background img

புதிய வரவு

Showing posts with label Admk. Show all posts

சென்னையில் நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குறைந்த பயண நேரத்தில் விபத்தில்லாத பாதுகாப்பான போக்குவரத்து வசதி அளிக்கவும் `மோனோ ரயில்' அதிவிரைவு போக்குவரத்து திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி 4 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1. வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரை பெருங்களத்தூர், இரும்புலியூர் (கிழக்கு), தாம்பரம் (கிழக்கு), கேம்ப் ரோடு, காமராஜர் நகர், செம்பாக்கம், கவுரிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், காமாட்சி மருத்துவமனை, மடிப்பாக்கம் கூட்டுரோடு ஆகிய இடங்கள் வழியாக 23 கிலோ மீட்டர் தொலைவிற்கும்,

2. பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா சந்திப்பு வரை குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர், முகலிவாக்கம் சந்திப்பு, ராமாவரம், நந்தம்பாக்கம் பட்ரோடு ஆகிய இடங்கள் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்திற்கும்,

3. பூந்தமல்லியில் இருந்து வடபழனி சந்திப்பு வரை குமணன்சாவடி, கரையான்சாவடி, சவீதா பல்மருத்துவக் கல்லூரி, வேலப்பன் சாவடி, மதுரவாயல், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய இடங்கள் வழியாக 18 கிலோ மீட்டர் தூரத்திற்கும்,

4. வண்டலூரில் இருந்து புழல் வரை பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம், சென்னை ஏற்றுமதி வர்த்தக மண்டலம் (மெப்ஸ்), குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், ஆண்டாள்குப்பம், குன்றத்தூர், கொல்லசேரி, மாங்காடு, குமணன்சாவடி, கரையான்சாவடி, மேல்பாக்கம், பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, ஆவடி மார்க்கெட், ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர் (ஓ.டி) புதூர், கள்ளிக்குப்பம், சூரப்பேட்டை, புழல், கதிர்வேடு ஆகிய இடங்கள் வழியாக 54 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதில் முதல்கட்டமாக 3 வழித்தடப் பணிகளும், இரண்டாவது கட்டமாக 4-வது வழித்தட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மோனோ ரயில் பாதை மேம்பால தூண்கள் ஒரு சதுர மீட்டருக்கு குறைவான சுற்றளவு கொண்டவையாக இருக்கும் என்பதால், சாலையின் நடுவே மிகக் குறைந்த நீளமே தேவைப்படும். தூண்கள் சாலையின் நடுவே மிக எளிதாகவும், விரைவாகவும் அமைத்து கட்டுமானப் பணிகள் செய்யப்படுவதால் மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி மோனோ ரயில் திட்டம் மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி பார்வைக்கு அழகாகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்கும்.

மேலும் இந்தத் திட்டத்தால் தமிழக அரசுக்கு எந்தவித நிதிச் சுமையும் ஏற்படாத வகையில், வடிவமைத்தல், நிறைவேற்றுதல், நிதித் திரட்டுதல், இயக்குதல், பராமரித்து ஒப்படைத்தல் என்ற முறையில் (Design, Build, Fund, Operate and Transfer-DBFOT) தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு மோனோ ரயில் சரிவராது:

ஆனால், சென்னை போன்ற போக்குவரத்து மிக மிக அதிகம் உள்ள பெருநகருக்கு மோனோ ரயில் திட்டம் ஒத்து வராது என்று டெல்லி மற்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்திய பிரபல போக்குவரத்துக் கட்டுமானப் பொறியாளர் ஸ்ரீதரன் பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு இப்போது அமல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விட்டுவிட்டு, மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா அரசு வேகவேகமாக செயல்படுத்துவது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மெட்ரோ ரயில் திட்டத்தை விட 50 சதவீதம் அதிக செலவு பிடிப்பதாகும், மேலும் மெட்ரோ ரயிலோடு ஒப்பிடுகையில், மோனோ ரயிலில் 4ல் ஒரு பங்கு பயணிகள் தான் பயணிக்க முடியும் என்றும் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

மேனோ ரயிலால் யாருக்கு லாபமோ தெரியவில்லை, ஆனால் மக்களுக்கு லாபமில்லை என்கிறார்கள் பெருநகரத் திட்ட வல்லுனர்கள்.

சென்னையில் நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம்: சட்டப்பேரவையில் தாக்கல்

கடந்த 1989ல், தேர்தலுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 1977, 1980 மற்றும் 1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களை பிடித்து கருணாநிதி முதல்வரானார். பின் 1991ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 1996ல் நடந்த தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார்.தொடர்ந்து 2001ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க., கூட்டணியுடன் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்து ஜெயலலிதா முதல்வரானார். 2006 தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடித்து கருணாநிதி முதல்வரானார். 2011 தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜெ., முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறை தமிழகத்தில், கடந்த 22 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இந்த வரலாறு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை காலம் உணர்த்தும். மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தது இல்லை என்ற வரலாறும் நீடிக்கிறது.இதேபோன்ற பெருமை, அண்டை மாநிலமான கேரளாவுக்கும் உண்டு. கேரளாவில் 1957ல், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, அம்மாநில மக்கள் ஆட்சியை மாற்றி மாற்றி கொடுத்துள்ளனர். 1969-70 மற்றும் 1970-77ம் ஆண்டுகளில் சி.அச்சுதமேனன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். 1981-82 மற்றும் 1982-87ம் ஆண்டுகளில், கருணாகரன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இவை மட்டுமே விதிவிலக்காக உள்ளன. மற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநில மக்களின் வரலாறாக இருந்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள்

கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற கே.பியின் குற்றச்சாட்டு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009 மே மாதம் 18ம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகிறோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக் கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர் நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்சே அரசு செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத் தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகிறது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்சே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்து கொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித் திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன்.

இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரச படைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப் போவதுமில்லை.

அவ்வகையில் பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக் கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணை போகிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணை போகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நார்வே-நெடியவன் ஜாமீனில் விடுதலை:

இந் நிலையில் நார்வே நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரின் பேரில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸாரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், ஜூன் 1ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவைக் கொல்ல முயன்றதாக புகார்-அபாண்டமான குற்றச்சாட்டு என புலிகள் மறுப்பு

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’+2 தேர்ச்சி பெற்றவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு தகுதி உடனடியாக கிடைக்க வெண்டும் என்பதால் மதிப்பெண் பட்டியல் பெற்ற உடனேயே வேலை வாய்ப்பு அலுவலகங்களை +2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் நாடுகின்றனர்.

அவ்வாறு தேர்ச்சி பெற்ற அனைவரும் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கால விரயம், போக்குவரத்து செலவு ஏற்பட்டு மாணவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

இனி மதிப்பெண் பட்டியல் பெறும் நாளிலேயே மாணவ, மாணவியர் பயிலுகின்ற பள்ளியிலேயே வேலை வாய்ப்பு வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளேன்.

மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளான 25.5.2011 அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து வேலை வாய்ப்பு பதிவு அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

பள்ளியின் ஆன்லைன் மூலமே வேலைவாய்ப்பு பதிவு : ஜெ. உத்தரவு

"தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்கும் வகையில், ஒவ்வொரு துறையிலும் அவசர தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்' என, தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில், அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையின் (கேபினட்) முதல் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஜார்ஜ் கோட்டையில் நேற்று நடந்தது. காலை 9.40 மணிக்கு துவங்கிய கூட்டம், 10.50 மணிக்கு முடிந்தது. இதில், 33 அமைச்சர்களும் பங்கேற்றனர்."தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை, எந்த தாமதமுமின்றி நிறைவேற்ற, ஒவ்வொரு துறை அமைச்சரும் பணியாற்ற வேண்டும். தங்கள் தொகுதிகளில் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

"இதை மனதில்கொண்டு அமைச்சர்கள் தங்கள் துறை செயலர்களுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுகளை தவிர்த்து விட்டு, ஆய்வுக் கூட்டங்களை வேகமாக முடித்து, அவரவர் துறை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்னைகளை தெரிந்து கொள்ள வேண்டும்' என்பன போன்ற உத்தரவுகளை அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் வழங்கினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றபோதிலும், முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவை கூட்டம் நடத்தியதால், தலைமைச் செயலக ஊழியர்கள் பலர் வேலைக்கு வந்திருந்தனர். அனைத்து துறைகளின் செயலர்களும் காலை 8 மணிக்கே தலைமைச் செயலகம் வந்திருந்தனர். கூட்டத்திற்கு பின் தங்கள் அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தியபின், அதிகாரிகள் மதியம் தான் வீட்டிற்கு சென்றனர்.

தேர்தல் வாக்குறுதிகளை முடிக்கும் வரை ஓய்வு கூடாது: முதல்வர் ஜெ., கண்டிப்பு

புதுவையில் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். புதுவை சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 17 தொகுதியிலும், அ.தி.மு.க. 10 தொகுதியிலும் போட்டியிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆனார்.

தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி வெற்றி பெற்றால் ரங்கசாமி முதல்- அமைச்சர் ஆவார் என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் ரங்கசாமி அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை உறுப்பினர் வி.எம்.சி. சிவகுமார் ஆதரவுடன் தனித்து ஆட்சி அமைக்கப் போவதாக அறிவித்தார். அ.தி.மு.க.வை மந்திரி சபையில் சேர்க்காமல் தனது கட்சி எம்.எல்.ஏக்களை மட்டுமே அமைச்சர்களாக நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

ரங்கசாமியின் இந்த செயலுக்கு தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூட்டணிக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனித்தே ஆட்சி என்று தன்னிச்சையாக புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதைப் பார்க்கும் போது, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற பழமொழி தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அ.தி.மு.கவுக்கு இழைத்திருக்கிறார். நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.

தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன். இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அ.தி.மு.க. மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அ.தி.மு.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர்.

அ.தி.மு.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. கழகக் கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ரங்கசாமிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமிக்கு தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி.

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அ.தி.மு.க.வின் ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும்.

நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்து வதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் ரங்கசாமி. கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது, ஆளும் கட்சியினால் ஏற்படும் அவதியை எடுத்துக் காட்டுவது, ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் நாட்டை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது, உரிமையும், உடமையும் பறிபோகும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும் போது அதனைக் கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது போன்றவை தான் எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் என்று பேரறிஞர் அண்ணா கூறியதற்கிணங்க, ஓர் ஆக்கப் பூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. புதுச்சேரியில் செயல்படும் என்பதையும், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அ.தி. மு.க. தொடர்ந்து பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனியாக ஆட்சி அமைப்பு: புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஜெயலலிதா கண்டனம்; கூட்டணிக்கு துரோகம் செய்துவிட்டார்

நேற்று மாலை நிலவரப்படி, 14 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் தான், பெரும்பாலும் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (மனிதநேய மக்கள் கட்சி), குன்னூர் (இந்திய கம்யூ.,), திருச்சுழி (அகில இந்திய மூவேந்தர் முன்னணி), பத்மநாபபுரம் (தே.மு.தி.க.,), பாளையங்கோட்டை (மார்க்சிஸ்ட்), கம்பம் (தே.மு.தி.க.,), திருவாடானை (தே.மு.தி.க.,) ஆகிய ஏழு தொகுதிகள், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல, அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளையே தி.மு.க., கைப்பற்றி உள்ளது.

அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தொகுதிகளில் தி.மு.க., வெற்றி

சென்னை: அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் விவரம்:

அ.தி.மு.க

ஸ்ரீரங்கம்
ராசிபுரம்
கோவை தெற்கு
அறந்தாங்கி
பழனி
நாகப்பட்டினம்
செய்யூர்
சீர்காழி
குளித்தலை
வீரபாண்டி
கன்னியாகுமரி
கிருஷ்ணராயபுரம்
கிணத்துக்கடவு
தொண்டாமுத்தூர்
அம்பாசமுத்திரம்
தஞ்சை
மதுராந்தகம்
ஒரத்தநாடு
பல்லடம்
உடுமலை
உளுந்தூர் பேட்டை
சங்ககிரி
பூந்தமல்லி
சைதாப்பேட்டை
தியாகராயநகர்
சாத்தூர்
பொள்ளாச்சி
ஈரோடுமேற்கு
ஆலங்குடி
கடையநல்லூர்
நாகர்கோவில்
சோழவந்தான்
அந்தியூர்
பெருந்துறை
மொடக்குறிச்சி
மணப்பாறை
ஊட்டி
விராலிமலை
மேட்டுப்பாளையம்
பூம்புகார்
ஏற்காடு
திருச்சி கிழக்கு
உத்திரமேரூர்
சிவகாசி
ராஜபாளையம்
திருப்பூர் வடக்கு
தாராபுரம்
அவினாசி
துறைமுகம்
ராயபுரம்
ஆர்.கே.நகர்
காஞ்சீபுரம்
கரூர்
நாமக்கல்
சேலம் மேற்கு
குமாரபாளையம்
ஆத்தூர்
திருச்சி மேற்கு
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர்
கீழ்பெண்ணாத்தூர்
ஆற்காடு
ராணிப்பேட்டை
திண்டிவனம்
திருமயம்
மயிலம்
நத்தம்
தூத்துக்குடி
விளாத்திகுளம்
ஸ்ரீவைகுண்டம்
பவானி
கந்தர்வகோட்டை
கோபி
வில்லிவாக்கம்
மாதவரம்
காங்கேயம்
பல்லாவரம்
திரு.வி.க.நகர்
மயிலாப்பூர்
ஆயிரம்விளக்கு
கவுண்டம் பாளையம்
புவனகிரி
வேதாரண்யம்
நன்னிலம்
இடைப்பாடி
போடிநாயக்கனூர்
ஓமலூர்
மடத்துக்குளம்
திருவையாறு
கோவில்பட்டி
அருப்புக்கோட்டை
மணச்சநல்லூர்
தாம்பரம்
வாசுதேவநல்லூர்
கள்ளக்குறிச்சி
திருமங்கலம்
பாலக்கோடு
முசிறி
சங்கரன்கோவில்
பாபநாசம்
நெய்வேலி
விழுப்புரம்
முதுகுளத்தூர்
பரமக்குடி
துறையூர்
சோழிங்கநல்லூர்
பொன்னேரி
திருவொற்றியூர்
அண்ணாநகர்
ஆவடி
ஸ்ரீபெரும்புதூர்
திருப்போரூர்
கோவை வடக்கு
சிங்காநல்லூர்
மதுரைவடக்கு
ஆலங்குளம்
வேலூர்
காட்டுமன்னார் கோவில்
பாப்பி ரெட்டிபட்டி
வாணியம்பாடி
திருவள்ளூர்
வேளச்சேரி
திருப்பத்தூர்
மதுரை மேற்கு
சங்கராபுரம்
வானூர்
ஊத்தங்கரை
சேலம் தெற்கு
கடலூர்
அரக்கோணம்
மதுரை கிழக்கு
அரியலூர்
பெரம்பலூர்
கிருஷ்ணகிரி
பர்கூர்
அம்பத்தூர்
குறிஞ்சிப்பாடி
ஆண்டிப்பட்டி
நெல்லை
மேலூர்
வேடசந்தூர்
மானாமதுரை
கலசப்பாக்கம்
போளூர்
வந்தவாசி
செய்யாறு
காரைக்குடி
தே.மு.தி.க

