background img

புதிய வரவு

Showing posts with label kabil sibal. Show all posts

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த இமாலய ஊழலையடுத்து, அதற்கான புதிய கொள்கை வகுக்கப்படும் என்று கூறியுள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், இதற்கு மேல் தொலைத் தொடர்பு சேவைக்கு அளிக்கப்படும் உரிமத்துடன் அலைக்கற்றை ஒதுக்கீடு சேர்த்தளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கபில் சிபல், “இதற்குமேல் உரிமத்துடன் அலைக்கற்றை சேர்த்து வழங்கப்பட மாட்டாது. ‘ஒன்றிணைந்த உரிமம’ (Unified Licence) என்று வழங்கப்படும் உரிமத்திற்கு, தொலைத் தொடர்பு சேவை நடத்தும் நிறுவனம், எப்படிப்பட்ட சேவையைத் தர விரும்புகிறதோ அதற்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதற்கு சந்தை விலை அடிப்படையிலான முறை (ஏலம்) கையாளப்படும” என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படையில் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வகுப்படுவதால், செல்பேசி சேவைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கு 4.4 மெஹா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் - தற்போது பெரும் நிறுவனங்கள் பயன்படுத்திவரும் - 6.2 மெஹா ஹெர்ட்ஸ் அலைகற்றை பெற விரும்பினால், மீதமுள்ள 1.8 மெஹா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான சந்தை விலையை அளித்துதான் பெற முடியும்.

இந்த கொள்கை மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

“இதற்கு மேல் 6.2 மெ.ஹெ. அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு, சரியான போட்டியை உருவாக்கிடும் ஏல முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ள கபில் சிபல், நிறுவனங்களுக்கு இடையே சரி சமமான சந்தை வாய்ப்பை பெறும் வகையில் அவைகள் பெற்ற அலைக்கற்றைக்காக அரசுக்கு அளிக்க வேண்டிய வருவாய் பகிர்வை சரி சமமாக அளிக்க வழிகாணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்குமேல் உரிமத்துடன் அலைக்கற்றை ஒதுக்கீடு கிடையாது: கபில் சிபல்

இனிமேல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு உரிமங்கள் வழங்கப்படாது என்றும், கூடுதல் ஸ்பெக்ட்ரம் பெற விரும்பும் சேவைதாரர்கள் சந்தை விலையில் அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் இன்று தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு விரைவில் புதிய கொள்கை: கபில் சிபல்

இனிமேல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு உரிமங்கள் வழங்கப்படாது என்றும், கூடுதல் ஸ்பெக்ட்ரம் பெற விரும்பும் சேவைதாரர்கள் சந்தை விலையில் அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் இன்று தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை (சிஏஜி) அளித்த அறிக்கையை தாம் அவமதிக்கவில்லை என்று மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் கபில் சிபல் பல்டியடித்துள்ளார். 

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கபில் சிபல், இந்த அறிக்கை தவறானது என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கபில் சிபல் கருத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 

தன்னுடைய பொறுப்பை துளி கூட உணராமல் செயல்படும் அமைச்சரின் செயல்பாடு மிகவும் துரதிஷ்டவசமானது என்று கூறிய நீதிபதிகள், தனிப்பட்ட எவர் ஒருவருடைய தலையீட்டுக்கும் அடிபணியாது சி.பி.ஐ. தனது புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தனர். 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை தொடர்ந்து, கபில் சிபல் சிஏஜி அறிக்கை தொடர்பான தமது நிலையிலிருந்து பல்டியடித்துள்ளார். 

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஏஜி அறிக்கையை தாம் எந்தவிதத்திலும் அவமதிக்கவில்லை என்றும், ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையிலும் தாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாக்வோ தலையிடவில்லை என்றார். 

அதே சமயம 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் குறித்த சிஏஜி அறிக்கையை அவமதிக்கவில்லை: கபில் சிபல் பல்டி

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை அறிக்கையை குறைக்கூறிய மத்திய அமைச்சர் கபிசிபலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கபில் சிபல், இந்த தணிக்கை துறை அறிக்கை தவறானது என்று கூறினார்.

இன்னிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கபில் சிபல் கருத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தன்னுடைய பொறுப்பை துளி கூட உணராமல் செயல்படும் அமைச்சரின் செயல்பாடு மிகவும் துரதிஷ்டவசமானது என்று கூறிய நீதிபதிகள், தனிப்பட்ட எவர் ஒருவருடைய தலையீட்டுக்கும் அடிபணியாது சி.பி.ஐ. தனது புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை அறிக்கையை குறைக்கூறிய மத்திய அமைச்சர் கபிசிபலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கபில் சிபல், இந்த தணிக்கை துறை அறிக்கை தவறானது என்று கூறினார்.

இன்னிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கபில் சிபல் கருத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தன்னுடைய பொறுப்பை துளி கூட உணராமல் செயல்படும் அமைச்சரின் செயல்பாடு மிகவும் துரதிஷ்டவசமானது என்று கூறிய நீதிபதிகள், தனிப்பட்ட எவர் ஒருவருடைய தலையீட்டுக்கும் அடிபணியாது சி.பி.ஐ. தனது புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

சென்னை, ஜன.3: ஆராய்ச்சியிலும் கல்வியிலும் கவனம் செலுத்த 14 புதுமைப் பல்கலைக்கழகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் 98-வது இந்திய அறிவியல் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. மாநாட்டுத் தொடக்க விழாவில் அவர் பேசியது:

ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக பொதுத்துறையில் உள்ள நவரத்தின நிறுவனங்களைப் போன்று பல்கலைக்கழகங்களையும் தத்தெடுக்கும் திட்டம் உள்ளது.

இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்யப்படும். வெளிநாட்டிலிருந்து நிதி பெற அனுமதி அளிப்பதோடு, முழுமையான தன்னாட்சி வழங்கப்படும்.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு இந்தியப் பல்கலைக்கழகங்கள் அதிக அளவில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளன.

நாடு முழுவதும் 14 புதுமைப் பல்கலைக்கழகங்களை தொடங்குவது குறித்து திட்டமிட்டு வருகிறோம். இந்தப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் புதிய சாதனைகளைப் படைக்கும். ஏழ்மை, பசி, நீர்ப் பிரச்னை ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்டும்.

இந்தப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பில் மற்ற பல்கலைக்கழகங்களைவிட பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றார் கபில் சிபல்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை அதிக அளவில் உருவாக்கும் வேளையில், உயர் கல்வியின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்றார்.

அமர்த்யா சென், ரத்தன் டாடா பங்கேற்கவில்லை

சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிய 98-வது இந்திய அறிவியல் மாநாட்டில் நோபல் விஞ்ஞானி அமர்த்யா சென், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் மாநாட்டுத் தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.

அறிவியல் மாநாட்டு தொடக்க விழாவில், ரத்தன் டாடாவுக்கு ஜவாஹர்லால் நேரு விருது வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், நோபல் விஞ்ஞானி அமர்த்யா சென்னுக்கு மாநாட்டுத் தலைவரின் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இருவரும் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.

ஆராய்ச்சிகளுக்கென 14 புதுமைப் பல்கலைக்கழகங்கள்: கபில் சிபல்

முக நூல்

Popular Posts