background img

புதிய வரவு

Showing posts with label COOKING. Show all posts

முட்டை அடை என்றதும் ஆம்லெட் என்று நினைத்துவிடாதீர்கள். இது முட்டை, தேங்காய்ப் பால் எலாம் சேர்த்து செய்யும் அடை. டேஸ்ட்டாக இருக்கும். செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க!

தேவையானப் பொருட்கள்:

1/2 கிலோ பச்சரிசி
1 தேங்காய்
2 முட்டை
3 ஸ்பூன் மிளகு
1 கொத்து கொத்தமல்லி
1 சிட்டிகை மஞ்சள் தூள்
150 மில்லி எண்ணெய்
தேவையான அளவு உப்பு

செய்முறை:

அரிசியை கழுவி, உலர்த்தி எடுத்து, ரவை பதத்தில் அரைத்து வை‌த்து‌க்கொள்ள வேண்டும்.

பிறகு அதை ஒரு வாணலியில் கொட்டி லேசான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவேண்டும்.

தேங்காயை‌த் துருவி பால் பிழிந்துக் கொள்ள வேண்டும். மிளகை கொரகொரப்பாக பொடி செய்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை பொடிசாக அரிந்து கொள்ள வேண்டும்.

மிளகுப் பொடி, கொத்தமல்லி இரண்டையும் மாவில் கொட்டி அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

முட்டையை நன்றாக கலக்கி மாவில் ஊற்றி, பிழிந்து வைத்துள்ள தேங்காய் பாலையும் ஊற்றி நன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற விட வேண்டும்.

பிறகு ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடை ஊற்றுவது போல் மாவை ஊற்றி 2 பக்கமும் பொன்முறுகலாக சுட்டு எடுக்க வேண்டும்.

முட்டையின் சத்தும் தேங்காய்ப்பாலின் ருசியும் சேர்ந்த இந்த அடை நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

அரிசிமாவு முட்டை அடை

தேவையான பொருள்கள் :

இறால் - 10
உடைத்த கடலை - ஓரு ஆழாக்கு
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 200 கிராம்
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 1 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் - 400 கிராம்
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - - தேவையான அளவு

செய்முறை :

இறாலை உரித்துக் கழுவிச் சுத்தம் செய்து அதில் பாதி அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை தண்ணீரில் வேக வைக்கவும்.

வேக வைத்த இறாலை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.

இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா ஆகியவற்றை அதில் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.

வதக்கிய வெங்காயம், அரைத்து வைத்துள்ள இறால், உடைத்த கடலை, மீதமுள்ள உப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகப் பிசையவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.

இறால் வடை தயார்.

இறால் வடை

சுட்டெரிக்கும் வெயிலில், நம்முடைய உடலுக்கு குளிர்ச்சி தேவைப்படுகிறது. மனமும் அதையே நாடுகிறது. ஜில்லுனு ஒரு பைன்ஆப்பிள் புட்டிங் செய்து சாப்பிட்டீங்கன்னா மனசுக்கு இதமா இருக்கும். நாக்கின் வறட்சி நீங்கும். உடலில் புது தெம்பும் பிறக்கும்.

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் - 1
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் - 7 டேபிள் ஸ்பூன்
சீனி - 7 டேபிள் ஸ்பூன்
பொடித்த முந்திரி பருப்பு + முந்திரி பழம் - 1/4 கப்
அன்னாசி எஸன்ஸ் - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* அன்னாசிப்பழத்தை தோல் சீவி மிகவும் சிறு துண்டுகளாக வெட்டவும்.

* கஸ்டர்ட் பவுடரினுள் 5 டேபிள் ஸ்பூன் தண்ணீஇர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.

* அதனுள் சீனியை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும்.

* அதனுள் சிறிது சிறிதாக பால் பவுடரையும் சேர்த்து அடிக்கவும்.

* பின்னர் இக்கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பொடித்த முந்திரி பருப்பு, முந்திரி பழம் அன்னாசி எஸன்ஸ் போட்டு கலக்கவும்.

* பின்னர் இக்கலவையில் சிறிதை ஒரு உருண்டையான கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் அன்னாசி துண்டுகளைப் போடவும். இவ்வாறு மாறி மாறி ஊற்றவும்.

* பின்னர் இதனை ஆவியில் வைத்து அவித்தெடுக்கவும். (அல்லது 10 நிமிடங்கள் மைக்ரோ அவனில் பேக் செய்யவும்)

* சுவையான அன்னாசி புட்டிங் தயார். இதனை குளிர வைத்து துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்பு:

அன்னாசிப்பழத்திற்கு பதிலாக ஆப்பிள், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி. வாழைப்பழம் என ஏனைய பழங்களும் அதற்கேற்றவாறு பழ எஸன்ஸூம் சேர்க்கலாம். அசைவம் உண்பவர்கள் கஸ்டர்ட் பவுடருக்கு பதிலாக 1 முட்டையும் சேர்க்கலாம்

அன்னாசிப்பழ புட்டிங்

பால் 1 லீட்டர்
சீனி 500 கி
பன்னீர் 250 கி
குங்குமபூ கொஞ்சமாக
பாதாம் பருப்பு சிறிதாக வெட்டியது 3 தே.க
பிஸ்டாஜ்ஸிஜோஸ் சிறிதாக வெட்டியது 3 தே.க
ஏலக்காய் தூள் 1/2 தே.க

1. ஒரு பாத்திரத்தில் 250 கிராம் சீனியையும்,நீரும் சேர்த்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வையுங்க.
2. இன்னோர் பாத்திரத்தில் பாலையும், மீதியிருக்கும் சீனியையும் கலந்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்து அரைவாசி ஆகும் வரை அடுப்பில் இருந்து இறக்க வேண்டாம்.
3. பால் பாதியானதும் அதில் ஏலக்காய் பொடி, வெட்டிய பருப்புகள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் இருந்து இறக்குங்க.
4. பன்னீரை எடுத்து சிறு உருண்டைகளாக்கி சற்று அமத்தினால் சரியான வடிவம் கிடைத்துவிடும்.
5. இவ்வுருண்டைகளை கொதித்து கொண்டிருக்கும் சீனியில் போட்டு 10 நிமிடங்களுக்கு அவித்து எடுங்க. அவிக்கும் போது பாத்திரம் மூடியிருக்க வேண்டும்.
6. 10 நிமிடத்தில் பன்னீரை வெளியே எடுத்து வையுங்க. சீனிகரைசல் வடிவதற்கு சிறிது நேரம் குடுங்கள்.
7. ஏற்கனவே கொதிக்க வைத்த பாலில் பன்னீர் உருண்டைகளை போட்டு மேலும் 4-5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்க.
8. 4-5 நிமிடங்களின் பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவிடுங்க. சிலர் சிறிது சூடாக இருக்கும் போது சாப்பிடுவார்களாம். பெரும்பாலானோர் சூடு ஆறியதும் 5 மணித்தியாலங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்த பின்னர் சாப்பிடுவார்களாம். எது எப்படியோ கஸ்டபட்டு செய்ததை சாப்பிட்டால் சரி தான்.

குறிப்புகள்:
1. கொதிக்கும் சீனி கலவைக்கு எப்போதும் மதிப்பு குடுங்க.
2. சீனிகரைசலில் அவித்த பன்னீரே சுவையாக இருக்கும். வீட்டில் அண்ணன், தம்பி இருந்தால் சற்று கவனமாக இருக்கவும். பாலில் போடா முன்னரே பாதி பன்னீரை நான் இழந்துவிட்டேன்.
3. பால், சீனி என பயங்கரமா இருக்கு. அடிக்கடி செய்து சாப்பிடாதிங்க.