ரிஷிவந்தியம்
திருக்கோவிலூர்
விருதுநகர்
செங்கல்பட்டு
திருச்செங்கோடு
விருகம்பாக்கம்
ஈரோடுகிழக்கு
செங்கம்
கெங்கவல்லி
மதுரைமத்தி
சேந்தமங்கலம்
ஆலந்தூர்
திட்டக்குடி
எழும்பூர்
ராதாபுரம்
திருப்பரங்குன்றம்
பண்ருட்டி
மயிலாடுதுறை
திருத்தணி
தர்மபுரி
பேராவூரணி
திருவெறும்பூர்
மேட்டூர்
சேலம் வடக்கு
சோளிங்கர்
விருத்தாசலம்
ஆரணி
சிபிஎம்

கீழ்வேளூர்
மதுரை தெற்கு
பெரம்பூர்
திருப்பூர் தெற்கு
மதுரவாயல்
பெரியகுளம்
திண்டுக்கல்
சிதம்பரம்
அரூர்
விக்கிரவாண்டி
சிபிஐ

திருத்துறைப்பூண்டி
வால்பாறை
குடியாத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
பவானிசாகர்
புதுக்கோட்டை
சிவகங்கை
பென்னாகரம்
தளி
மனிதநேய மக்கள் கட்சி

ராமநாதபுரம்
ஆம்பூர்
புதியதமிழகம்

ஓட்டப்பிடாரம்
நிலக்கோட்டை
சமத்துவ மக்கள் கட்சி

தென்காசி
நாங்குனேரி
பார்வர்டுபிளாக்

உசிலம்பட்டி
இந்திய குடியரசு கட்சி

கே.வி.குப்பம்
கொங்கு இளைஞர் பேரவை

பரமத்தி வேலூர்

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்

* சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் கமிஷன், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக நடவடிக்கை எடுத்ததாக, தி.மு.க., தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததே?

பாரபட்சமில்லாமல் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றது. இருந்தாலும், ஆளுங்கட்சியினரின் பணப் பட்டுவாடாவை முழுமையாக தேர்தல் கமிஷனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினரின் பேச்சை கேட்டு நடப்பதை, தேர்தல் கமிஷன் தடுத்து விட்டது. தேர்தல் பணியில் வெளிமாநில அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்ததால், ஆளுங்கட்சியின் அத்துமீறல் ஓரளவிற்கு தடுக்கப்பட்டது. ஓட்டுப் பதிவிற்கு முன், வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்'களை தேர்தல் கமிஷன் வழங்கியது பாராட்டுக்குரிய நடவடிக்கை. இந்த காரணங்களால் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்தது.

* உங்கள் கட்சி சார்பில் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

ஆளுங்கட்சி முறைகேடு குறித்து பல கட்டத்தில், தேர்தல் கமிஷனின் உதவியை நாங்கள் நாடினோம்; அவர்களும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தனர். தமிழகம் முழுவதும் முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், சேகர்பாபு மூன்று சக்கர வண்டிகளை கொடுத்த போது, பிடித்து கொடுத்தோம். அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. கொளத்தூரில், பணம் கொடுப்பதை புகாராக தெரிவித்தோம்; ஒன்றரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. திருச்சி மாவட்டத்தில், அமைச்சர் நேரு தொகுதியில், ஐந்தரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. கீழ்பென்னத்தூரில், 15 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இப்படி பரவலாக தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளால் பல இடங்களில் பெருமளவு பணம் பிடிபட்டது.

* கடைசி நேரத்தில், ம.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பு செய்ததால், தேர்தலில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

ம.தி.மு.க.,வை நாங்கள் விரோதமாக நினைக்கவில்லை. ஆகவே, எங்கள் மேல் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. எங்களுக்கு எதிராக அவர்கள் தேர்தல் பணி செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் பிரச்னையில், அ.தி.மு.க., எடுத்த நிலைப்பாட்டினால், ம.தி.மு.க.,வின் ஓட்டுகள் எங்கள் அணிக்கு கிடைத்துள்ளது.

* "ஸ்பெக்ட்ரம்' ஊழல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது; அவர் கைது செய்யப்படுவாரா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் போது, கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 80 பக்கம் கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது, தேர்தல் பிரசாரம் நடந்தது. அப்போது கனிமொழி பெயர் சேர்த்திருந்தால், தேர்தல் பிரசாரம் பாதிக்கும் என்பதால், பெயர் சேர்க்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், "சதி செய்துள்ளார்' என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இணை கூட்டாளியாக, கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, ராஜாவை கைது செய்தது போல், அவர் கூட்டாளியையும் கைது செய்ய வேண்டும்.

* ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு அறிக்கை தாக்கலின் போது, பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதை ராஜ்யசபா, எம்.பி.,யாக எப்படி பார்க்கிறீர்கள்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும், அதனால் ஏற்பட்ட இழப்பு குறித்தும், ஓராண்டாக பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தி வந்தது. பொதுக்கணக்கு குழு கண்டறிந்த உண்மைகளை அறிக்கையாக தயாரித்து, அதை சபாநாயகரிடம் தருவதற்கு குழு தயாராக இருந்தது. பொதுக்கணக்கு குழு தலைவர் முரளிமனோகர் ஜோஷி இந்த அறிக்கையை தாக்கல் செய்த போது, காங்கிரஸ், தி.மு.க., எம்.பி.,க்கள் தகராறு செய்தனர். பார்லிமென்ட் வரலாற்றில், இதுவரை காணாத வகையில் கூச்சல், குழப்பம் நிலவியது. கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு, முரளிமனோகர் ஜோஷி புறப்பட்டு செல்லுமளவுக்கு, நிலைமை மோசமாக இருந்துள்ளது. அதன் பிறகு, "நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம்' என்று கூறி, பொதுக்கணக்கு குழுவின் இடைக்கால தலைவராக, சைபுதீன் சோசை நியமித்து, அறிக்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினர். பொதுக்கணக்கு குழுவிற்கு லோக்சபா உறுப்பினர் தான் தலைவராக இருக்க முடியும்; எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தான் தலைவராக வர முடியும். இந்த விவரங்கள் தெரிந்திருந்தும், ஊழலை மறைக்கும் நோக்குடன் விதிமுறைகளை மீறி செயல்பட்டு, பார்லிமென்ட் நெறிமுறைகளுக்கு இழுக்கு ஏற்படுத்தினர். நல்லவேளையாக, மீண்டும் ஜோஷி தலைவராக்கப்பட்டுள்ளார். இனி அடுத்தடுத்து ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த உண்மைகள் வெளிவரும்.

* சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

விலைவாசி உயர்வு, அதிகார பீடத்தில் லஞ்ச லாவண்யம், குடும்ப ஆட்சி, ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, பல காரணங்களால், தமிழக மக்கள் இந்த ஆட்சி எப்போது தொலையும் என காத்திருந்தனர். தமிழகத்தில் திறம்பட ஆட்சி செய்வதற்கு, "அம்மா' தான் தகுதியானவர் என்று பொதுமக்கள் முடிவு செய்து தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.

* சமீபத்தில் வெளியான தனியார், "டிவி' கருத்துக் கணிப்பு, தி.மு.க.,விற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளதே?

கனிமொழி கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளி போட வேண்டுமென்பதற்காக, தி.மு.க.,வே இதுபோன்ற கருத்துக் கணிப்பை வெளியிட வைத்துள்ளது.

* தேர்தல் முடிவில், அ.தி.மு.க.,விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமையுமா?

அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பில்லை. "அம்மா' தலைமையில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைவது உறுதி. எங்களது கூட்டணிக் கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

* அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் மீது முதல்வர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளாரே?

தோல்வி பயத்தின் விளிம்பில் முதல்வர் நிற்கிறார். அதனால், அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். சட்டப்படி, அ.தி.மு.க., வழக்குகளை சந்திக்கும்.

நா.பாலகங்கா, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு இணைச் செயலர்

கனிமொழியை காப்பாற்ற கருத்துக் கணிப்பு வெளியானது: நா.பாலகங்கா

தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்பட்சத்தில், தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார். சொல் பேச்சு கேட்கும் கட்சிகளை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை கழற்றி விடும் முடிவில் உள்ள அவர், சீனியர் மாவட்ட செயலர்களுக்கு, இம்முறை அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2006 வரை ஆட்சிக்கட்டிலில் இருந்த அ.தி.மு.க., வுக்கு, இம்முறை மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர். தி.மு.க., அரசு மீதான குற்றச்சாட்டுக்கள், அ.தி.மு.க.,வின் கூட்டணி பலம் ஆகியவை அவர்களுக்கு வெற்றியை தேடித்தரலாம். சிறு, குறு கட்சிகளை சேர்த்துக் கொண்டு, சட்டசபை தேர்தலில் களம் கண்ட ஜெயலலிதா, "வெற்றி நமதே' என்ற நம்பிக்கையில் உள்ளார்.தே.மு.தி.க., வைப் பொறுத்தமட்டில் கூட்டணியில் இருந்தாலும், அது பெயரளவுக்கு மட்டுமே என அ.தி.மு.க.,வினர் கூறிவருகின்றனர். அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்போது, தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கழற்றி விட்டு, சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓய்வுக்காக கோடநாடு சென்றுள்ள அவர், ஆட்சி அமைப்பது, அமைச்சர் பட்டியல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.தி.மு.க.,வை காட்டிலும், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச் சரவை விசாலமாக இருக்கும். 35 பேர் வரை அமைச்சர் பட்டியலில் இடம் பெறக்கூடும். மாநில நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மாவட்ட செயலர்களில், சீனியர், எந்தவித புகாருக்கும் இடம் தராமல், கட்சி தாவாமல், ஒதுக்கிய தொகுதிகளில் வெற்றிகளை தேடித்தந்தவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

