background img

புதிய வரவு

Showing posts with label minister. Show all posts

கேரள சட்டசபை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று நடந்தது.கேரள மந்திரி சுரேந்திரன் பிள்ளை தான் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். பூதுரா என்ற இடத்தில் அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கல்வீச்சும் நடந்தது. இதில் ஒரு கல் மந்திரி சுரேந்திரன் பிள்ளை தலையில் பட்டது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

முன்னதாக இதே பகுதியில் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி பிரசாரம் செய்தார். அப்போது அவரை பிரசாரம் செய்ய விடாமல் கம்யூனிஸ்டு தொண்டர்கள் தடுக்க முயன்றனர். இதனாலும் மோதல் ஏற்பட்டது. அதேபோல காயம்குணம், கருணாகப்பிளி, பிரிதலமனா, கைபிமங்கலம் ஆகிய இடங்களிலும் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரத்தில் கேரள மந்திரி மீது கல்வீச்சு; மண்டை உடைந்தது

பாகிஸ்தான் சிறுபான்மையின நல மந்திரியாக இருந்தவர் ஷாபாஸ்பாத்தி. இன்று மதியம் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே மறைந்து இருந்த மர்ம மனிதன் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஷாபாஸ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவரை சுட்டவன் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை பிடிக்க இஸ்லாமாபாத் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ஷாபாஸ் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தார். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ தலைவர்களில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார்.

பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை: மர்ம மனிதன் திடீர் தாக்குதல்

புதுடில்லி:"இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட, தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கேள்வி நேரத்தின் போது, பதிலளித்து பேசியதாவது:தலைநகர் டில்லியில் நடக்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, சட்டம் ஒழுங்கு நிலை கட்டுக்குள் உள்ளது.
உலக அளவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, 1 லட்சம் மக்களின் அடிப்படையில், டில்லியில், 2001ல், 392.66 ஆக இருந்த குற்றச் செயல்களின் குறியீட்டு எண், 2010ல், 281.34 ஆக குறைந்துள்ளது.எனினும், அரசு அளித்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2009ல், 425 ஆக இருந்த பாலியல் வன்முறை வழக்குகள், 2010ல், 458 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும், 17 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களைக் காட்டிலும், தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்.
இங்கு, பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையில் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. போலீஸ் வாகனங்கள், ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக இடங்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்:உள்துறை அமைச்சர் பெருமிதம்

இனிமேல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு உரிமங்கள் வழங்கப்படாது என்றும், கூடுதல் ஸ்பெக்ட்ரம் பெற விரும்பும் சேவைதாரர்கள் சந்தை விலையில் அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் இன்று தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு விரைவில் புதிய கொள்கை: கபில் சிபல்

இனிமேல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு உரிமங்கள் வழங்கப்படாது என்றும், கூடுதல் ஸ்பெக்ட்ரம் பெற விரும்பும் சேவைதாரர்கள் சந்தை விலையில் அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் இன்று தெரிவித்தார்.

புதுடில்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஒப்பந்தங்கள் பெற்ற, ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பாக்கி தொகை செலுத்த வேண்டியுள்ளது. இவை வழக்கு தொடுக்க முடிவு செய்திருப்பதால் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மேகன் உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் கடந்த ஆண்டு(அக்., 3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. இப்போட்டிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 70 ஆயிரம் கோடி நிதியில் பெருமளவு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
தற்போது, இப்போட்டிக்கான ஒப்பந்தக்காரர்களுக்கு முழுத் தொகை செலுத்தப்படாதது தெரிய வந்துள்ளது. துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் பெற்ற ரிச் பர்ச் ஸ்பெக்டக், வாணவேடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்த ஹாவர்டு சன்ஸ் உள்ளிட்ட நான்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களுக்கான தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளன. பாக்கி தொகையை வசூலிக்க வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒப்பந்தக்காரர்களுக்கான பாக்கி தொகை வழங்குவது பற்றி 10 நாட்களில் தீர்வு காணப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""போட்டிகள் முடிந்து மூன்று மாதங்களாகியும், ஒப்பந்த தொகை வழங்கப்படவில்லை. இப்பிரச்னை இனியும் நீடிக்க விரும்பவில்லை. மிக விரைவில் தீர்வு காணப்படும். மத்திய விளையாட்டு செயலருடன் விவாதித்தேன். ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகளிடம் பாக்கி தொகை குறித்து ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளேன். 10 நாட்களுக்குள் பாக்கி தொகையை செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்,''என்றார்.
இது தொடர்பாக, போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில்,""சில நிறுவனங்கள் முறைப்படி செயல்படவில்லை. எனவே, கடைசி கட்ட தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இறுதி அறிக்கை கிடைத்த பின் பாக்கி தொகை வழங்கப்படும். பர்ச் நிறுவனத்துக்கு 90 சதவீத தொகை வழங்கப்பட்டு விட்டது. ஹாவர்டு சன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதில், வரி தொடர்பான விளக்கம் தேவைப்பட்டதால் தான் பாக்கி தொகை நிறுத்தப்பட்டது,''என்றார்.

காமன்வெல்த் ஒப்பந்த பிரச்னை: 10 நாளில் தீர்வு: மத்திய அமைச்சர் உறுதி

முக நூல்

Popular Posts