ரசமாலை

வீட்லயே ஸ்வீட் செய்து ஹெல்தியா சாப்பிடணும், ஈஸியாக இருக்கணும், டைம் மிச்சமாகணும், அதேநேரத்துல ஸ்வீட் ரொம்ப டேஸ்டாவும், ரிச்சாவும் இருக்கணும்னா பம்கின் ரோல்ஸ் செய்து சாப்ட்டு பாருங்க...சூசூசூசூப்பர்னு சொல்லுவீங்க...!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 டீ ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீ ஸ்பூன்
பட்டை தூள் - 1/2 டீ ஸ்பூன்
கிராம்பு தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - 1/4 டீ ஸ்பூன்
முட்டை - 3
சீனி - 1 கப்
பம்கின் கூழ் (pumpkin puree) - 2/3 கப்

ஃபில்லிங் (Filling)

க்ரீம் சீஸ் - 1 கப் (8 oz)
ஐஸிங் சுகர் - 1 கப்
பட்டர் - 6 டேபிள் ஸ்பூன்
வெனிலா - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* அவனை 375 Fக்கு முற்சூடு செய்யவும்.

* 15 x 10 ட்ரேயில் வாக்ஸ் பேப்பர் போட்டு, மேலே பட்டர் பூசி, மாத்தூவி வைக்கவும்.

* சுத்தமான கிச்சன் டவலில் ஐஸிங் சுகர் தூவி வைத்துக்கொள்ளவும்.

* மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, பட்டை(சின்னமன்) தூள், கிராம்பு தூள் எல்லாவற்றினையும் ஒன்றாக கலக்கவும்.

* முட்டை, சீனி இரண்டையும் எலக்ட்ரிக் மிக்ஸரால் நன்கு அடிக்கவும்.

* பின்னர் பம்கின் கூழ் சேர்த்து, நன்கு அடிக்கவும்.

* இறுதியில் மாவுக் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

* இந்தக் கலவையினை ட்ரேயில் ஊற்றி, 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

* கேக் வெந்ததும், கிச்சன் டவலை மேலே விரித்து, ட்ரேயினை கவிழ்த்து வைக்கவும்.

* மேலே லேயராக இருக்கும் பேப்பரினை மெதுவாக உரித்து எடுக்கவும்.

* கிச்சன் டவலோடு சேர்த்து (ட்ரேயினை எடுத்திட்டு தான் சுற்றணும்), பம்கின் ரோலினை சுற்றி அப்படியே 30 நிமிடங்கள் விடவும்.

* சூடு ஆறியதும் கிச்சன் டவலை எடுத்து விட்டு, ஒரு தட்டையான பலகையில் பம்கின் ரோலினை விரித்து வைத்து, ஃபில்லிங்கில் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி, கேக் மீது பூசவும்.

* ஐஸிங் பூசி முடிந்ததும் மீண்டும் மெதுவாக சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் 1 மணி நேரம் வரை வைத்து, பிறகு பரிமாறவும்.

பம்கின் ரோல்

பச்சரிசி - 2 கோப்பை
துறுவிய மஞ்சள் பூசணி - 1 கோப்பை
உளுத்தம் பருப்பு - 1/4 கோப்பை
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை இளம் சூடான தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து மெத்தென்று அரைக்கவும்.

உளுந்தை தனியாக ஊறவைக்கவும்.

பூசணியின் விதை, தோல், போன்றவற்றை நீக்கி துறுவி அளந்து கொள்ளவும்.

உளுந்தோடு பூசணி துறுவலையும் சேர்த்து நன்றாக மெத்தென்று அரைத்துக் கொள்ளவும்.

அரிசி, உளுந்து, அரைத்த மாவுகளை ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து வைக்கவும்.

மறுநாள் காலை வரை புளிக்க வைக்கவும்.

