background img

புதிய வரவு

Showing posts with label Actress. Show all posts

நடிகை வனிதாவுக்கும் அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை இருவரும் தங்களிடம் ஒப்படைக்க கோரி போராடி வருகின்றனர். தற்போது விஜய் ஸ்ரீஹரி ஆகாஷ் வசம் இருக்கிறான். அவனை தன்னிடம் ஒப்படைக்கும்படி வனிதா வற்புறுத்தி வருகிறார்.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “விஜய் ஸ்ரீஹரி வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்றும் மற்ற நாட்கள் ஆகாஷ் பாதுகாப்பில் இருக்க வேண்டும்” என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு தீர்ப்புப்படி மகனை ஆகாஷ் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வனிதா நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இப்பிரச்சினை மீது போலீசார் விசாரணை நடத்தினர். விஜய் ஸ்ரீஹரியிடம் போலீசார் பேசினர். அப்போது அவன் வனிதாவுடன் செல்ல பிடிவாதமாக மறுத்து விட்டான்.

இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தியது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வற்புறுத்தி வனிதா இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

காலை 12 மணிக்கு படுக்கையுடன் சாலிகிராமம் லோகையா வீதி 5-வது குறுக்கு தெருவில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். தனது பெண் குழந்தையையும் உடன் அழைத்து வந்தார். ஆகாஷ் வீட்டு முன் படுக்கையை விரித்தார். அதில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வனிதாவிடம் அவர்கள் சமரசம் பேசினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பது பற்றி வனிதா கூறியதாவது:-

எனது மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கடந்த 7 மாதங்களாக ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வந்து விட்டேன். ஆனாலும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.

என் குழந்தையை என்னுடன் அனுப்ப ஆகாஷ் மறுக்கிறார். என்னைப் பற்றி தவறான தகவல்களை ஸ்ரீஹரியிடம் சொல்லி என்னுடன் சேர விடாமல் மிரட்டுகிறார். என் குழந்தை இல்லாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்.

தண்ணீர், சாப்பாடு, கூட சாப்பிட மாட்டேன். இங்கிருந்து என் குழந்தையோடுதான் செல்வேன். இல்லையென்றால் சாவேன். ஆகாஷ் செய்யும் தவறை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் தவறு செய்கிறார்கள்.

என் குழந்தை என்னிடம் சேராமல் இருப்பதற்கு போலீசாரும் ஒரு காரணம். இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என் குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

பெத்த குழந்தையை மீட்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்சினைக்கு பின்னால் என் தந்தை இருக்கிறார். கோர்ட்டு உத்தரவுபடி என் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு வனிதா கூறினார்.

வனிதா உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுபடி விஜய் ஸ்ரீஹரி விருப்பபட்டால் வனிதாவை 3 நாட்கள் சந்திக்கலாம். அவன் தனது தாயாரை பார்க்க விருப்பம் இல்லாத பட்சத்தில் அவனை சமாதானப்படுத்தி தாயார் வனிதாவிடம் அனுப்பலாம். ஆனால் அவன் போக மறுக்கிறான். தாயார் குழந்தையிடம் அன்பாக இருந்தால் பாசத்துடன் செல்லும். அவனை வனிதாவிடம் செல்ல கட்டாயப்படுத்தினால் அவரிடம் செல்ல மறுத்து அடம் பிடிக்கிறான்.

அதனால் மனோத்துவ டாக்டரை அணுகி குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறேன். 3 வருடம் குழந்தை ஹரி வனிதாவிடம் இருந்தது. இப்போது 3 நாள் அவருடன் அனுப்புவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. என்னிடம் இருந்து அவன் செல்ல மறுக்கிறான். ஆனால் வலுக்கட்டாயமாக வனிதா இழுப்பதால் வெறுக்கிறான். இதனால் திடீர் என்று அவன் எப்படி மாறுவான்.

இவ்வாறு ஆகாஷ் கூறினார்.

மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிகை வனிதா உண்ணாவிரதம்

கவர்ச்சி கன்னியாக, கனவு தேவதையாக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி நமீதா, ஹீரோவாக களம் இறங்குகிறார் என்றால் நம்பமுடியாமல் தான் இருக்கும், இனி அவர் தூங்காமல் இருக்கப் போகிறார், பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில், எஸ்.ஆர்.மனோகரன் தயாரிப்பில், பிரபல இயக்குநர் மங்கை அரிராஜன் இயக்கத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

சாதாரண கேரக்டரில் இல்ல, காக்கி சட்டையில் கலக்கப் போகிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார் நமீதா. "இ‌ளமை ஊஞ்சல்" என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இப்படம், சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், மற்றும் பிரான்சில் படமாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

ஹீரோவாகிறார் நமீதா!

