம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டதாக முலாயம் கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

முக்கிய வீதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாயாவதியின் அலுவலகத்தை சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் பூட்டி சீல் வைத்தனர். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என மாஜிஸ்திரேட் மறுத்துள்ளார்.

முலாயம்சிங்கிற்கு வீட்டுக்காவல்: 15 ஆயிரம் பேர் கைது ;மாயாவதி ஆபீசுக்குசீல் வைத்த சமாஜ்வாடி தொண்டர்கள்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக, சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் மாயாவதியின் பாதுகாப்பிற்கு மட்டும் ரூ.200 கோடி செலவழிக்கப்பட்டு இருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கடந்த ஒரு மாதமாக 72 மாவட்டங்களில் மறு ஆய்வு சுற்று பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இவரது பயணம் முடிந்தது. இந்நிலையில், நேற்று அம்மாநில கவர்னர் பி.எல். ஜோஷியை சந்தித்து அரை மணி நேரம் மாயாவதி பேசினார். இச்சந்திப்பின் போது அம்மாநில அமைச்சரவை செயலர் ஷஷாங் சேகர் சிங் உடனிருந்தார். இச்சந்திப்பு பற்றி கவர்னர் மாளிகை அளித்த பதிலில், "மாநில கவர்னர் மற்றும் முதல்வரின் சந்திப்பு வழக்கமான மரியாதை நிமித்தமான ஒன்று' என்று தெரிவித்துள்ளது. சுற்று பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் மாயாவதி, 72 மாவட்டங்களின் நிலை குறித்து கவர்னரிடம் கருத்துக்களை பரிமாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது பயணத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் கூறுகையில், "உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்கு மட்டும் ரூ. 200 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அரசின் தவறான நடவடிக்கைகளை மக்களின் மனதில் இருந்து திசை திருப்ப பயணம் மேற்கொண்டுள்ளார். அரசின் உண்மை நிலவரத்தை சொல்ல விடாமல் தடுக்க சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவரை சந்திக்க முயற்சித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பயணத்தின் போது இவர் பேசியவை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டவை. பகுஜன் சமாஜ் கட்சி ஏழை மக்களுக்கு உழைக்கும் கட்சி அல்ல. சுயநலத்திற்கு உழைக்கும் கட்சி என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்' என்றார்.

மாயாவதியின் ஒருமாத பாதுகாப்பு செலவு ரூ.200 கோடி

முக நூல்

Popular Posts