background img

புதிய வரவு

Showing posts with label sushma swaraj. Show all posts

கவுகாத்தி:"அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ.,வுக்கு கணிசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், அசாம் மாநில தேர்தலுக்கு முக்கியத்துவம் செலுத்த திட்டமிட்டுள்ளோம்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, நேற்று கவுகாத்தி வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ.,வுக்கு கணிசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், அசாம் மாநில தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். இங்கு எங்கள் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.தற்போது தேர்தல் நடக்கவுள்ள இந்த ஐந்து மாநிலங்களில், அசாமை தவிர மற்ற மாநிலங்களில் எங்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. இந்த தேர்தலில் அந்த நிலை மாறும். மேற்கு வங்கத்தில் ஒரு சில தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். கேரள சட்டசபையில் முதல் முறையாக எங்கள் கட்சி சார்பில், இந்த முறை எம்.எல்.ஏ.,க்கள் நுழைவர். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

அசாம் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., அதிக அக்கறை: சுஷ்மா

ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் மையப்பகுதியில் உள்ள லால் சவுக்கில் குடியரசுத் தினத்தன்று தேசக் கொடியேற்றச் சென்ற பாரதிய ஜனதா கட்சியினரின் ஏக்தா யாத்ரா, அம்மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. யாத்ராவிற்கு தலைமையேற்ற சுஷ்மா சுவராஜ், அருண் ஜெயிட்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

லால் சவுக்கில் கொடியேற்ற ஜம்மு- காஷ்மீருக்குள் சென்ற பாரதிய ஜனதா தலைவர்களை அம்மாநில அரசு பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைத்தது. ஆனால் அவர்கள் இன்று மீண்டும் தங்கள் யாத்ராவை தொடங்கி, அம்மாநிலத்திற்குள் நுழைய முற்பட்டபோது, லக்கான்பூரில் கைது செய்யப்பட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மக்களவைத் தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவைத் தலைவர் அருண் ஜெயிட்லி, முன்னாள் அமைச்சர் அனந்த் குமார், அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அனுராக் தாக்கூர் ஆகியோர் லக்கான்பூரில் கைது செய்யப்பட்டனர்.

தாங்கள் கைது செய்யப்பட்டதை ‘வரலாற்றுத் தவறு’ என்று கூறிய சுஷ்மா சுவராஜ், “தேசக் கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அதனை ஏந்திச் செல்பவர்கள் கைது செய்யப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது! சுஷ்மா, ஜெயிட்லி கைது

புதுதில்லி, ஜன. 2: 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை.

இது குறித்து இணையதளத்தில் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதாவது:

விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல. பத்துக்கும் மேற்பட்ட அளவில் விவாதம் நடத்தியாகிவிட்டது. ஆனால் இதுவரை எந்தப் பலனும் கிட்டவில்லை. விலை குறைந்தபாடில்லை. விலையைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டதால் என்ன விளைந்தது என்பதை அரசு விளக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கபட்டதோடு, நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வெட்டுத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த வெட்டுத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இத்தனை நடந்தும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த விஷயத்தல் அரசு கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டது.

இப்போது 2-ஜி அலைக்கற்றை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியான பாஜக முன்வரவில்லை என்று ஆளும் தரப்பில் குறை கூறி வருகினறனர். விலை உயர்வு குறித்த விவாதத்தால் எந்தப் பயனும் கிட்டவில்லையோ அதேபோலத்தான் 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து விவாதிப்பதாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதனால் விவாதிப்பதை எல்லாம் நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்காவிட்டால் குளிர்கால கூட்டத் தொடரைப் போல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் மிரட்டி வருகின்றனர். பிப்ரவரி 3-வது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து பொது கணக்குக் குழுவால் முழுமையாக விசாரிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்பதற்கு இல்லை என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.

ஸ்பெக்ட்ரம்: நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் எந்தப் பயனும் இல்லை

முக நூல்

Popular Posts