background img

புதிய வரவு

Showing posts with label Tamilnadu Karunanidhi. Show all posts

சென்னை : ""முதல்வர் கருணாநிதி, மஞ்சள் துண்டு போட்டிருப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடும் குற்றம் சாட்டினார். திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் கிராமத்தில், ஒன்றிய கவுன்சிலர் ராஜா- வெண்ணிலா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வைகோ பேசியதாவது: திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்டதால், அவரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கினார். என்னையும் கொலைப்பழி சுமத்தி வெளியேற்றினார்.
தமிழகத்தில் தற்போது பாதுகாப்பு இல்லை. போலியோ சொட்டு மருந்து போட்டுவிட்டு, பாதுகாப்பாக குழந்தைகள் திரும்ப முடியாது. பெண்களும் பாதுகாப்புடன் செல்ல முடிவதில்லை. உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லை. உங்கள் நிலத்தை அபகரிக்கும் நிலைதான் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நகரத்து மக்களுக்கு மட்டும்தான் தெரியும் என, உளவுப் பிரிவு போலீசார் அரசுக்கு கருத்து சொல்லி வருகின்றனர். நகர மக்கள் செய்தித்தாளை மேலோட்டமாக படித்தும், "டிவி' பார்த்தும் விட்டு விடுகின்றனர். கிராம மக்களோ, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படித்து விட்டு விவாதிக்கின்றனர்.
மஞ்சள் துண்டு அணிந்த கருணாநிதி, தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு வைகோ பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசும்போது: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்த பின்னரே, சி.பி.ஐ., விசாரணை செய்வதாக பாவலா காட்டுகிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல், இமயமலையையே மறைக்கப் பார்க்கின்றனர்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கிறார். கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கியதில் காங்கிரஸ் கட்சியினர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என பல தரப்பினரும் ஊழல் செய்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டிலும் 71 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் அவர்களை பாதுகாக்கிறது. காங்கிரஸ் ஆட்சி வீழும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு கருணாநிதி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார் : வைகோ கடும் தாக்கு

முக நூல்

Popular Posts