background img

புதிய வரவு

மெரீனா கடலில் மூழ்கிய 3 மாணவர்களும் பலி; 2 பேர் உடல் கரை ஒதுங்கியது


மெரீனா கடலில் மூழ்கிய 3 மாணவர்களும் பலி;
 
 2 பேர் உடல் கரை ஒதுங்கியதுசென்னை கே.கே.நகர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர்கள் 11 பேர் நேற்று மதியம் மெரீனா கடற்கரைக்கு வந்தனர். பிளஸ்-2 வரை ஒன்றாக படித்த இவர்கள் அனைவரும் தற்போது வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அடிக்கடி இவர்கள் ஒன்றாக கூடி மகிழ்வது வழக்கம்.


நேற்றும் இதேபோல மெரீனா கடற்கரையில் அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அண்ணா சமாதிக்கு பின்புறம் கடலில் இறங்கி அனைவரும் குளித்தனர். அப்போது ராம்குமார், எபனேசர், வினோத்குமார், அபிஷேக் ஆகிய 4 மாணவர்களை ராட்சத அலை இழுத்துச் சென்றது. அவர்கள் கடலில் மூழ்கினர்.

இவர்களில் ராம்குமாரை மட்டும் அவரது நண்பர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று கடலில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் நேற்று இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். ஆனால் மாணவர்களை மீட்க முடியவில்லை.இன்று காலையில் திருவான்மியூர் கடற்கரையில் அபிஷேக்கின் உடலும், நீலாங்கரை கடற்கரையில் எபனேசர் உடலும் ஒதுங்கியது.

போலீசார் உடல்களை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மெரீனா கடற்கரைக்கு வந்த மாணவர்கள் அனைவரும் சிட்டி சென்டருக்கு செல்வதாக கூறிவிட்டு தங்களது வீடுகளில் பொய் சொல்லி விட்டு வந்துள்ளனர்.

கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடத்தில் இறங்கி குளித்ததால் விலைமதிக்க முடியாத 3 உயிர்கள் பறிபோய் உள்ளது. மெரீனா கடலில் குளித்து உயிரை தொலைப்பவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்தான். அளவுக்கு மீறிய உற்சாகமும், ஜாலியுமே அவர்களது உயிரை குடித்து விடுகிறது.

சென்னையில் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் நீண்ட நேரம் வெளியில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எல்லை மீறிய மகிழ்ச்சியால் இவர்கள் எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை. தங்களை நம்பி, தாயும் தந்தையும் வீடுகளில் காத்திருப்பார்கள், பத்திரமாக வீடுபோய் சேரவேண்டும் என்று எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டால் மட்டுமே இதுபோன்ற உயிர் பலிகளை தடுக்க முடியும்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts