background img

புதிய வரவு

Showing posts with label CBI raid. Show all posts

தென்காசி: தென்காசி இந்தியன் வங்கி கிளையில் போலி ஆவணம் மூலம் ரூ. ஒரு கோடியே 52 லட்சம் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக மாஜி முதன்மை மேலாளரை சிபிஐ கைது செய்தனர். அவரை ரிமாண்டில் வைக்க மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் ஈஸ்வர். அவர் தென்காசி இந்தியன் வங்கி கிளையில் முதன்மை மேலாளராக இருந்தார். இந்த வங்கியில் தென்காசி எஸ்ஏஎஸ் அன் கம்பெனி, சாகுல் அமீது ராவுத்தர் அன் சன்ஸ் ஆகிய மளிகை பொருள் மொத்த வியாபார நிறுவனங்கள் ஓபன் சேஸ் கிரடிட் (ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு மேல் வாணிபம் செய்யும் திட்டம்) கணக்கு வைத்திருந்தன. இந்த கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு 90 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்கலாம். இதன்படி எஸ்ஏஎஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 லட்சம், சாகுல் அமீது நிறுவனத்துக்கு ரூ. 40 லட்சம் ரூபாயை முதன்மை மேலாளர் ஈஸ்வர் கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி வழங்கினார். இந்நிறுவனங்கள் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து மோசடி செய்ததாகவும், வட்டியுடன் ஒரு கோடியே 52 லட்ச ரூபாய் மோசடிக்கு ஈஸ்வர் துணையாக இருந்துள்ளார் என தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி வட்டார இந்தியன் வங்கி அதிகாரி புகாரின்பேரில் இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஜாஸ்மின், ஷேக்மன்சூர், இஸ்மாயில் கனி, ஆர்.டி.பால் உள்பட 9 பேரை சிபிஐயின் பொருளாதார குற்றபிரிவு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஈஸ்வர் தென்காசியில் வசித்து வந்தார். அவரை சிபிஐ நேற்று கைது செய்தது.

இந்தியன் வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி: வங்கி முன்னாள் அதிகாரி கைது

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை அண்மையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட கபில் சிபல், 2003 முதல் 08 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட அனைத்து ஸ்பெக்ட்ரம் முடிவுகளுமே தவறானவை என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு வரையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி மற்றும் 2008 ஆம் ஆண்டு வரையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் உரிம ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்ட முறைகள் மோசமாக இருந்ததாகவும், விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என்றும் விசாரணை ஆணையம் கண்டறிந்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் கபில் சிபல் மேலும் கூறினார்.

'அனைத்து ஸ்பெக்ட்ரம் முடிவுகளுமே தவறானது'

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ அலுவலகத்திற்கு நேற்று நான்காவது முறையாக வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ராசா.

விசாரணையின்போது பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்ததால்,அவரை மாலை 3 மணியளவில் கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் அவருடன் பணியாற்றிய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, ராசா உள்ளிட்ட மூன்று பேரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார

ராசாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை கைது செய்துள்ளது.

இன்று காலை 4வது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க. அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசாவை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு: ஆ.இராசா கைது செய்யப்பட்டார்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை கைது செய்துள்ளது.

இன்று காலை 4வது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க. அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசாவை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

அலைக்கற்றஒதுக்கீட்டிலநடந்முறைகேடகுற்றச்சாற்றைததொடர்ந்தகடந்ஆண்டு டிசம்பர் 24, 25 தேதிகளிலம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் ஆ.ராசா‌விட‌ம் விசாரணநடத்தினர்.

அதனபிறகஒரமாதமகழித்து கட‌ந்த மாத‌ம் 31ஆ‌‌ம் தே‌தி 9 ம‌ணி நேர‌ம் விசாரணநடத்தியுள்ளனர்.

ராசா‌விட‌ம் ம‌த்‌திய புலனா‌ய்வு‌த்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்துவது இது 4வது முறையாகு‌ம்.

