background img

புதிய வரவு

Showing posts with label leaders. Show all posts

டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது ஏன் என்பதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார் சோனியா காந்தி.

தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸுக்கு ஒரு வேலையும் இல்லாமல் போய் விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது காங்கிரஸ். வெறும் ஐந்து பேரை மட்டுமே தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள இந்த அடி, அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது தெரியவில்லை. காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை எந்த வெற்றிவந்தாலும் அது ஓசிதான். எனவே இந்த தோல்வியால் காங்கிரஸார் யாரும் மனம் உடைந்து போனதாக தகவல் இல்லை.

இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை அடித்து தரைமட்டமாக்கி விட்ட இந்த தோல்வியால் காங்கிரஸ் மேலிடம் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளது. காரணம், இந்த அடித்தளத்தை வைத்துத்தானே கூட்டணிக்குப் பேரம் பேச முடியும் என்பதால்.

மேலும் 2014ல் லோக்சபா தேர்தல் வேறு வருகிறது. எனவே அதற்குள் கட்சியை மீண்டும் பலப்படுத்தி ஸ்திரப்படுத்த வேண்டும் என்ற வேகத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

முதலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை அழைத்து சோனியா பேசியுள்ளார். இவர்தான் தமிழக காங்கிரஸிலேயே மிகப் பெரிய கோஷ்டியின் தலைவராவார். இதையடுத்து எம்.பி. கார்வேந்தனை அழைத்து சோனியா பேசியுள்ளார். அடுத்து இளங்கோவன் உள்ளிட்ட அத்தனை கோஷ்டித் தலைவர்களையும் சோனியா அழைத்துப் பேசலாம் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தங்கபாலுவை தூக்கி விட்டு வேறு ஒரு தலைவரை காங்கிரஸ் மேலிடம் நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் அடைந்த படு தோல்விக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி பொறுப்பேற்றுள்ளார்.

என்.ஆர். காங்கிரஸ் மூலம் காங்கிரஸுக்கு புதுவையில் ஆப்பு வைத்து விட்டார் முதல்வர் என்.ரங்கசாமி. இவரை பற்றி தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக தற்போது புலம்புகிறது காங்கிரஸ்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக சோனியாவை சந்தித்த போது நாராயணசாமி தெரிவித்தாராம். அதேபோல பிரதமரிடமும் தான் தோல்விக்குப் பங்கேற்பதாக நாராயணசாமி கூறியபோது அவருக்கு ஆறுதல் கூறினாராம் பிரதமர்.

பாமகவும் ஆலோசனை:

காங்கிரஸை விட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள கட்சி பாமக. தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது பாமக. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியே தோல்வியுற்று விட்டார்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட கட்சி பாமக. மேலும் முதல் ஆளாக பாமகவுக்குத்தான் சீட் ஒதுக்கினார் கருணாநிதி. அக்கட்சிக்கு 30 இடங்களைக் கொடுத்தது திமுக. ஆனால் வெறும் 4 சீட்டில் மட்டுமே வென்றுள்ளது பாமக.

போட்டியிட்ட இடங்களிலெல்லாம் அது பெரும் அடியை வாங்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது வன்னியர் பெல்ட் எனப்படும் தொகுதிகளில் எல்லாம் படு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக வேளச்சேரி தொகுதியை கடுமையாக போராடி வாங்கியது பாமக. ஆனால் அங்கு அக்கட்சிக்கு நல்ல தோல்வி கிடைத்துள்ளது.

இப்படி தங்களுக்கான வாக்கு வங்கி பலமாக இருந்தும் தோல்வி அடைந்தது ஏன் என்று பாமகவினர் யோசித்து, ஆலோசித்து வருகின்றனர்.

தங்களது தோல்விக்கு திமுகதான் காரணம் என்பது பாமகவினரின் எண்ணம். அதாவது திமுக மீதான மக்கள் அதிருப்தியே தங்களை காலி செய்து விட்டதாக பாமகவினர் கருதுகின்றனர்.

இதற்கிடையே பாமகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. ஏ.கே.மூர்த்தி தலைமையில்நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.

அதேசமயம் திமுக தரப்பில் இதுவரை வெளிப்படையான முறையில் இப்படி எந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

சட்டசபைத் தேர்தலில் ஏன் தோற்றோம்?-தமிழக தலைவர்களுடன் சோனியா ஆலோசனை!

தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்பு முடிந்து விட்டது. பதிவான வாக்குகள் அனைத்தும் இரும்பு திரை அரங்கிற்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் அனைவரும் பரீட்சை எழுதி விட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் மாணவர்களை போல் திக்.... திக்.... மனதோடு காத்திருக்கிறார்கள்.

வரலாறு காணாத வகையில் வாக்காளர்களிடையே எழுச்சி ஏற்பட்டு ஓட்டுகளை குத்தி தள்ளி விட்டார்கள். கிட்டதட்ட 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த அதிகப்படியான வாக்கு சதவீதம் யாரை வீழ்த்தும்? யாரை ஆட்சியில் அமர்த்தும்? என்பது புரியாத புதிராக உள்ளது.

