background img

புதிய வரவு

Showing posts with label Simbu. Show all posts

சிம்பு - அனுஷ்கா ஜோடி நடித்துள்ள வானம் பட இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்காவை புகழ்ந்து தள்ளினார் நடிகர் சிம்பு. அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சிம்பு தற்போது வானம் படத்தில் நாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் எவன்டி உன்னப் பெத்தான்... எனத் தொடங்கி தொடரும் ஒரு பாடலை எழுதி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுஒருபுறம் இருக்க தடபுடலாக இசை வெளியீட்டு விழாவை நடத்தி முடித்திருக்கிறார் சிம்பு. இசை வெளியீட்டு விழாவில் வானத்தை வெளியிடும் கிளவுட் நைன் மூவிஸ் தயாநிதி அழகிரி, சிம்பு, அனுஷ்கா, தயாரிப்பாளர்கள் வி.டி.வி.கணேஷ், ஆர்.கணேஷ், பரத், சோனியா அகர்வால், சரன்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, டைரக்டர் வெற்றிமாறன், வானம் டைரக்டர் கிரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிம்பு அனுஷ்காவை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளினார். இந்த படத்தின் டைரக்டர் கிரிஷ் 10 கவுதம் மேனன், 20 பாலாவுக்கு சமம். ஏனென்றால் அவரை சிபாரிசு செய்தவர் அனுஷ்கா. இந்த படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீ-மேக்தான் வானம். தெலுங்கில் நாயகியாக அனுஷ்காதான் நடித்திருந்தார். கிரிஷ் இயக்கியிருந்தார். படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்ததுமே கதாநாயகியாக அனுஷ்காவையே நடிக்க வைக்க முடிவு செய்தோம். அனுஷ்கா சிபாரிசின் பேரில் நானும், தயாரிப்பாளர் கணேசும் டைரக்டர் கிரிஷை அழைத்து பேசினோம். 10 நிமிடங்கள்தான் பேசினோம். அந்த பத்து நிமிடமும் வேதம் படத்தில் அவர் செய்த தவறுகளை மட்டுமே பேசினார். அந்த கதையில் எந்த அளவுக்கு அவருக்கு ஈடுபாடு இருந்தால், செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவார் என்று கருதி, அவரையே டைரக்டராக ஒப்பந்தம் செய்தோம், என்று கூறியதுடன், அனுஷ்கா நல்ல நடிகை; சூட்டிங் நேரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார், என்றும் கூறினார் சிம்பு.

அனுஷ்காவை புகழ்ந்து தள்ளிய சிம்பு!

வானம் படத்தில் சிம்பு எழுதி பாடிய எவன்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்ற பாடல் இந்திக்கு போகிறது.

அங்கும் சிம்புவே இதை மொழி பெயர்த்து பாடப்போகிறாராம். பிரபல ஆடியோ நிறுவனமொன்று இதனை வீடியோ ஆல்பமாக வெளியிடப் போகிறதாம்.

இந்தியில் சிம்பு பாடல்

சிம்புதேவனின் புதிய படத்தில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வந்தது நினைவிருக்கும். லேட்டஸ்ட் தகவல், தனுஷுக்குப் பதில் சிம்பு நடிக்கிறாராம்.

முதலில் ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்வதும், பிறகு அவருக்குப் பதில் வேறொருவரை நடிக்க வைப்பதும் திரையுலகில் சகஜம். இதில் ஏது வம்பு இருக்கப் போகிறது? ஆனால் படத்துக்கு உலகம் என்ற டைட்டிலை வைத்திருப்பதாக கசிந்துள்ள தகவல்தான் வேறு மாதி‌ரி எண்ண வைக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு சிம்பு லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விஜ‌ய்க்கு கதை சொல்லிய லிங்கு ஆர்யாவை வைத்து வேட்டை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். இதனை அறிக்கை மூலம் கண்டித்த சிம்பு உடனடியாக வேட்டை மன்னன் என்ற பெய‌ரில் ஒரு படத்தை அறிவித்தார்.

இதேதான் சிம்புதேவன் படத்திலும் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயர் இரண்டாம் உலகம். சிம்புதேவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், உலகம்.

எந்த வம்புக்கும் போகாத சிம்புதேவன் இதற்கெல்லாம் ச‌ரியான முடிவை கண்டடைவார் என்கிறார்கள் அவரைச் சார்ந்தவர்கள். அந்த முடிவு மீண்டும் தனுஷை நடிக்க வைப்பதாகவும் இருக்கலாம்.

சிம்புவின் வம்பு

முக நூல்

Popular Posts