மும்பை: லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை வைக்கப்பட உள்ளது.

பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் கரீனா கபூர். பெரிய படமா, கூப்பிடு கரீனாவ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். நடிக்க வந்த புதிதில் கொளுக், மொழுக் என்றிருந்த கரீனா தற்போது சைஸ் ஜீரோவாக உள்ளார்.

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் தங்கள் கனவுக் கன்னி கரீனா கபூரின் மெழுகுச் சிலையை வைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பட்டாளம் வேண்டுகோள் விடுத்தது. இதையேற்று தற்போது கரீனாவுக்கு மெழுகுச்சிலை வைக்கப்படவுள்ளது.

கரீனா, ஆமிர் கானுடன் புதுவையில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அது முடிந்தவுடன் இங்கிலாந்து சென்று இது குறித்து அதிகாரிகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மேடம் டுசாட்ஸில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன் மெழுகுச் சிலைகள் உள்ளன. இந்த வரிசையில் இப்பொழுது கரீனாவும் சேர்ந்துள்ளார்.

அழகுச் சிலை கரீனாவுக்கு லண்டனில் மெழுகுச் சிலை

மும்பை: அருகே மலத் என்ற இடத்தில் ஹேமமாலினியின் பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்குள் இன்று ஒரு சிறுத்தை புகுந்து விட்டது. இதையடுத்து வனத்துறைக்குத் தகவல் போனது.

தற்போது வனத்துறை ஊழியர்கள் குழு ஹேமமாலினியின் பங்களாவுக்கு விரைந்துள்ளது. சிறுத்தை புகுந்த வீட்டில் தற்போது ஹேமமாலினி இல்லை.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில வனத்துறை அமைச்சர் பதங்கராவ் கதம் கூறுகையில், இதுகுறித்து வனத்துறையினரிடம் விவரம் கோரியுள்ளேன். எப்படி அங்கு சிறுத்தை வந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

ஹேமமாலினியின் வீட்டுக்குள் சிறுத்தை புகுந்த செய்தி மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை ஹேமமாலினி வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது

ஆறடி உயர அல்வாத்துண்டு என வர்ணிக்கப்படும் அனுஷ்காவை உரசிப்பார்த்த ரசிகர்களால் சூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ரெண்டு படம் மூலம் அறிமுகமாகி, அருந்ததீ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுஷ்கா. இவர் சமீபத்தில் வெளிப்புற படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க சென்றார். தங்கச் சிலைபோல தகதகத்த அனுஷ்காவிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடி விட்டனர். ஆட்டோகிராப் கேட்டு அவரை ‌நெருங்கிய ரசிகர்கள் சிலர் கதகதப்புக்கா அனுஷ்காவை உரசியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அனுஷ்கா, வாய்க்கு வந்தபடி ரசிகர்களை திட்டித் தீர்த்து விட்டாராம்.

இதையடுத்து அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு அனுஷ்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் தெரியாமல் இடித்த ரசிகரை இப்படி திட்டியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், என்று அவர்கள் கூறியதுடன், மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது, என்று கூச்சல் போட ஆரம்பித்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அனுஷ்கா சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!

ஒரு படத்தில் காமெடி நடிகர் வடிவேலு த்ரிஷா... த்ரிஷா... என்று த்ரிஷா புராணம் பாடிக் கொண்டிருப்பார். கடைசியில் அவருக்கு த்ரிஷா கிடைக்க மாட்டார். அதனால் விரக்தியடையாத அவர், த்ரிஷா இல்லன்னா திவ்யா... என்று டயலாக் பேசி மனதை திடப்படுத்திக் கொள்வார். அந்த நிலைமைதான் கோடம்பாக்கத்தில் டைரக்டராக அறிமுகமாக துடிக்கும் பல இளம் இயக்குனர்களின் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

த்ரிஷாவுக்காகவே கதையை உருவாக்கிக் கொண்டு த்ரிஷா வீட்டு வாசலில் கதை சொல்ல காத்து கிடக்கிறது ஒரு கூட்டம். இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கோடம்பாக்கத்திற்கு படையெடுப்பவர்களில் பலர் த்ரிஷாவை வைத்து ஒரு படமாவது பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டு கால் கடுக்க காத்திருக்கிறார்கள் அந்த இளம் இயக்குனர்கள். ஆனால் அம்மணியோ, அனுபவம் இல்லாத இளம் இயக்குனர்களை தவிர்த்து வருகிறார்.

இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு போன்ற படங்கள்தான் என் அடையாளமாக இருக்கும் என நினைக்கிறேன். இத்தனைப் படங்களில் நடித்த பின்னர் மூன்று படங்கள்தான் என் அடையாளம் என சொல்லும் அளவுக்கு இருக்கிறது. இனி என்னை அடையாளப்படுத்தும் படங்களில்தான் நடிக்கப் போகிறேன். நிறைய அறிமுக இயக்குநர்கள் கதை சொல்ல காத்திருக்கிறார்கள். நான்தான் தவிர்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

த்ரிஷாவை மொய்க்கும் டைரக்டர்கள்!

மாண்டலின் ராஜேஷை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக உள்ளதால், இனி சினிமாவில் நடிப்பதில்லை என நடிகை மீரா ஜாஸ்மின் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் இளைஞன்.

மீரா ஜாஸ்மினும் மாண்டலின் இசை கலைஞர் ராஜேசும் நீண்ட நாள்களாக காதலித்து வருகின்றனர். படங்களில் நடித்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தார்.

ஆனால் தற்போது அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி உள்ளிட்ட புது நாயகிகள் வரத்தால் மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. சமீபத்தில் ரிலீசான படங்களும் நன்றாக ஓடவில்லை. எனவே மாண்டலின் ராஜேஷை விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துள்ளாராம்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலையாள பட உலகில் தகவல் பரவியுள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டாராம் மீரா ஜாஸ்மின்.

சமீபத்தில் நடந்த மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் 'அம்மா'வின் நிகழ்ச்சியில் மீரா பங்கேற்கவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இனி யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. காரணம் இனி சினிமாவில் நடிப்பதாகவும் இல்லை," என்றார்.

மாண்டலின் ராஜேசுடன் திருமணம்: மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு குட்பை!

பிரபல இந்தி நடிகர் நிதின் முகேஷ்வுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளில் இச்செய்தி வெளி வந்துள்ளது. இந்தி கஜினி மூலம் அசின் மும்பை சென்றார். அது ஹிட்டானதால் ஒரு படத்திலேயே உலகெங்கும் பிரபல மானார்.

லண்டன் டீரிம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். ரெடி படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். சல்மானையும் அசினையும் இணைத்து வதந்திகள் பரவியது. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. இருவரும் அதை மறுத்தனர்.

இந்த நிலையில் நிதின் முகேசை காதலிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அசினுக்காக தயாரிப்பாளர்களிடம் நிதின் வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. தனது படங்களில் அவரை ஜோடியாக்கவும் நிர்ப்பந்திக்கிறாராம். ஆனால் இது வெறும் வதந்திதான் என்று நிதின் மறுத்தார். நட்பாக பழகினாலே காதல் என கதை கட்டி விடுகின்றனர் என்றார்.

இந்தி நடிகர் நிதின் முகேசுடன் அசின் காதல்?

ஹீரோயின் என்ற படத்துக்காக ஆடையில்லாமல் முழு நிர்வாணத்துடன் நடிக்கிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் முன்பு பெங்காலி படத்தில் அரை நிர்வாணமாய் நடித்து பரபரப்பூட்டினார். பின்னர் அது தாசி எனும் பெயரில் தமிழில் வெளியானது.

இந்நிலையில் 'ஹீரோயின்' எனும் படத்தில் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தப் படத்தில், நிர்வாண காட்சியில் நடிக்க முதலில் தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றிய கதை இது.

பொதுவாக மதுர் பண்டார்கள் படம் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. நடிகையை மையப்படுத்தி வரும் இந்தப் படத்தில் என்னென்ன சர்ச்சைகளை கிளப்பப் போகிறாரோ மதுர் பண்டார்கர், என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.

ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்!

இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தேசிய விருதுகள் டில்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தமிழ் நடிகர் தனுஷூம், சிறந்த நடிகைக்கான விருதுக்கு தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த துணை நடிகருக்கான விருது மைனா படத்தில் நடித்ததற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.