அரசியல் கட்சிகளும் எதுவும் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. ஓட்டளித்த தொண்டர்களும் தங்கள் கற்பனை சக்திக்கு எட்டியவரை அலசி ஆராய்ந்தும் விடை காண முடியாமல் தத்தளிக்கிறார்கள். தேர்தல் பந்தயத்தில் வெற்றி பெற போகும் குதிரை எது? என்பது பற்றி களம் கண்ட கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்து கருத்து கேட்டோம்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:-

தி.மு.க. தொண்டர்களின் கடினமான உழைப்பு காரணமாகவே வாக்காளர்கள் பெருமளவில் சென்று ஓட்டு போட்டிருக்கிறார்கள். இதனால் தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும். எங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள், வேலை வாய்ப்புகள் கிராம மக்களுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளது. எனவே கிராம மக்கள் ஆர்வமுடன் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவர்களுடைய விருப்பத்தையே காட்டுகிறது.

நகரங்களிலும் தி.மு.க. வுக்கு ஆதரவாகவே மக்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அதிக அளவில் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. எனவே மீண்டும் ஆட்சி அமைவது உறுதி.

அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன்:-

1967-ல் 76.5 சதவீத வாக்கு பதிவானது. அப் போது காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு தி.மு.க.வை முதல் முறையாக மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். ஒரு ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் போது இந்த மாதிரி எழுச்சி ஏற்படும். அப்படிப்பட்ட எழுச்சியைத்தான் இந்த தேர்தலில் பார்க்க முடிந்தது.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சகிக்க முடியாத ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு போன்ற கார ணங்களால் மக்களுக்கு தி.மு.க. மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. எனவேதான் அலை அலையாக வந்து மக்கள் ஓட்டளித்துள்ளார்கள்.

இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் என்று எல்லா தரப்பினரும் வந்து வாக்களித்துள்ளார்கள். அனைவரிடமும் மவுன பரட்சி இருந்துள்ளது. இந்த அலை இரட்டை இலைக்கு சாதகமான அலை. அ.தி.மு.க. நிச்சயம் தனித்தே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும்.

பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி:-

ஒரு ஆட்சியின் மீது கொண்ட வெறுப்பால்தான் அதிக அளவில் மக்கள் வாக்களிப்பாளர்கள் என்பது தவறான வாதம். தி.மு.க. ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட எந்த காரணமும் இல்லை. ஏழைகள், சுயஉதவி குழு பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என்று எல்லா தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள்.

மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எனவே தான் எல்லா தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளார்கள். எனவே தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகத்தான் அமையும்.

காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் கூறியதாவது:-

தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது தி.மு.க. மீண்டும் ஆட்சியை தொடர வேண்டும் என்ற எண் ணத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் கருதுகிறோம். தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டு சாதனையுடன் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மக்களை வெகுவாக கவர்ந்ததாகவே கருத வேண்டி உள்ளது.

குறிப்பாக சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் வழி காட்டுதலில் நிறைவேற்றப்பட்ட 100 நாள் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், வங்கிகளில் கல்வி கடன் வழங்கியது இவற்றின் வெளிப்பாடு மக்கள் ஆர்வ முடன் வந்து ஓட்டு போட்டதாக கருதுகிறோம்.

இதுதவிர போட்டோ ஒட்டிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கியது, தேர்தல் கமிஷனின் விழிப் புணர்வு பிரசாரம் ஆகியவை மக்களை அதிக அளவில் ஓட்டளிக்க வைத்துள்ளதற்கு காரணம்..

பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:-

ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற தீவிர எண்ணம்தான் மக்களை பெருமளவு வாக்களிக்க வைத்துள்ளது. அதற்காக இதை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை என்றும் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் வேண்டுமானால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து இருப்பார்கள்.

கடந்த கால செயல்பாடுகளை நினைத்தோ அல்லது இனி நன்றாக செயல்படுவார் என்ற எண்ணத்திலோ ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க சாத்தியமில்லை.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எல்லா தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஒரு சில தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.

பிரபல எழுத்தாளர் சோ:-

இந்த முறை தேர்தல் கமிஷனின் சிறப்பான செயல்பாடு காரணமாக மக்களிடையே வாக்களிக்க வேண்டும் என்ற ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. நமது ஓட்டு வீணாகாது என்ற நம்பிக்கை வாக்களர்களிடம் உருவாகி இருக்கிறது. தி.மு.க.வை ஆட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்ற எண்ணம் பெருவாரியான மக்களிடம் தோன்றி இருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல. விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பல காரணங்கள் சேர்ந்து கொண்டு மக்களை அதிக அளவில் வாக்களிக்க வைத்துள்ளது. இது தி.மு.க. ஆட்சியை மாற்றுவதற்கான வாக்குகள்தான் என்றே கருதுகிறேன்.

1967-க்கு பிறகு அதிக வாக்குபதிவு; வாக்காளர்கள் எழுச்சி யாருக்கு சாதகம்? தலைவர்கள் கருத்து

பொங்கல் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், அதிமுக பொதுச்செயலர் ஜெயலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் திருநாளில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன். இத்திருநாள் அனைத்து பிரிவினரையும் அன்பால் இணைத்து நாட்டு முன்னேற்த்திற்கு உழைக்க உற்சாகம் அளிக்கட்டும்.

துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் பல விதமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாள் மக்கள் அனைவருக்கும் வளமான, மகிழ்ச்சியான வாழ்வை வழங்க வாழ்த்துகிறேன்.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி:

அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாட இருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பை அறுவடை செய்து, செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், பலன் பெறக் காரணமாக இருந்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி நவிலும் விழா பொங்கல் பெருவிழா. சாதி மத வேறுபாடு இன்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் அனைவராலும் கொண்டாடப்படும் விழா தமிழர் திருவிழாவான பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழரின் தன்மானம் தனித் தன்மையோடு திகழ, தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட, சர்வாதிகார ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்க வேண்டும் என்று தெரிவித்து, உங்கள் அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும், செல்வமும், மகிழ்வும் பால் போல் பொங்கி வழிய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ:

உழைப்பின் அறுவடையில் களிப்புறும் திருநாள்தான் பொங்கல் விழா! காடு கழனிகளில் சிந்திய வியர்வைத் துளிகளில் விளைந்து பொலிந்திடும் புது வரவுகளின் எண்ணிக்கையில் ஏற்றம் பெற்று மகிழ்ந்திடும் பொன்னாளாம் பொங்கல் திருநாள். இன்பத் திருநாளாம் இனிய பொங்கல் புதுநாளில் கொடிய ஆட்சியை மாற்றிடச் சூளுரை ஏற்போம் சுயமரியாதையோடு வாழ்வோம். பொல்லாத ஆட்சியை வேரோடு சாய்த்திட ஒன்றுபடுவோம். அதுவே நாம் கொண்டாடும் பொங்கல் விழாவுக்குப் பெருமை சேர்த்திடும் ஒரே வழி என உறுதி கொள்வோம்.

இன்றைய ஆட்சியாளர்களின் இலவசங்களுக்காக ஆசைப்பட்டு, ஐந்தாண்டுக் காலத்தை அடமானம் வைத்துவிடக் கூடாது என்கிற உறுதிமொழியை - பொங்கல் வாழ்த்தாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம். இந்தப் பொங்கல் விழா, தமிழர்தம் வாழ்வில் வளம் குவிக்கும் ஆண்டுக்கு வழிகாட்டும் விழாவாக மலரும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்ப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:

தமிழினத்தின் பாரம்பரிய திருவிழா பண்டிகையான தைப் பொங்கல் திருநாள் உலகெலாம் வாழும் கோடான கோடி தமிழர்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் கொண்டாடி மகிழும் இனிய இப்பொங்கலின் இன்பம் இனிவரும் காலங்களிலும் தொடரவும் வேண்டுமென "பொங்கலோ பொங்கல்" என்ற ஆனந்த முழக்கம் தமிழ் மண்ணிலும், உலகளாவிய தமிழர் மனதிலும் ஒலிக்கட்டும். இல்லாமை, அறியாமை, ஏழ்மை முழுமையாய் அகலட்டும் செழுமை, ஒற்றுமை ஒருமைப்பாடு மேலும் உயரட்டும். தமிழ் மக்கள் மற்றும் தமிழகத்தில் வாழும் இன்னபிற மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது இனிய பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன்:

பூமிப்பரப்பின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" என்பது வள்ளுவர் வாய்மொழி. உழவை, உழவர்களை, உழைப்பை கொண்டாடும் திருநாளே பொங்கல் நன்னாள். உலகின் பல்வேறு பகுதிகளில் அறுவடைத் திருநாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டாலும், தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளை உலகிற்கு பறைசாற்றும் நாளாகவும் பொங்கல்நாள் விளங்குகிறது. பொங்கல் திருநாள் என்பதே ஒற்றுமையின் வெளிப்பாடாகும். மதவெறி, ஜாதிவெறி சக்திகளை முறியடித்து, மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்க உறுதியேற்கும் நாளாக இப்பொங்கல் திருநாள் அமையட்டும். ஏமாற்றங்களையே சந்தித்துவரும் தமிழ் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் காண மாற்றங்கள் உருவாகும் ஆண்டாக தை முதல் நாள் துவங்கும் தமிழ் புத்தாண்டு அமையட்டும்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

ஆளுக்கொரு காணி நிலம் அடைந்திட வேண்டும்
அதன் நடுவே கேணியொன்று அமைந்திட வேண்டும்
காளை பூட்டி ஏறுழுது பயிரிட வேண்டும்
வாழையுடன் நெல், கரும்பு விளைந்திட வேண்டும்
வறுமையுடன் பசிப் பிணியும் ஒழிந்திட வேண்டும்
ஏழைகளே எவருமில்லை எனும் நிலை வேண்டும்
மாளிகையாய் குடிசையெலாம் மலர்ந்திட வேண்டும்
மனைகள்தோறும் பொங்கலிட்டு மகிழ்ந்திட வேண்டும்.

இவ்வாறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

முக நூல்

Popular Posts