வாணலி அல்லது சூடான தோசைக் கல்லில் தோசையை சிறிது கனமாக வார்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு மூடிவைத்து ஒரு பக்கம் மட்டும் சுட்டு எடுக்கவும். (திருப்பிப் போட வேண்டாம)

பூசணிக்காய் தோசை

தேவையான பொருள்கள்:

முட்டை - 2
காலிஃபிளவர் - 1 (400 கிராம்)
வெங்காயம் - 2 (100 கிராம்)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
க‌றிவேப்பிலை - ‌சி‌றிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

காலிஃபிளவரை நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

அத்துடன் மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி, சிறிது மஞ்சள் தூளைப் போட்டு கரண்டியால் நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், க‌றிவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்க்கவும்.

சிவந்து மணம் வந்தவுடன், முட்டையை ஊற்றி கரண்டியால் நன்றாக அடித்து, தூள் தூளாகச் செய்து கிளறவும்.

5 நிமிடங்கள் கிளறிய பின் வேகவைத்துள்ள காலிபிளவரைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சுண்டிய பின், நன்றாகக் கிளறி வாணலியை இறக்கிவிடவும்.

முட்டை - காலிஃபிளவர் பொரியல்

மிக வித்தியாசமான மிளகு சீரக இட்லியை எளிதாக தயாரிக்கலாம்.

தேவையானவை:

இட்லி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிது
கெட்டியான புளிச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

அரைக்க:
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்

தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இட்லி மாவை, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி எடுங்கள். மிளகு, சீரகத்தை அரைத்தெடுங்கள். எடுக்கும் தறுவாயில் பூண்டை உரித்து, அதனுடன் வைத்து நசுக்கிக் கொள்ளுங்கள்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டைச் சேருங்கள்.

அத்துடன் சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மிளகு, சீரகம், பூண்டுக் கலவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி புளிச்சாறு, இட்லி, கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

உப்பு, காரம், புளிப்பு சேர்ந்து சப்புக் கொட்ட வைக்கும் இட்லி இது.

மிளகு சீரக இட்லி

1/2 கிலோ ஆப்பிள்
500 கிராம் மைதா
375 கிராம் வெண்ணெய்
200 கிராம் ஐஸிங் சர்க்கரை
50 கிராம் மில்க் மெய்ட்
50 மிலி பால்
100 கிராம் சர்க்கரை
5 கிராம் பட்டைத்தூள்
100 கிராம் பிரெட் தூள்

செய்முறை:

வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால் அனைத்தையும் கலந்து இதனுடன் மைதாமாவு சேர்த்து வைக்கவும்.

ஆப்பிள் தோல் நீக்கி பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். ஆப்பிள் சாஃப்டாகிவிடும்.

பிரெட் தூள் சேர்த்து பிசையவும். அந்தக் கலவையை அரை செமீ தடிமனாகும் வரை உருட்டவும்.

வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி இந்த மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும்.

இதன் மேல் 10 ‌கிராம் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 25 நிமிடத்துக்கு பேக் செய்யவும்.

ஆப்பிள் ஐஸிங் கேக்

பு‌ட்டு செ‌ய்து‌வி‌ட்டு அ‌தி‌ல் தே‌ங்கா‌ய் ம‌ற்று‌ம் ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து சா‌ப்‌பிடுவோ‌ம். அத‌ற்கு வேறெ‌ன்ன இரு‌க்‌கிறது எ‌ன்று கூறுபவ‌ர்களு‌க்காக‌த்தா‌ன் இ‌ந்த பயறு செ‌ய்முறை.

ஒரு முறை ரு‌‌சி‌த்து ‌வி‌ட்டீ‌ர்களானா‌ல் எ‌‌ப்போது பு‌ட்டு செ‌ய்தாலு‌‌ம் அத‌ற்கு பயறு இ‌ல்லாம‌‌ல் சா‌ப்‌பிடவே மா‌ட்டீ‌ர்க‌ள்.

பச்சைப் பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
கறிவேப்பிலை
உ‌ப்பு
எ‌ண்ணெ‌ய், கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - தா‌ளி‌க்க

செய்யும் முறை:

பச்சைப் பயிறை 3 முதல் 4 மணி நேர‌ம் ஊற வையுங்கள்.

பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக விடுங்கள்.

பருப்பு குழைந்து விடாமல் பார்த்து இறக்கிக் கொள்ளவும்.

அதற்குள் தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் போட்டு அரைத்து வேகவைத்த பயறுடன் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். க‌றிவே‌ப்‌பிலையை அல‌சி‌ப் போடவு‌ம்.

அதில் வேகவைத்த பயறு கலவையை கொட்டி ஒரு கிளறு கிளறி 5 நிமிடம் சிறு‌தீயில் வைத்து இறக்கி விடவும். புட்டுக்கு இது மிகவும் ஏற்ற இணை உணவாகும்.

புட்டுக்கு இணை பயறு

பால் - 1 லிட்டர்
பொடித்த வெல்லம் - 1 1/4 கோப்பை
துருவிய தேங்காய் - 1 கோப்பை
வறுத்த பாசிப்பருப்பு - 1 1/2 மேஜைக் கரண்டி
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

பாசிப்பருப்பை முதலில் மிக்ஸியில் பொடித்துக் கொண்டு பிறகு தேங்காய் பூவை அதில் போட்டு, தண்ணீரை விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும். பால் கொஞ்சம் சூடானவுடன் பொடித்த வெல்லத்தைப் போட்டு, ஒரு கிளறு கிள‌றி அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு வெல்லப் பொடி நன்றாகக் கரையும் வரை கிளறி வடிகட்டவும்.

வடிகட்டிய பாலுடன், அரைத்த தேங்காயை நன்றாகக் கலக்கி அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

நன்றாகக் கெட்டியானவுடன், நெய்யை ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் ஏலக்காய்த் தூளைச் சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.

சுவையான தேங்காய் திரட்டுப் பால் ரெடி!

தே‌ங்கா‌ய் திரட்டுப்பால்

கடலைப் பருப்பு - ஆழாக்கு
பயற்றம் பருப்பு - ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - கால் ஆழாக்கு
சம்பா கோதுமை - ஆழாக்கு
அரிசி - முக்கால் ஆழாக்கு
தேங்காய் மூடி - ஒன்று
சுக்கு - சிறு துண்டு
ஏலக்காய் - பதினைந்து
நெய் - ஒரு கரண்டி
வெல்லம் (தூள் செய்தது) - ஐந்து ஆழாக்கு

செய்முறை:

தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஏலக்காயை உரித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து பருப்புகள், கோதுமை, அரிசி, தேங்காய்த் துண்டுகள் எல்லாவற்றையும் வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

சுக்கை லேசாக சுட்டுப் பொடி செய்தும், ஏலக்காயையும் பொடி செய்தும் சேர்க்கவும்.

தூள் செய்த வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சூடாக்கி இளம் பாகு பதத்தில் வந்ததும், மாவைக் கொட்டி கம்பால் கிளறி விடவும்.

நன்கு கலந்ததும், கை பொறுக்கும் சூட்டில் கையளவு மாவை எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இதில் வறுத்த வறுகடலைப் பருப்பும், முந்திரிப் பருப்பும் கூட போட்டுப் பிடிக்கலாம். மேலும் சுவையாக இருக்கும்.

பொரிவிளாங்காய் உருண்டை

ஆம்லெட் தயாரிக்கும்போது அதனுடன் சிறிதளவு பால் மற்றும் உளுத்தம் மாவு சேர்த்தால் ஆம்லெட் மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

கோதுமை மாவை அரைக்கும்போது சோயாபீன்ஸை அதனுடன் சேர்த்தால் சப்பாத்தி ருசியாக இருப்பதுடன் ஊட்டச் சத்தும் அதிகரிக்கும்.