58வது தேசிய விருதுகள் விபரம்:

சிறந்த நடிகருக்கான விருது, சலிம் குமார் மற்றும் தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த நடிகைக்கான விருது, "தென்மேற்கு பருவக்காற்று" படத்திற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும், "பாபூ பந்த் பாஜா" படத்திற்காக மராட்டிய நடிகை மிடாலிக்கும் கிடைத்திருக்கிறது.

சிறந்த துணை நடிகருக்கான, விருது "மைனா" படத்திற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த துணை நடிகைக்கான விருது, "நம் கிராமம்" என்ற படத்திற்காக சுகுமாரிக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த தமிழ் படத்திற்கான விருது "தென்மேற்கு பருவக்காற்று" படத்திற்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநருக்கான தங்கத்தாமரை விருது, வெற்றி மாறனுக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த நடனத்திற்கான விருது, தினேஷ் குமாருக்கு கிடைத்திருக்கிறது.

இந்திய அளவில் சிறந்த படத்திற்கான விருது, மலையாளத்தில் வெளிவந்த "அதாமந்தே மகன் அபு" படத்திற்கு கிடைத்திருக்கிறது.

இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்கு படமாக சல்மான் நடித்த "தபாங்" படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிவியல் படத்திற்கான விருது, "ஹார்ட் அன்ட் ஹார்ட்" படத்திற்கு கிடைத்திருக்கிறது

சிறந்த விளையாட்டு படத்திற்கான விருது, "பாக்சிங் லேடிஸ்" படத்திற்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது, "லிவிங் ஹோம்" படத்திற்கு கிடைத்திருக்கிறது.

சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது!

ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் என்று நடிகை தீபிகா படுகோன் கூறினார்.

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம், ரானா. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்க விழா, சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த மாதம் 29ந் தேதி நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். படப்பிடிப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அன்று பிற்பகல் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9ந் தேதி வரை அவர் அங்கு சிகிச்சை பெற்றார்.

கடந்த 13ந் தேதி மாலை அவர் சென்னையை அடுத்த போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நலக்குறைவு காரணமாக, ரானா' படம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வதந்திகள் பரவின. அந்த வதந்திகளை டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் மறுத்தார். ரஜினிகாந்த் குணம் அடைந்து வீடு திரும்பியபின், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டபின், ரானா படப்பிடிப்பு தொடரும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோன் அளித்துள்ள பேட்டியில்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். ரானா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தொடக்க விழா அன்றுதான் அவரை முதன்முதலாக நேரில் பார்த்தேன்.

எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு எங்கிருந்து இவ்வளவு சக்தி கிடைக்கிறது? என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அன்று அவர் உடல்நலக்குறைவாக இருந்தார்.

ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ரானா' படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன் என்றார்.

ரஜினிக்காக பிரார்த்தனை: தீபிகா படுகோன்

தமிழ் சினிமாவில் தன்னை கவர்ச்சியாக மட்டுமே காட்டி வருகின்றனர். இது எனக்கு பிடிக்கவில்லை, இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கோபத்துடன் கூறுகிறார் நடிகை நமீதா.

விஜயகாந்தின் "எங்கள் அண்ணா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை நமீதா. முதல்படத்தில் சற்று ஹோம்லியாக நடித்தாலும் அதற்கடுத்து வந்த மற்ற படங்களில் எல்லாம் தன்னுடைய அதிரடி கவர்ச்சியால், தமிழக ரசிகர்களை கிரங்க வைத்தார். குறிப்பாக ரசிகர்களை பார்த்து அவர் சொல்லும் "ஹாய் மச்சான்ஸ்..." என்ற வார்த்தை, ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு புத்துணர்ச்சியே தருவது போல் இருந்தது. இப்படி ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட நமீதா, ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து, பின்னர் கெஸ்ட் ரோலில் வந்து கடைசியாக குத்துபாட்டு ஆடும் ரேஞ்சுக்கு வந்துவிட்டார். இதனால் தமிழ் சினிமாவை விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிரம் காட்டி வரும் நமீதா, கன்னடத்தில் மட்டும் புதிதாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதேநேரம் தமிழில் வாய்ப்புகள் வந்தால் அதை புறக்கணிக்கும் விதமாக ஒரு சுவாரஸ்யமில்லாமல் கதை கேட்டு வருகிறாராம். ஆனால் நிறைய விளம்பரங்கள், கதை திறப்பு விழாக்கள் என்றால் உடன் ஓ.கே., சொல்லி விடுகிறார். தமிழ் சினிமாவை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று கேட்டால், தமிழ் சினிமாவில் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே காட்டி வருகின்றனர். இது எனக்கு பிடிக்கவில்லை. கதையோடு கூடிய கவர்ச்சி மட்டும் தான் எடுபடும். மற்ற நேரங்களில் அது எடுபடாது. தமிழில் இனிமேல் நல்ல கதையம்சமும், திறமையான இயக்குநரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறுகிறார்.

