background img

புதிய வரவு

அ.இ.அ.தி.மு.க இ‌ன்று முத‌ல் விண்ணப்ப‌ம் ‌வி‌நியோக‌ம்

தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட விரும்பு‌கிறவ‌ர்களு‌க்கு அ.இ.அ.‌தி.மு.க. இ‌ன்று விண்ணப்பங்க‌ளை ‌‌வி‌நியோக‌ம் செ‌ய்‌கிறது.

இது தொட‌ர்பாக க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழகம் உள்பட மூன்று மாநிலங்களிலும் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சியினர் வரு‌ம் 5ஆம் தேதி (இ‌ன்று) முதல் 18ஆம் தேதி மதியம் 2 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விற்பனை செய்யப்படும். தமிழக சட்டப் பேரவை தேர்தல் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரம், புதுச்சேரி சட்டப் பேரவை தேர்தல் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 5 ஆயிரம், கேரளம் சட்டப் பேரவை தேர்தல் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.1,000 என கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளவர்கள் இந்த கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts