background img

புதிய வரவு

Showing posts with label Wheat Rava Pongal. Show all posts

தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்
மிளகு - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி இஞ்சி விழுது, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு பொரிக்கவும்.பாசிப்பருப்பை தண்ணீரில் ஒரு முறை களைந்து அதனையும் குக்கரில் இட்டு ஒருமுறை கிளறி விடவும்.குக்கரில் 3 கப் தண்ணீரை ஊற்றி,அது நன்கு கொதிக்கையில் உப்பு சேர்க்கவும்.சம்பா கோதுமை ரவையைக் களைந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கலந்து விட்டு பிரஷர் குக்கரை மூடி வேகவிடவும்.பொங்கல் வெந்து 2 விசில் விட்ட பிறகு 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து அணைக்கவும்.
பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பதமாக வெந்த பொங்கலில் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
சுவைக்கான குறிப்பு
மிளகு,சீரகம் இரண்டையும் வெறும் வாணலியில் மெல்லிய தீயில் நன்கு பொரியும் வரை வறுத்து பொடித்து மிளகு, சீரகப் பொடியையும் சேர்த்தால் சுவைகூடும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை தேவையானால் பொங்கலை அலங்கரிக்க உபயோகிக்கலாம்.

கோதுமை ரவை பொங்கல்

முக நூல்

Popular Posts