background img

புதிய வரவு

Showing posts with label 2003-08 were wrong. Show all posts

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை அண்மையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட கபில் சிபல், 2003 முதல் 08 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட அனைத்து ஸ்பெக்ட்ரம் முடிவுகளுமே தவறானவை என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு வரையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி மற்றும் 2008 ஆம் ஆண்டு வரையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் உரிம ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்ட முறைகள் மோசமாக இருந்ததாகவும், விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என்றும் விசாரணை ஆணையம் கண்டறிந்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் கபில் சிபல் மேலும் கூறினார்.

'அனைத்து ஸ்பெக்ட்ரம் முடிவுகளுமே தவறானது'

முக நூல்

Popular Posts