பல நாட்கள் முதல் நிலை ஆசனத்தை பயின்ற பின் இரண்டாவது நிலையினை ஆரம்பிக்கவும். முதலில் பரிபூர்ண நிலையினை எய்த முடியாது. கால்களையும் இந்த அளவிற்கு விரிக்க இயலாது. முதலில் முடிந்த அளவு செய்து மூச்சை வெளியே விட்டு உங்களால் முடிந்தளவு கீழே குனியுங்கள்.
ஒரு மாத காலம் காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து பயிற்சி செய்தீர்களேயானால் ஆசனம் சித்தியாகும். மூச்சை வெளியே விட்டபடி கால்களை அகற்றி இரு கைகளால் கால் கட்டைவிரலை பிடித்தபடி மேல் நெஞ்சினை தரையில் படும்படி வைத்து தலையை படத்தில் கண்டபடி வைக்கவும். 20 எண்ணும் வரை இருந்து நிமிரும் போது மூச்சை இழுத்தபடியே நிமிரவும். 3 முதல் 5 முறை செய்யவும்.
பலன்கள்:
கால் தசைகள் பலம் பெறுகின்றன. முதுகெலும்புகள் நெகிழ்வு பெற்று முதுகு வலி போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மார்பு நான்கு விரிவடைந்து ஆழ்ந்த சுவாசம் கிடைப்பதால் இதயம் மகத்தான பலன் பெறுகின்றது.
0 comments :
Post a Comment