காமெடி நடிகர் சந்தானம் ஜீவாவுடன் இணைந்து நடித்திருக்கும் சிங்கம் புலி படத்தில் 12வித்யாசமான வேடங்களில் நடித்துள்ளார்.
சில்வர் லைன் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில், சாய்ரமணி இயக்கியிருக்கும் படம் "சிங்கம்புலி". இப்படத்தில் முதன்முறையாக ஜீவா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஜீவாவுடன் திவ்யா ஸ்பந்தன், சந்தானம், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காமெடியில் தனக்கென்று ஒரு பாணியை வைத்து கவுண்டமணியை போன்று லொள்ளு பண்ணிவரும் சந்தானம், இந்தபடத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.ராஜேந்தர் என 12 வித்யாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறாராம். இவருடன் ஜீவா சேர்ந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். சந்தானம் 12வித்யாசமான கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. இப்படம் பிப்.11ம் தேதி திரைக்கு வருகிறது.

0 comments :
Post a Comment