நாடு முழுவதுமுள்ள அனைத்து குடிமக்களுக்கும் தபால் அலுவலகம் மூலமாக சிறப்பு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்கவும், அரசு மானியத்துடன் கூடிய திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களை பலர் முறைகேடாக அனுபவிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் தபால் துறைக்கும்,இந்திய சிறப்பு அடையாள எண் ஆணையத்துக்கும் இடையே, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி,வரும் மார்ச் மாதத்துக்குள் தபால் அலுவலகங்கள் மூலமாக சுமார் 1 கோடி பேருக்கு அடையாள எண் கொண்ட கடிதங்கள், அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த நிதியாண்டில்,சுமார் 12 கோடி பேருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment