background img

புதிய வரவு

Showing posts with label Next film. Show all posts

மும்பை: இம்ரான் கானை வைத்து தான் எடுக்கும் டெல்லி பெல்லி படத்தில் குத்துப்பாட்டுக்கு தீபிகாவை எடுக்கலாமா அல்லது கத்ரீனாவை கேட்கலாமா என்று ஆமிர் கான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டு இல்லாமல் படங்கள் வருவதில்லை. முன்பெல்லாம் குத்துப் பாட்டுக்கு ஆட தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தனர். தற்போது கதாநாயகிகளே நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

தீஸ் மார் கான் படத்தில் கத்ரீனாவும், தம் மாரோ தம்மில் படுகவர்ச்சியாக தீபிகாவும் ஆடியுள்ளனர். இந்நிலையில் குத்துப்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்த ஆமிர் தான் தயாரிக்கும் டெல்லி பெல்லி படத்தில் ஒரு குத்துப்பாடல் வைக்கவுள்ளார். இதில் ஆட தீபிகா, கத்ரீனா கைப் மற்றும் மல்லிகா ஷெராவத் பெயர்கள் அடிபடுகிறது.

எங்கு பார்த்தாலும் ரன்பிர் கபூரின் முன்னாள் காதலிகளான தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் தான் போட்டியாக இருக்கிறது. பார்க்கலாம் ஆமிர் யாரைத் தான் தேர்வு செய்கிறார் என்று.

குத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா? குழப்பத்தில் ஆமிர் கான்

கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு தனது புதிய படத்தில் நடிக்கக் கிளம்பி விட்டார் கார்த்தி.

கடைசியாக கார்த்தி நடித்த படம் சிறுத்தை. இப்படத்திற்குப் பிறகு அடுத்த படமாக சகுனியில் நடிக்கிறார் கார்த்தி.

புதியவரான ஷங்கர் தயாள் சர்மா இயக்கும் இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பி.ஜி. முத்தையா கேமராவைக் கையாளுகிறார், ஆர்ட்டைக் கவனிக்கிறார் ராஜீவன்.

கடந்த வாரம்தான் கார்த்திக்கும், கோவையைச் சேர்ந்தவரான ரஞ்சனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது நடந்த கையோடு நடிக்க கிளம்பி விட்டார் கார்த்தி.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். சிறுத்தையைப் போலவே இதுவும் பக்கா மசாலாப் படமாம்.

படத்திற்கான நாயகி இதுவரை முடிவாகவில்லை. அவரைத் தேடி வருகிறார்களாம். யாராவது மும்பை முகம் நாயகியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

கார்த்தியின் அடுத்த ஆட்டம் 'சகுனி'

பிரபல இ‌யக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் வல்லவராயன் வந்தியதேவனாக விஜய், அருள்மொழி வர்மானாக ஆர்யா, ஆதித்த கரிகாலனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கின்றனர். முதலாம் ராஜராஜசோழனின் வரலாற்றை விளக்கும் இந்த படம் மணிரத்னத்தின் கனவுத் திட்டம்.மணிரத்னம் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ் படம் இயக்குகிறார். ஜெயமோகனின் துணையுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கதையை ஏற்கனவே சினிமாவாக எடுக்க முயற்சி செய்த கமலும் அவ்வப்போது சில யோசனைகளைக் கூறிவருகிறார். இந்த சினிமாவை உருவாக்கும் பணியில் ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் சிவன், சாபு சிறியல், ஸ்ரீகர் பிரசாத ஆகியோர் உள்ளனர். அகடோபரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது; தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கும் இதன் மொத்த பட்ஜெட் 100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் அனுஷ்கா

முக நூல்

Popular Posts