background img

புதிய வரவு

Showing posts with label Sureshkalmadi. Show all posts

புதுடில்லி : காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., முன் காமன்வெல்த் ஒரு‌ங்கிணைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடி, விசாரணைக்கு ஆஜராகினார். டில்லியில் இருக்கும் சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு கல்மாடி வந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கல்மாடியிடம் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளுக்காக ஆயத்தபணிக‌ளை மேற்கொள்ள குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் முதல் காமன்வெல்த் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சில அழிக்கப்பட்டது வரை பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என தெரிகிறது.

முன்ன‌தாக காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டதில், பல்வேறு முறைகேடுகள் குறித்து நடந்து வரும் விசாரணையில் ஆஜராக தயார் என கூறியிருந்தும், சி.பி.ஐ.,யிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என, போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கூறியிருந்தார்.

டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில், பல கோடிக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சிகளும் இது தொடர்பாக பிரச்னையை கிளப்பின. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.காமன் வெல்த் போட்டிகளுடன் நேரடியாக தொடர்புடைய பலரது வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி வீடும் அடங்கும்.இதைத் தொடர்ந்து, கடந்த மாதம், சி.பி.ஐ., அதிகாரிகள், தொலைபேசி மூலம், சுரேஷ் கல்மாடியுடன் தொடர்பு கொண்டு, விசாரணை முன் ஆஜராக வேண்டும் எனக் கூறினர். இதை ஏற்ற சுரேஷ் கல்மாடி, ஜனவரி 3ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு வருவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சுரேஷ் கல்மாடி கூறுகையில், "இது தொடர்பாக விசாரித்து வரும் அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சி.பி.ஐ.,யிடம் தெரிவித்து விட்டேன். அதற்கு பின், சி.பி.ஐ.,யிடமிருந்து எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை' என்றார்.

காமன்வெலத் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் நடந்த நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ., மூன்று எப்.ஐ.ஆர்.,களை பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் சி.பி.ஐ., அதிகாரிகள் காமன்வெலத் போட்டிக்கான அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில், சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர்.கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் இதில் அடங்கியுள்ளன.

காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் சி.பி.ஐ.,விசாரணை

புதுடில்லி: ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 30 ஆயிரம் கோடி வரை பணத்தில் புரட்டு வேலை காட்டிய காமன்வெல்த் போட்டி குழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடி வீட்டில் சி.பி.ஐ., பிரிவினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், மேலும் இன்று ஒரு புதிய எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும் சி.பி.ஐ., போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே இவரது உதவியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கல்மாடியும் கைது செய்யப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர். இந்த காமன்வெல்த் அரங்கத்தில் போதிய வசதி செய்யப்படவில்லை என பல வெளிநாட்டு வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். விளையாட்டின் ஏற்பாடுகள் பல வகைகளில் பண கையாடல் மற்றும் கான்ட்ராக்ட் பணிகளில் குறிப்பிட்ட தொகை பெற்றது மற்றும் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டதில் பணபரிமாற்றம், தளவாட சாமான்கள் வாங்குவதில் கமிஷன் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கல்மாடி வைக்கப்பட்டன.

இதனையடுத்து காங்கிரஸ் பார்லி., குழு உறுப்பினர் பதவி, ஒருங்கிணைப்பு குழுதலைவர் உள்ளிட்ட பதவியில் இருந்து கல்மாடியை நீக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது உதவியாளர்களாக இருந்த தர்பாரி, சஞ்சய்மகிந்தேரா, ஜெயச்சந்திரன், ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்மாடி மற்றும் இவரது நெருங்கிய வட்டாரங்கள் சிலர் வீடுகள் உள்பட மொத்தம் டில்லி, புனே என 7 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ரெய்டு வெறும் கண்துடைப்புதான் என பா.ஜ., விமர்சித்துள்ளது. இது காலதாமதமானது, கல்மாடியை இது வரை கைது செய்ய்யாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
தூக்கில் போடுங்கள் என்றார்: இதற்கிடையில் ஒரு புதிய எப்.ஐ.ஆர்., போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் கல்மாடி கைது செய்யப்படலாம் என்ற டில்லி வட்டார யூகங்கள் தெரிவிக்கிறது.பண ஊழல் நிரூபிக்கபட்டால் என்னை தூக்கில் போடட்டும் என கல்மாடி கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்

முக நூல்

Popular Posts