ராசா‌விட‌ம் 4வது முறையாக சி.‌பி.ஐ ‌விசாரணை

அலைக்கற்றஒதுக்கீட்டிலநடந்முறைகேடகுற்றச்சாற்றைததொடர்ந்தகடந்ஆண்டு டிசம்பர் 24, 25 தேதிகளிலம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் ஆ.ராசா‌விட‌ம் விசாரணநடத்தினர்.

அதனபிறகஒரமாதமகழித்து கட‌ந்த மாத‌ம் 31ஆ‌‌ம் தே‌தி 9 ம‌ணி நேர‌ம் விசாரணநடத்தியுள்ளனர்.

ராசா‌விட‌ம் ம‌த்‌திய புலனா‌ய்வு‌த்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்துவது இது 4வது முறையாகு‌ம்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவிடம் இன்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பதவி விலகிய ஆ.இராசாவிடம், டிசம்பர் 24, 25 தேதிகளில் ம.பு.க. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இன்றைக்கு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இன்றைய விசாரணையில், அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் நடத்திய உரையாடல், அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமம் வழங்கும் தேதியை முன்னறிவிப்பின்றி முன்னரே மாற்றியது, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் உரிமை கொடுத்தது என்பன உள்ளிட்ட விவகாரங்களின் பின்னணி குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி, டெல்லி, சென்னை, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இராசாவின் சொந்த வீடு ஆகிய இடங்களில் ம.பு.க. நடத்திய சோதனையில் கைப்பற்ற ஆவணங்கள் தொடர்பாகவும் இன்று அவரிடம் விசாரிக்கப்பட்டதெனவும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாகவும் இராசாவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராசாவிடம் ம.பு.க. 9 மணி நேரம் விசாரணை

ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு ஊழலில் குற்றம் சாற்றப்பட்டுள்ளவர்களில் 3 பேரின் வீடுகளில் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இன்று சோதனை நடத்தி வருகிறது.

கா‌‌ர்‌கி‌ல் போ‌‌ர் வீரர்களுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் அடு‌க்குமாடி குடி‌யிரு‌ப்பு வீடுக‌‌ள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்தும், உறவினர்களுக்கு வீடுக‌ள் ஒதுக்கியதாக எழுந்த புகாரை அடுத்தும் மகராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவா‌‌ன் பதவி விலகினார்.

இதனையடுத்து, இது தொடர்பாக முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்ளிட்ட 13 பேர் மீது ம.பு.க. நேற்று வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், வீட்டு வசதி வாரியப் பொதுச் செயலர் தாக்கூர், ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரி வாங்‌ச், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கித்வானி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ம.பு.க. இன்று சோதனை நடத்தி வருகிறது.

ஆதர்ஷ் ஊழல் : சி.பி.ஐ. சோதனை

புதுதில்லி, ஜன. 4: போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பாக இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்ள தில்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.

போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பாக வருமான வரி தீர்ப்பாயம் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில் புதிதாக ஏதுமில்லை என்று அப்போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்துக்கு போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்திய தொழிலதிபர் வின்சத்தாவுக்கும் இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் ரூ. 41 கோடி கமிஷன் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரி தீர்ப்பாயம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தக் கமிஷன் தொகைக்கு உரிய வரியை அவர்கள் இருவரும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதாக கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கு நடைபெறும் தில்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஜய் அகர்வால் புதிய மனு தாக்கல் செய்தார். அதில், வருமான வரி தீர்ப்பாயத் தீர்ப்பின் அடிப்படையில் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரினார். அத்துடன் இந்த வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வருமான வரி தீர்ப்பாயத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த விஷயத்தை மத்திய அரசு புதிதாக ஆய்வு செய்யும் என்று சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிட்டர் ஜெனரல் பி. பி.மல்ஹோத்ரா, வருமான வரி தீர்ப்பாயத் தீர்ப்பில் புதிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை என்று கூறினார்.

வருமான வரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்து நான் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள்தான் வருமான வரி தீர்ப்பாயத் தீர்ப்பில் இடம் பெற்றுள்ளன என்றார்.