தமிழ் சினிமா மீது நமீதாவுக்கு கோபம்!

ஹன்ஸிகா மோத்வானிக்குப் பிறகு, கிட்டத்தட்ட அதே பரபரப்புடன் பேசப்படுபவர் என்றால் அவர் ரிச்சாவாகத்தான் இருக்கும்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் இப்போதுள்ள தமிழ் சினிமா நாயகிகளுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறாராம் அம்மணி.

இவரது தாராளம் பார்த்துதான் உடனடியாக ஆன்ட்ரியாவுக்கு பதில் இரண்டாம் உலகத்தில் பிடித்துப் போட்டார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் ரிச்சா.

அடுத்த சில தினங்களில், மும்பை நாயகிகளைத் தேடி அலுத்துப் போன சிம்புவிடமிருந்து போன். ஒஸ்தியில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அவர் சொல்ல, மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் ரிச்சா.

"வெற்றிப் படத்தில் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. இதற்காக எதையும் செய்யலாம். நடிகையானதன் நோக்கமே வெற்றி பெறுவதுதானே", என்கிறார் ரிச்சா

பிழைக்கத் தெரிந்தவர்!

ஒரே நேரத்தில் தனுஷ் - சிம்புவுடன் ஜோடி போடும் ரிச்சா!!

சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். விவாகரத்து செய்ததை வருத்தமாக நினைக்கிறீர்களா? என்று சோனியா அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் வாழ்க்கையில் எதற்கும் வருத்தப்பட மாட்டேன். எனது வாழ்க்கை இன்று வரை நிறைய படிப்பினைகளை தந்து கொண்டு இருக்கிறது. திரையுலக வாழ்க்கையில் செல்வராகவனுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டு உள்ளேன். அவர்தான் என்னை கண்டு பிடித்தார். நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வந்தார்.

ஆனால் சொந்த வாழ்க்கையில் எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை. எனவேதான் இப்போது வெளியே வந்து விட்டேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். வானம் படத்தில் நல்ல கேரக்டர் அமைந்தது. என் நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிக்கின்றன. என் உடல் எடையை குறைத்து உள்ளேன்.

இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

விவாகரத்துக்கு பின் சந்தோஷமாக இருக்கிறேன்-சோனியா அகர்வால்

சென்னை: வரிசையாக ஒவ்வொரு சினிமா சங்கத்தின் நிர்வாகிகளும் ராஜினாமா செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் லேட்டஸ்ட் ராஜினாமா சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகை குஷ்புவுடையது.

திமுகவின் முக்கிய பேச்சாளரான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்தார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில், நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வந்தார். திமுக-வில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கியும் பேசினார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அதுவும் சொல்லி வைத்த மாதிரி, "சொந்தப் பணி காரணமாகவும், தொடர் படப்பிடிப்புகள் இருப்பதாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என ராஜினாமா கடிதத்தில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜிநாமா செய்தபோது, ராம நாராயணனும் இதே காரணத்தைத்தான் சொல்லியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!

“சித்திரம் பேசுதடி” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத்திலும் நடித்தார். மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அவர் சொல்கிறார், சினிமாவில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இங்கு கதாநாயகிகள் சீக்கிரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கிறார்கள். நடிகைகள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கி போகிறது.

சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் நிஜத்தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலித்தால் வாழ்க்கை நாசமாகி போகும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுகின்றனர். இதுபோன்ற செயல்களை நான் வெறுக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

"காதல், வாழ்வை நாசமாக்கி விடும்” -நடிகை பாவனா

“பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்” படத்திலும் நடித்தார். இப்படத்தில் நடித்தபோது ஆண்ட்ரியாவுக்கும் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

இதுவே செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்பட்டது. பின்னர் செல்வராகவன் “இரண்டாம் உலகம்” படத்திலும் ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன் படப்பிடிப்பிலும் பங்கேற்று சில காட்சிகளில் நடித்தார். இந்த நிலையில் செல்வராகவன்- கீதாஞ்சலி திருமணம் நடந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் “இரண்டாம் உலகம்” படப்பிடிப்பை செல்வராகவன் மீண்டும் துவக்கி உள்ளார்.