தனித்து ஆட்சி அமைக்க அ.தி.மு.க., ஆலோசனை

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சென்னை கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அப்போது, ஓட்டு எண்ணும் இடங்களில் தற்போது போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்ததாக பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சென்னை கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அப்போது, ஓட்டு எண்ணும் இடங்களில் தற்போது போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்ததாக பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோத்தகிரி : இரண்டு வாரங்கள் ஓய்வெடுப்பதற்காக, அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா, இன்று கோடநாடு வருகிறார். சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது வரை படு "பிஸி'யாக இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, 19 நாட்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.
தேர்தல் அறிவிப்பு வெளிவர இன்னும் 24 நாட்கள் உள்ள நிலையில், ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக இன்று, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு வருகிறார். சென்னையில் இருந்து இன்று காலை 11.00 மணிக்கு, விமானத்தில் கோவை வரும் ஜெயலலிதா, அங்கிருந்து, பகல் 1.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு வருகிறார். எஸ்டேட்டில் அமைக்கப்பட்டுள்ள, "ஹெலிபேடில்' இறங்கி, 2.15 மணிக்கு பங்களாவுக்குள் செல்கிறார்.
எஸ்டேட் நுழைவாயிலில் அவருக்கு அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில், வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இரண்டு வாரங்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ள ஜெயலலிதா, அங்கிருந்தபடியே, கட்சிப் பணிகளையும் கவனிக்கிறார். ஓட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும் நிலையில், மே 10ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா இன்று கோடநாடு வருகை

சென்னை: ""அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளரை கொலை செய்ய முயற்சி நடப்பதால், அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க, காவல் துறைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும்,'' என, ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தலின்போது, தி.மு.க.,வினரின் தில்லு முல்லுகளையும், முறைகேடுகளையும் சுட்டிக் காட்டியதற்காக, அ.தி.மு.க.,வினர் மீதும், கூட்டணி கட்சியினர் மீதும், தினமும் கொடூர தாக்குல்கள் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க.,வுக்கு எதிராக மக்கள் ஓட்டு போடுகின்ற தகவல் தெரிந்ததும், அ.தி.மு.க.,வினர் மீதும், பொதுமக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தினர். இதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சேதுபதி, தியாகராஜன் படுகாயம் அடைந்தனர். திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட, பொன்மார் பகுதி கிளை செயலர் பிரேம்நாத் வீட்டை, தி.மு.க.,வினர் அடித்து நொறுக்கியதுடன், பிரேம்நாத்தையும் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனை கொலை செய்ய, தி.மு.க., வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கென நியமிக்கப்பட்ட கூலிப்படை, தொகுதிக்குள் நடமாடி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

பழனிச்சாமி, பண பலம், படை பலம், அதிகார பலம் கொண்டவர் என்பதால், அ.தி.மு.க., வேட்பாளருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க காவல் துறைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் தி.மு.க.,வினரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்யவும், காவல் துறைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெ., தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளரை கொலை செய்ய திட்டம்: ஜெ., புகார்

சென்னை: ""தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி, நேற்று கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

* நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் பற்றி உங்கள் கருத்து என்ன?

தேர்தல் கமிஷனின் சிறப்பான நடவடிக்கைகளால், தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சில சம்பவங்களை தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

* ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல; பல்வேறு ஊழல்களையும் பொதுமக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர்.

* தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

மே 13ம் தேதி வரை காத்திருங்கள். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஜெ., கோரிக்கை: "அனைத்து ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரை பணியில் அமர்த்த, உடனடியாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. இந்த தேர்தலில் பலவிதமான முறைகேடுகளில் ஆளும் தி.மு.க., கூட்டணியினர் ஈடுபட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சில அசம்பாவிதங்களைத் தவிர தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்திய இந்திய தேர்தல் கமிஷனுக்கும் எனது பாராட்டு மற்றும் நன்றி. ஓட்டுப்பதிவு முடிந்து விட்டாலும், ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறவுள்ளது. அதுவரை ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது இந்திய தேர்தல் கமிஷனின் கடமை. இதை நிறைவேற்றும்விதமாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அனைத்து ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும், கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக போலீசார் மட்டுமே பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி, கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், பல்வேறு இடைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல் ஆகியவற்றின் போது தி.மு.க.,வினரால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு முறைகேடுகளையும், அதற்கு உறுதுணையாக தமிழக காவல் துறை செயல்பட்டதையும் கருத்தில் கொண்டு, அனைத்து ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரை பணியில் அமர்த்த, தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் தி.மு.க.,வினர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுகின்றனரா? என்பதை கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சி: ஜெயலலிதா பேட்டி

சென்னை : ""எவ்வளவு பணத்தை கொட்டினாலும் மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது,'' என, ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர் பழ.கருப்பையா (துறைமுகம்), ஜெயக்குமார் (ராயபுரம்), குப்பன் (திருவொற்றியூர்), வெற்றிவேல் (ஆர்.கே.நகர்), நீலகண்டன் (திரு.வி.க.,நகர்), மற்றும் பெரம்பூர் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சவுந்தரராஜனை ஆதரித்து ஜெயலலிதா நேற்று வடசென்னை முழுவதும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன், உங்கள் முன் வந்துள்ளேன். ஒரு குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களை நாடி வந்துள்ளேன். கடுமையான மின்வெட்டு, மணல் கொள்ளை, ரவுடியிசம், தமிழகத்தில் யாரும் எந்த தொழிலையும் சுதந்திரமாக செய்ய முடியாத நிலை, கள்ளச் சாராயம், கள்ள லாட்டரி என, அனைத்து சமூக விரோத தொழில்களும், தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது.இந்த அவலங்களிலிருந்து, இந்த தேர்தல் மூலம் தமிழகத்தை மக்கள் மீட்டெடுக்க வேண்டும். இப்போது மீட்க முடியாவிட்டால், எப்போதும் மீட்க முடியாது என்று நல்லோரின் மனசாட்சிகள் சொல்கின்றன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களுக்கு, இந்த தேர்தலில் தகுந்த தண்டனை தர வேண்டும். தி.மு.க.,வினரின் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