பாகற்காய், பப்பாளி போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தால் மஞ்சளாக மாறிவிடும் இதை தடுக்க அதனை பெரிய துண்டங்களாக நறுக்கி வைக்கலாம்.

ஊறுகாய்களை பாட்டில்களில் அடைக்கும் முன் பாட்டிலில் சிறிதளவு வினீகரை விட்டு நன்றாக குலுக்கினால் பாட்டிலின் உட்சுவர்களில் படியும் வினீகர் ஊறுகாய்களில் பூஞ்சக் காளான் பூப்பதைத் தடுக்கலாம்.

முள்ளங்கி வைத்த பரோட்டா தயாரிக்கும்போது, நறுக்கிய முள்ளங்கியை வறுத்து பிறகு உப்பை சேர்த்தால் முள்ளங்கியில் உள்ள நீர் வற்றாமல் பரோட்டாவை சுருட்ட சுலபமாக இருக்கும்.

பால்கோவா தயாரிக்கும்போது மெலிதான துணியில் 2 ஸ்பூன்கள் கோதுமைமாவை இட்டு இறுகக் கட்டி கொதிக்கும் பாலினுள் வைத்தால், பால்கோவா கிரீம் நிறத்தில் தயாராகும்.

காலிஃப்ளவர் சமைக்கும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால் வெண்மையாக இருக்கும்.

வெஜிடபிள் சூப் ருசியாக இருக்க காய்கறிகளை சிறிதளவு வெண்ணையுடன் சேர்த்து வறுக்கலாம்.

பூரிகள் மொறுமொறுப்பாகவும் பெரிதாகவும் வர மாவுடன் சிறிதளவு ரவாவையும் சக்கரையையும் சேர்க்கவும்.

ரு‌சியான ஆ‌ம்லெ‌ட் தயா‌ரி‌க்க...

அவல் - 1 கப்
பொட்டுக் கடலை - 1 கப்
முந்திரி - 6
திராட்சை - 2
ஏலப்பொடி
பால் சிறிதளவு
நெய் - 4 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
சர்க்கரை தேவைக்கேற்ப

செய்முறை:

அவல், பொட்டுக் கடலையை தனித்தனியே ஒரு வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

சர்க்கரையையும் பொடி செய்து கொள்ள வேண்டும்.

வாணலியில் சிறிது நெய்விட்டு, முந்திரி, தேங்காய்த் துருவல், திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் இவை அனைத்தையும் போட்டு ஏலப்பொடியை சேர்த்து, பால், நெய் விட்டு நன்கு கிளறி லட்டுகளாகப் பிடிக்கவும்.

அவல் லட்டு

தேவையானவை

மைதா மாவு - 150 கிராம்
தேங்காய் (துருவியது) - 1 கப்
சர்க்கரை - 50 கிராம்
ஏலக்காய் - 6
நெய் (அல்லது) டால்டா - 2 டேபிள் ஸ்பூன்

செ‌ய்யு‌ம் முறை

மைதாமா‌வி‌ல் ‌சி‌றிது நெய்விட்டு த‌ண்‌ணீ‌ர் சே‌ர்‌த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைய வேண்டும்.

சிறிய உருண்டைகளாகச் செய்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிச் சர்க்கரையும் ஏலக்காயும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உருண்டைகளாகச் சப்பாத்தி இடுவது போல் வட்டமாக இட்டுக் கொண்டு நடுவில் இனிப்பை வைத்து பப்ஸ் செய்யும் அச்சால் வடிவம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நெய்யைக் காய வைத்து ஒவ்வொன்றாகப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

பிறகு அடுக்கி வைக்கும்பொழுது ஒவ்வொன்றின் மேலும் வண்ணத் தேங்காய்ப் பூவைத் தூவி வைத்தால் அழகாக இருக்கும்.