இதில் நடிக்க ஆண்ட்ரியாவை அழைத்தபோது மறுத்து விட்டார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாம்.

செல்வராகவன் படத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியா மறுப்பு

நயன்தாரா-பிரபுதேவா திருமணம் ஜூலையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதுப்படங்களை நயன்தாரா ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தமிழிலும் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்துக்குப் பின் நடிக்காமல் ஒதுங்கினார். பிறமொழிகளிலும் நடிக்கவில்லை. நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென்று தெலுங்கில் தயாராகும் “ராம ராஜ்ஜியம்” படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ராமாயண கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

இதில் ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணாவும், வால்மீகி முனிவர் வேடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராகவும், லட்சுமணன் வேடத்தில் ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர்.

புராண கதை என்பதால் இப்படத்தில் நயன்தாரா நடிக்க பிரபுதேவா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா சீதையாக நடிக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தெலுங்கில் தயாராகும் ராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. பிரபுதேவா திருமணமானவர். மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர். அவர் வாழ்க்கையில் புகுந்து ரம்லத்துக்கு துரோகம் செய்துள்ளார் நயன்தாரா.

எனவே சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தகுதி இல்லை. அவரை படத்தில் இருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் படத்தை திரையிடவிடாமல் தடுப்போம். ஆந்திர மக்களும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

தெலுங்கு படத்தில் சீதை வேடம்; நயன்தாராவுக்கு எதிர்ப்பு

ஆந்திர திரையுலகில் நடிகை இலியானா சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்து வருகிறார். அவருக்கு தொழில் தடை விதிக்க சக்தி பட தயாரிப்பாளர் முயன்று வருகிறார். தெலுங்கில் சக்தி என்ற படத்தில் நடித்தார் இடுப்பழகி இலியானா. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. ஒன்றரை கோடி. தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையுடன் வலம் வந்த இலியானாவுக்கு இப்போது புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.

படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும், இலியானாவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பித்த பிரச்னை படம் ரீலிஸ் ஆன பிறகும் தொடர்ந்தது. சூட்டிங் சமயத்தில் டைரக்டர் மற்றும் ஹீரோவுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் இலியானா மீது ஏக கடுப்பில் இருந்த தயாரிப்பு தரப்பு, ரீலிசுக்கு பிறகும் அம்மணியின் ஒத்துழைப்பு இல்லாததால் கடுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டதாம். சக்தி பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர முடியாது என்று இலியானா கூறியதால், அப்செட் ஆன படக்குழுவினர், படத்தின் தோல்வியால் மெலும் அப்செட் ஆனார்கள்.

இலியானா மட்டும் பு‌ரமோஷனுக்கு வந்திருந்தால், ஓரளவு படம் இன்னும் கொஞ்ச நாள் ஓடியிருக்கும் என்று வாதிடும் தயாரிப்பாளர், இதுதொடர்பாக சங்கத்தில் முறையிட்டிருக்கிறார். முடிந்தால் கொடுத்த சம்பளத்தில் பாதியை பிடுங்குவது; இல்லையென்றால் இலியானாவுக்கு தொழில் தடை விதிப்பது என இரண்டு முடிவுகளையும் சொல்லி சங்கத்தை நெருக்குகிறாராம் தயாரிப்பாளர்.

ஏற்கனவே தமிழ் திரையுலகிற்கு எதிராக செயல்பட்ட குத்து ரம்யா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோலிவுட்டில் தொழில் தடை விதித்ததும், அதன் பிறகும் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருப்பதும் பாமர ரசிகனுக்குக் கூட தெரியுமே!

இலியானாவுக்கு தொழில் தடை! சிக்கலுக்கு மேல் சிக்கல்!!

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் இருந்தார் தமன்னா. ஆனால் அமலா பாலின் வரவால் அவரைத் தேடிவந்த பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தற்போது தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம்.
புதிய பட வாய்ப்புகள் ஏதும் வராததால் தெலுங்குப் படங்களின் பக்கம் தன் கவனத்தை திருப்பி விட்டாராம். தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம்.
தமிழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என்றும், மறுபடியும் தெலுங்கில் நடிக்கலாம் எனவும் முடிவுசெய்துள்ளாராம் தமன்னா.

தெலுங்கு பக்கம் தாவிய தமன்னா...

முக நூல்

Popular Posts