தமிழகத்தை ஒரு லட்சம் கோடி கடனுக்குள் சிக்கவைத்தது தான் கருணாநிதியின் சாதனை. மக்கள் பணத்தை பேராசை கொண்ட கும்பல் சுரண்டுகிறது. இதை தடுக்க தி.மு.க.,கூட்டணியினர் போட்டியிடும், அனைத்து இடங்களிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில், அவர்களை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத ஊழலை தி.மு.க.,வினர் நிகழ்த்தியுள்ளனர். ஊழலுக்கு நிகர் ஊழல் செய்பவர் கருணாநிதி. அவர் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என, சர்க்காரியா கமிஷன் கூறியது.

தேர்தலில் தோற்பது உறுதி என, தெரிந்து கொண்ட தி.மு.க.,வினர் 234 தொகுதிகளிலும் மழையாக பணத்தை கொட்டியுள்ளனர். இந்த பணமழைக்கு அ.தி.மு.க., வேட்பாளர்களும், நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் மலைத்து போகவோ, கலக்கமடையவோ வேண்டாம். எவ்வளவு பணத்தை கொட்டினாலும், மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை இம்முறை யாரும் தட்டிப்பறிக்க முடியாது.அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். மீன் பிடிக்க தடைகாலத்தில் 2,000 ரூபாய் உதவித்தொகை, மீன்பிடிக்க இயலாத மழைக்கால உதவியாக 4,000 ரூபாய் வழங்கப்படும். மீனவர்கள் நலன் காக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்த வரைமுறைகளை ஆய்வு செய்து முடிவெடுக்க தனியே குழு அமைக்கப்படும். இன்னும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தி.மு.க., மிரட்டல்: ஜெ.,திடுக் : "மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தி.மு.க.,வினரால் மிரட்டப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினரின் மிரட்டலால் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தால், ஒரு வித பதட்டம் நிலவுகிறது. அவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் பணியாற்றுவர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தேர்தல் கமிஷன் தர வேண்டும்' என ஜெயலலிதா பேசினார்.

வடிவுடையம்மனை கும்பிட்ட ஜெ., : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம் திருவொற்றியூர் வடிவுடையம்மன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இங்கு முக்கிய நபர்கள் வந்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். டான்சி வழக்கில் அவரை சுப்ரீம் கோர்ட் விடுவித்த பத்தாவது நிமிடத்தில், வடிவுடையம்மன் கோவிலுக்கு பறந்து வந்து, அம்மனை தரிசித்தார். "கடவுளுக்கு நன்றி' என, அப்போது நிருபர்களிடம் கூறினார்.

இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, தேரடியில் வடிவுடையம்மன் கோவிலைப் பார்த்தவாறு பிரசாரம் செய்தார். இறுதியில், அம்மனை கையெடுத்து கும்பிட்டு தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெறும் அணி தான், ஆட்சியைப் பிடிக்கும் என்பது நம்பிக்கை; இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது என்பதால், ஜெ., அம்மனை வழிபட்டு பிரசாரம் செய்தது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது: ஜெயலலிதா உறுதி

கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த அதிமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக்,

கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின்

வேட்பாளர்களை கடத்தி, சதி செய்த அதிமுக மீது நடவடிக்கை எடுக்காமல், அதிமுகவுக்கு அதரவாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த அதிமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பொதுமக்கள் மத்தியில் அதிமுகவுக்கு வெறுப்பு வந்துள்ளது. வாக்குகள் அதிமுகவுக்கு விழாது. அதிமுகவுக்கு வெற்றியே கிடையாது என்றார்.

அதிமுகவுக்கு வெற்றியே கிடையாது: கார்த்திக்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும் அவதூறாக பேசிய குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளி்க்குமாறு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்க இன்னும் 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரசாரக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தாரை தாக்கிப் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து திமுக தேர்தல் குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. மேலும் கருணாநிதி, அவரது குடும்பத்தார் பற்றி தவறான பிரசாரம் செய்யும் ஜெயா டிவி, ஜெயா பிளஸ் மற்றும் கேப்டன் டிவியை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் திமுக கேட்டுக் கொண்டது.

அதன்பேரில் இந்த புகார் குறித்து நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் நோட்டீசுக்கு பதில் அளிக்க அவர்கள் இருவரும் இன்னும் 2 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாக பிரவீன் குமார் தெரிவித்தார்.

அவதூறு புகார்: தேர்தல் ஆணையத்திடம் ஜெ., கேப்டன் 2 நாள் அவகாசம்

கன்னியாகுமரி: இந்தத் தேர்தலில் விஜய் பிரச்சாரத்துக்கு வரமாட்டார். அதேபோல, அவர் இப்போதைக்கு அரசியலுக்கும் வரமாட்டார் என இயக்குநர் எஸ் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்க நிறுவனரான சந்திரசேகரன் குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதற்காக கன்னியாகுமரி வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எங்கள் இயக்க தொண்டர்கள் அசுர வேகத்தில் அ.தி.மு.க. அணிக்கு வேலை செய்கிறார்கள்.