தீர்ப்பாயத் தீர்ப்பின் அடிப்படையில் புதிதாக ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் மொய்லி சொன்ன கருத்து குறித்து எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகுதான் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும் மனுவை சிபிஐ தாக்கல் செய்துள்ளது என்றார் மல்ஹோத்ரா.

வழக்கின் தகுதி குறித்து இப்போது ஆராயக் கூடாது. இந்த வழக்கால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த அகர்வால், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கு வேண்டியவர் என்பதால் குவாத்ரோச்சியைக் காப்பாற்ற சிபிஐ முயல்கிறது என்று குற்றம்சாட்டினார். வழக்கை வாபஸ் பெறுவது என்ற சிபிஐயின் முடிவு பொது நலன் இல்லாதது என்றும் அவர் கூறினார்.

வாதத்தின் இடையே அகர்வாலின் தாயாருக்கு உடல் நலக் குறைவு என்று கூறி அனுமதி பெற்று சென்றதால், விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிஷன் வழங்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க 1990 ஜனவரி 20-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. விசாரணை முடித்து 1999 அக்டோபர் 22-ல் ஒரு குற்றபத்திரிகையும் 2000 அக்டோபரில் 9-ல் மற்றொரு குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் 2009 அக்டோபர் 9-ல் குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற சிபிஐ மனு தாக்கல் செய்தது. குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை என்பது உள்ளிட்ட சில காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தியது. இதை எதிர்த்து வழக்கறிஞர் அஜய் அகர்வால் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட மற்ற எதிரிகளில் பலர் இறந்துவிட்டனர் அல்லது தில்லி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

போபர்ஸ் வழக்குக்கு மூடுவிழா: சிபிஐ கோரிக்கை

புதுடில்லி: ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 30 ஆயிரம் கோடி வரை பணத்தில் புரட்டு வேலை காட்டிய காமன்வெல்த் போட்டி குழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடி வீட்டில் சி.பி.ஐ., பிரிவினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், மேலும் இன்று ஒரு புதிய எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும் சி.பி.ஐ., போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே இவரது உதவியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கல்மாடியும் கைது செய்யப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர். இந்த காமன்வெல்த் அரங்கத்தில் போதிய வசதி செய்யப்படவில்லை என பல வெளிநாட்டு வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். விளையாட்டின் ஏற்பாடுகள் பல வகைகளில் பண கையாடல் மற்றும் கான்ட்ராக்ட் பணிகளில் குறிப்பிட்ட தொகை பெற்றது மற்றும் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டதில் பணபரிமாற்றம், தளவாட சாமான்கள் வாங்குவதில் கமிஷன் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கல்மாடி வைக்கப்பட்டன.

இதனையடுத்து காங்கிரஸ் பார்லி., குழு உறுப்பினர் பதவி, ஒருங்கிணைப்பு குழுதலைவர் உள்ளிட்ட பதவியில் இருந்து கல்மாடியை நீக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது உதவியாளர்களாக இருந்த தர்பாரி, சஞ்சய்மகிந்தேரா, ஜெயச்சந்திரன், ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்மாடி மற்றும் இவரது நெருங்கிய வட்டாரங்கள் சிலர் வீடுகள் உள்பட மொத்தம் டில்லி, புனே என 7 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ரெய்டு வெறும் கண்துடைப்புதான் என பா.ஜ., விமர்சித்துள்ளது. இது காலதாமதமானது, கல்மாடியை இது வரை கைது செய்ய்யாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
தூக்கில் போடுங்கள் என்றார்: இதற்கிடையில் ஒரு புதிய எப்.ஐ.ஆர்., போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் கல்மாடி கைது செய்யப்படலாம் என்ற டில்லி வட்டார யூகங்கள் தெரிவிக்கிறது.பண ஊழல் நிரூபிக்கபட்டால் என்னை தூக்கில் போடட்டும் என கல்மாடி கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்

முக நூல்

Popular Posts