இ‌னி‌ப்பு பப்ஸ்

வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1/2 ‌கிலோ
பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1/2 ‌கிலோ
வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5
ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு
இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி
பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப்
த‌‌யி‌ர் - 1 கப்
ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4
‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப்
எலு‌மி‌ச்சை - 1

செ‌ய்முறை:

‌மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம்.

கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌‌ஞ்‌சி இலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம்.

வெ‌‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுதை போ‌‌ட்டு வத‌க்கவு‌ம்.

த‌யி‌ர், ‌உ‌ப்பு, மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌விடவு‌ம்.

த‌ண்‌ணீ‌‌ர் கொ‌தி‌‌க்கு‌ம் போது வ‌ஞ்‌சிர‌ம் ‌மீ‌ன் து‌ண்டுகளை பர‌ப்‌பி கு‌க்கரை மூடவு‌ம். ‌

ஒரு ‌வி‌சி‌ல் வ‌ந்தது‌ம் கு‌க்கரை இற‌க்‌‌கி எலு‌மி‌ச்சை‌சாறை ‌பி‌ழி‌‌ந்து பரிமாறவு‌ம்.

வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி

மீன் - 4 துண்டுகள்
வெங்காயம் - 3 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
இஞ்சி, பூண்டு ‌விழுது - 2 தே‌க்கர‌ண்டி
க‌றிவே‌ப்‌பிலை, மல்லி இலை - ‌சி‌றிது
மிளகாய்த் தூள் - 1 தே‌க்கர‌ண்டி
மிளகுத் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை, லவ‌ங்க‌ம் - 1 சிறிது
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மீன் துண்டுகளில் 1 துண்டு மீனை மட்டும் முள்ளை நீக்கி உ‌தி‌ர்‌த்து வைக்கவும்.

மீதமுள்ள 3 மீன் துண்டுகளில் கொஞ்சம் மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு ‌விழுது, உப்பு சேர்த்து பிரட்டி ஊற வை‌க்கவு‌ம்.

பின் மசாலா பிரட்டிய 6 துண்டுகளை தவா‌வி‌ல் போ‌ட்டு எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு பொரித்து எடுக்கவும்.

வாண‌லி‌யி‌ல் எண்ணை ‌வி‌ட்டு பட்டை, வெங்காயம், கறிவேப்பிலை, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, த‌க்கா‌ளி, கொ‌த்து ‌ம‌ல்‌லி என அனை‌த்தையு‌ம் போ‌ட்டு நன்கு வதக்கவும்.

அ‌தி‌ல், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து மு‌ள் எடு‌த்த ‌மீனை சே‌ர்‌த்து 5 ‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

‌பிறகு பொரித்த மீன்களை சேர்த்து லேசாக‌க் ‌கிள‌றி இற‌க்கவு‌ம்.

மீ‌ன் மசாலா

பெரிய தேங்காய் அளவு உள்ள பலாக்காய் ஒன்றை அறிந்து அதில் உள்ள பலாப்பிஞ்சுகளை எடுத்து சுமாரான அளவில் அரிந்து கொள்ளவும்.

பிறகு, ஆழாக்கு தண்ணீரில் போதிய அளவு உப்பும், மஞ்சள் பொடியும் போட்டு நன்றாக வேகவைத்து, தண்ணிரைக் கொடவிட்டு பலாப்பிஞ்சுகளை எடுத்துக் கொள்ளவும்.

கால் ஆழாக்குப் பயற்றம் பருப்பை நெந்யில் வறுத்து, அரை ஆழாக்கு தண்ணீர் வேகவிடவும்.

மிளகாய் இரண்டு, மிளகு ஆறு, மல்லி ஒரு தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் இரண்டு தேக்கரண்டி இவற்றை நெய்விட்டு வறுத்து நன்கு அரைத்து பின்னர், கால் ஆழாக்கு தண்ணீரில் கரைத்துப் பருப்பில் கொட்டி பலாப்பிஞ்சுத் துண்டுகளைப் போடவும்.

