தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
காலை 9.30 மணிக்கு கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த காங்கிரஸ் உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படுகிறது.
நாளை 2011 - 2012 ஆம் ஆண்டிற்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அவைத் தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் நடக்க உள்ள அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

0 comments :
Post a Comment