ஆனால், தற்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் வாய்ப்பு இல்லை. அதேபோல விஜய் அரசியலுக்கு வர மாட்டார். விஜய் அரசியலுக்கு வருவதற்காக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக தான் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் விஜய் நேரடிப் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமாக இருக்கிறது. நான் தி.மு.க. ஆதரவாளராக இருந்தேன். எனக்கே வெறுப்பு வந்து விட்டது.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல், விலைவாசி உயர்வு, மின் தடை ஆகியவை மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

வாரிசுகள் அந்தந்த தொழிலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அந்த தொழிலையே கபளீகரம் செய்வது தான் தவறு.

விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் ஜெயசீலனை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இது அரசியல் சூழ்ச்சி. ஜெயசீலன் இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டதால் அவரை எங்கள் இயக்கத்தில் இருந்து நீக்கி விட்டோம்...", என்றார்.

அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு ஏன்? - எஸ்ஏ சந்திரசேகரன் விளக்கம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோபி செட்டிப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இடைவிடாத மின்வெட்டால் தொழில் வளர்ச்சியும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவறான ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பேரலை வீசுகிறது. தி.மு.க. மீது சூறாவளியாக மக்களின் கோபம் திரும்பியுள்ளது. என்னுடைய ஆட்சி காலத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தேன். ஆனால் தற்போது கள்ளச்சந்தையில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வைகோவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரை கூட்டணியில் சேர்க்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டேன். 12 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்தேன். ஆனால் அவர் அதிகம் எதிர்பார்த்ததால் அவருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.

நான் ஏற்கனவே கூறியதை போல அவர் மீதான மதிப்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் 12 வழக்குளில் நான் குற்றமற்றவர் என்று நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. அதனால் மேம்பாக்காக என் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதை மறுக்கிறேன். நான் ஊழல் செய்யவில்லை. என் கட்சியும் ஊழல் செய்ய வில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னாஹசாரேவுக்கு என் முழு ஆதரவு உண்டு.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தேவை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அனைத்து சட்டங்களையும் நிலைநாட்ட மத்தியில் ஒரு வலிமையான அரசும், ஒரு வலிமையான பிரதமரும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள பிரதமர் மவுனமாக இருக்கிறார். எதையும் செயல்படுத்த முடியாமல் செயலற்று போய் உள்ளார்.

தேச நலனில் அக்கறை இல்லாமல் உள்ளார். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி தேச பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் மத்தியில் நமக்கு ஒரு வலிமையான அரசும் வலிமையான பிரதமரும் தேவை.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

அதிக தொகுதி கொடுக்க முடியவில்லை: வைகோவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தேன்; ஜெயலலிதா பேட்டி

சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிப் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பிரசார மேடை தவறாது முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தார் பற்றி பேசி வருகின்றனர்.

கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று ஜெயலலிதா கூட்டந்தோறும் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திமுக தேர்தல் குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. திமுக புகாரின்பேரில் அவதூறு பேச்சுகள் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் விஜயகாந்த் மதுரை அருகே மேலூரில் பிரசாரம் செய்த போது முதல்வர் கருணாநிதி, அவரது குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாக பேசியதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாகதான் விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

நேற்று இரவு சிதம்பரம் வந்த விஜயகாந்த், அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கினார். அப்போது புவனகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.கல்யாணம், தேர்தல் ஆணையத்தின் விளக்கம் கோரிய நோட்டீஸை விஜயகாந்திடம் அளிக்க வந்தார்.

அதை தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளங்கோ பெற்றுக் கொண்டார். இன்று மாலைக்குள் பதிலளிக்குமாறு விஜயகாந்த்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேட்பாளரை அடித்த விஜயகாந்த்-எஸ்.பிக்கு நோட்டீஸ்

இதற்கிடையே, தர்மபுரியில் தேமுதிக வேட்பாளரை கட்சித் தலைவர் விஜயகாந்த் அடித்தது குறித்து மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் வந்துள்ளது. இதுகுறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது கட்சி வேட்பாளர் பெயரை தவறாக கூறி விட்டார். இதை வேட்பாளர் சுட்டிக் காட்டியபோது கோபத்தில் அவரை அடித்து விட்டார் என்று சர்ச்சை எழுந்தது. இதை திமுக தரப்பு ஒரு பிரச்சார டாப்பிக்காக மாற்றி ஊர் முழுக்க பிரசாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மணிமேகலை கண்ணன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது புகாருடன் வேட்பாளரை விஜயகாந்த் அடித்தது தொடர்பான பத்திரிக்கைச் செய்திகளையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

இதை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலபதி மூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் ஏ.ஆர்.செல்வகுமார், கே.மாரியப்பன், எஸ்.பரமசிவன் ஆகியோர் விசாரித்தனர்.

அதன் பின்னர், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அவதூறுப் பேச்சு: ஜெ., விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

முக நூல்

Popular Posts