பலாப்பிஞ்சு நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும், தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம் சிறிதளவு, சீரகம் அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிது போட்டு சிவந்ததும் பலாப்பிஞ்சுகளை அத்துடன் கொட்டி, தேங்காயத் துருவல் கால் முடி போட்டு, மல்லி தழை போட்டு கிளறி இறக்கவும்.

பலாக்காய் பொரியல்

வெல்லம் - 1/2 கி
மு.பருப்பு - 10 திராட்சை - 10
ஏலக்காய் - 15
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பால் - 1 ஆழாக்கு காய்ச்சியது
சாதிக்காய், பச்சைக்கற்பூரம் - சிறிது
நெய் - 3 ‌‌ஸ்பூன்
இலவங்கம் - 4

செய்முறை:

அடு‌ப்‌பில் வாணலியை வைத்து 3 ‌‌ஸ்பூன் நெய்யை விட்டு முந்திரி திராட்சையை வறுத்துக்கொள்ள வேண்டும். பின் ஏலக்காய், சாதிக்காய், இலவங்கத்தைப் பொரித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் க.பருப்பு, ப.பருப்பு, அரிசி ரவையை லேசாக வறுத்து வேறு ஒரு கனமான பாத்திரத்தில் நீர்விட்டு, மூன்றையும் நன்றாக வேக வைக்க வேண்டும்.

வெல்லத்தை சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, வேகவைத்த பருப்புடன் சேர்க்க வேண்டும். தேங்காய்த் துருவலையும் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கி விட வேண்டும்.

வறுத்த முந்திரி திராட்சை, சாதிக்காய், ஏலக்காய் பொடி, பச்சை கற்பூர பொடி, பால் ஆகியவற்றைச் சேர்த்து கரண்டியால் கலக்க வேண்டும். நீர் அதிகமாக இருக்கக் கூடாது. அக்கார வடிசல் கூட்டு போன்று இருத்தல் வேண்டும். ஊட்ட‌ச் சத்து மிக்க அக்கார வடிசல் ரெடி.

குறிப்பு: பாலை இறக்கியவுடன் தான் விட வேண்டும். மிகச்சூட்டில் விட்டால் திரிந்துவிடும்.

அக்கார வடிசல்

சாதாரண சீடை அனைவருக்கும் தெரியும். ஆனால் தயிர் சீடை செய்வது எப்படி என்று தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்.

அரைப்படி புளித்த நல்ல கட்டித் தயிரை ஒரு வெள்ளைத் துணியில் கொட்டி முடிச்சுப் போட்டு தொங்கவிட்டால் மூன்று மணி நேரத்திற்குள் அதிலுள்ள நீர் வடிந்துவிடும்.

அரைப்படி அரிசியை ஊறவைத்து, நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.

பின்னர், அரிசி மாவில் 100 கிராம் வெண்ணெயை போட்டு ஒரு பிடி உப்பு போட்டு பிசைந்து கொள்ளவும்.

அதன்பின்னர், தோல் சீவிய விரல் நீள இஞ்சி, மிளகாய் வற்றல் பத்து, பெருங்காயம் ஒரு துண்டு ஆகியவற்றை நைசாக அரைத்து எடுத்து மாவில் போடவும்.

பிறகு, முடிச்சிலுள்ள வடிந்த தயிரை போட்டு நன்கு பிசையவும். (சுமார் 10 நிமிடமாவது பிசைய வேண்டும்)

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வெள்ளைத் துணியில் தட்டி வைக்கவும்.

சற்று ஆறியதும், வாணலியில் நெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சீடைகளைப் போட்டு ஓசையடங்க வேகவிட்டு எடுக்கவும்.

அவ்வளவுதான் தயிர் சீடை தயார். இது சுவையாகவும், நாட்படவும் இருக்கும்.

தயிர் சீடை

முக நூல்

Popular Posts